கல்முனைக்கு விஜயம் செய்த பெற்றோலிய வளத்துறை அமைச்சரும், பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேமஜயந்த கல்முனையில் அமைக்கப்பட்டுள்ள ஏ.எம்.அன்வர் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்விற்கு அமைச்சருடன் சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹனைஸ் பாறுக், ஸ்ரீ லங்கா மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட், கல்முனை மாநகர முதல்வர் செனட்டர் மசூர் மௌலானா, ஸ்ரீ லங்கா மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம்.எம். சலீம் உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment