இலங்கை யுத்தத்தில் விதவையான பெண்களை மையமாக வைத்து யாழினி என்ற குறும்படத்தை அவுஸ்திரேலிய தமிழர்கள் சார்லஸ் ராஜ் தயாரிக்க, ஆனந்த் இயக்கியுள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள யாழினி என்ற பெண் எப்படி விதவையானாள், அதற்கு பின்னால் நடந்தது என்ன என்பதை விளக்கும் வகையில் 30 நிமிட குறும்படம் எடுத்திருக்கிறோம். அடுத்து விடிவெள்ளி என்ற படத்தை கண்ணிவெடிகளை பற்றி எடுத்து வருகிறோம்.
இலங்கை தமிழர்கள் படும் இன்னல்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற படங்களை எடுத்து வருகிறோம். 25 வருடமாக நடந்து வரும் இலங்கை யுத்தம் குறித்து மிகவும் குறைந்த அளவே சினிமா படங்களாக வெளிவந்திருக்கின்றன.
இவை போதாது, இன்னும் உள்ள பல பிரச்சினைகள் குறித்து பலரும் சினிமாக்களாக எடுத்து உலகம் அறியச் செய்ய வேண்டும். நாங்கள் எடுக்கும் குறும்படங்களை உலகளவில் நடைபெறும் திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment