This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, December 18, 2011

உலகப் புகழ் சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கை சோகம் நிறைந்தது

« நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம் பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம் – ஆய்வு முடிவு » உலகப் புகழ் சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கை சோகம் நிறைந்ததுPublished December 19, 2011 மவுனப்பட காலத்திலேயே உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கியவர், சார்லி சாப்ளின். சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். அவர் நடித்த படங் களின் “விசிடி”கள் இன்றும் எல்லா நாடுகளிலும் விற்பனை ஆகின்றன.   சார்லி சாப்ளின் தெற்கு லண்டனில் 1889 ஏப்ரல் 16_ந் தேதி பிறந்தவர்.சார்லி சாப்ளின் பெற்றோர்கள் மேடைப் பாடகர்கள். ஆயினும் குடும்பம் வறுமையில் வாடியது. அதிகம் படிக்காத சார்லி சாப்ளின், ஐந்து வயதி லேயே மேடை நாடக ங்களில் நடிக்கத் தொடங் கினார். சார்லிக்கு 21 வயதான போது, நாடகக் குழு அமெரிக்கா சென்றது.அவரும் அமெரிக்கா போனார். 1913_ல் “கீ ஸ்டோன்” என்ற கம்பெனி தயாரித்த ஊமைப்படத்தில் முதன் முதலாக சாப்ளின் நடித்தார். படத்தின் பெயர் “மேக்கிங் எ லிவிங்”. அதில் அவர் வில்லனாக நடித்தார். அப்படம் வெற்றி பெறவில்லை. “கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ்” என்பது அவருடைய இரண்டாவது படம்.அதில்தான் அவர் காமெடி வேடத்தில் நடித்தார். தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை, சின்னத்தொப்பி, கையில் சிறு தடி _ இத்தகைய “மேக்கப்”புடன் தோன்றி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார். பின்னர் இத்தகைய வேடமே அவருக்கு “டிரேட் மார்க்” ஆகியது.வரிசையாக சார்லியின் வெற்றிப் படங்கள் வெளிவந்தன. ஒரே ஆண்டில் 35 படங்களில் நடித்தார். எல்லாமே வெற்றிப்படங்கள்தான்.   தி கிரேட் டிக்டேட்டர் (மாபெரும் சர்வாதிகாரி) என்ற படத்தில் ஹிட்லர் வேடத்தில் நடித்தார். 1916_ம் ஆண்டில், வாரம் 10 ஆயிரம் டாலர் சம்பளத்தில் ஒரு படக்கம்பெனியில் சேர்ந்தார்.படங்களுக்கு கதை, வசனம் எழுதி நடித்தார். பல படங்களை டைரக்ட் செய்தார். உலகப் புகழ் பெற்றார். 1919_ம் ஆண்டில் “யுனைட்டெட் ஆர் டிஸ்ட்ஸ்” என்ற பட நிறுவனத்தை, வேறு சிலருடன் சேர்ந்து கூட்டாகத் தொடங்கினார். படங்களைத் தயாரித்ததுடன், படங்களை விநியோகம் செய்வதிலும் இந்தக் கம்பெனி ஈடுபட்டது.1931_ல் அவர் நடித்த “சிட்டிலைட்ஸ்” என்ற படம் மிகப் புகழ் பெற்றது. மவுனப் படயுகம் முடிவடைந்து, பேசும் படங்கள் வரத் தொடங்கி யிருந்த காலகட்டத்தில் 1936_ம் ஆண்டு “மாடர்ன் டைம்ஸ்” என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். அப்படத்தில் மற்றவர்கள் பேசினாலும், சார்லி ஒரு வார்த்தை கூட பேச வில்லை.அப்படமும் மகத்தான வெற்றி பெற்றது. 1940_ம் ஆண்டு சாப்ளின் தயாரித்த “தி கிரேட் டிக்டேட்டர்” சர்வாதிகாரி ஹிட்லரை கேலி செய்து எடுக்கப்பட்ட படம். ஹிட்லர் வேடத்தில் சாப்ளின் பிரமாதமாக நடித்தார். அவர் பேசி நடித்த முதல் படம் இது. உலகம் முழுவதும் இப்படம் திரையிடப்பட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கியது.1952_ல் அவர் “லைம் லைட்” என்ற படத்தில், சீரியசான வேடத்தில் நடித்தார். சாப்ளின் தன்னுடைய படம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக மிகவும் சிரமம் எடுத்துக்கொள்வார். செலவைப்பற்றி கவலைப்பட மாட்டார். “தி கிட்” படத்தில் ஒரு காட்சிக்காக 50 ஆயிரம் அடி படம் எடுத்தார்.அதில் 75 அடி தான் படத்தில் இடம் பெற்றது.   எல்லோரையும் சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கை சோகம் நிறைந்தது. முதல் மனைவி மாக்மர்ரே, இரு குழந்தைகளைப் பெற்ற பிறகு சார்லியை விவாகரத்து செய்ததுடன் 10 லட்சம் டாலர் ஜீவனாம்சம் பெற்றார். அடுத்து நடந்த இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடிந்தன.பிறகு, “ஓனா_ஓ_நீல்” என்ற 18 வயதுப் பெண்ணை மணந்தார். இந்தப் பெண்ணுக்கு 8 குழந்தைகள் பிறந்தன. இந்த மனைவிதான் சார்லியின் இறுதிக்காலம் வரை அவருடன் வாழ்ந்தவர். சார்லி வெறும் நடிகர் அல்ல. மனித குலத்திற்கு வழிகாட்டிய மேதை.அதனால்தான், “திரை உலகின் ஒரே மேதை சார்லி சாப்ளின்” என்று பெர்னாட்ஷா பாராட்டினார். இங்கிலாந்து அரசாங்கம் சார்லி சாப்ளினுக்கு “சர்” பட்டம் கொடுத்துக் கவுரவித்தது. 1928, 1972 ஆகிய ஆண்டுகளில் “ஆஸ்கார்” விசேஷப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.1977 டிசம்பர் 25_ந்தேதி சாப்ளின் மறைந்து விட்டாலும், அவர் நடித்த படங்கள் மூலம் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

« செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் அமீர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது! குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? » மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?Published December 19, 2011 எப்போதும் சிரித்த முகம்.மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.காலையில் முன் எழுந்திருத்தல்.பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல்.நேரம் பாராது உபசரித்தல்.கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.அதிகாரம் பண்ணக் கூடாது.குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.கணவனை சந்தேகப்படக் கூடாது.குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.அளவுக்கு மீறிய ஆசை கூடாது.குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ் எதிர் பார்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மனைவி பின்பற்றும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. மனைவியின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தானாகவே நிறைவேறும். பின்பற்றித்தான் பாருங்களே உங்களுக்கே எல்லாம் புரியும்.

பாம்பு வடிவில் பிறந்த குழந்தை- அதிர்ச்சி வீடியோ

« கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது நல்லதா? ஸ்கேன் செய்வதால் குழந்தையின் வளர்ச்சி கர்ப்பப்பையில் பாதிக்கப்படுமா? » பாம்பு வடிவில் பிறந்த குழந்தை- அதிர்ச்சி வீடியோPublished December 18, 2011 இயற்கையின் மாற்றத்தில் பல்வேறு அதிசயங்கள் நடப்பது இயப்பு. அந்த வகையில் பிறந்த குழந்தை ஒன்று எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்ந்தியுள்ளது. சாதாரணமாக பிறக்கும் குழந்தையல்லா மல் பாம்பு உடலமைப்பில் பிறந்துள்ளது இக்குழந்தை. சவுதிஅரேபியால் ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தையே இவ்வாறு பாம்பின் வடிவில் பிறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தோல்வியாதியாக இருக்க கூடும் என வைத்தியர்கள் தெரி வித்துள்ளனர். பாம்பு குழந்தையினை காண வீடியோவை பாருங்கள்.

சுருட்டி எடுத்து செல்லும் பாக்கெட்” டி.வி விரைவில் அறிமுகமாகின்றது

« D அண்ட் C செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளத்திற்கு MultiBoot USB டிரைவ் உருவாக்குவதற்கு… » சுருட்டி எடுத்து செல்லும் பாக்கெட்” டி.வி விரைவில் அறிமுகமாகின்றதுPublished December 18, 2011 சுருட்டி எடுத்து செல்லும் வகையில் பாக்கெட் டி.வி. தயாரிக்கப்பட்டு ள்ளது. இது விரைவில் அறிமுகம் ஆகிறது. தற்போது அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட டி.வி.க்கள் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக 3டி முப்பரிமாண டி.வி.க்கள் விற்பனைக்கு வந்துள் ளன.

அவற்றை ஒரே இடத்தில் வைத்து தான் பார்க்க முடியும். ஆனால் சுருட்டி மடக்கி பாக்கெட்டில் எடுத்து செல்லும் மிக அதிநவீன டி.வி.க்களை இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் குழு தயாரித்துள்ளனர்.

மனித ரோமத்தை விட 1 லட்சம் மடங்கு மெல்லிய சின்னஞ் சிறிய ஒளிப்பான்களை உருவாக்கியுள்ளனர். அதற்கு “குவா ண்டம் டாட்ஸ்” என பெயரி ட்டுள்ளனர்.

அதன் மூலம் மிக மெல்லிய டி.வி. திரைகளை உருவாக்க முடியும். அவ ற்றை பிளக்சிபில் பிளாஸ்டின் சீட்டில் ஒட்டி அதை எங்கு வேண்டுமா னாலும் எடுத்து செல்ல முடியும்.

அவை அடுத்த ஆண்டு இறுதியில் கடைகளில் விற்பனைக்கு வரும். ஆசிய எலக்ட்ரானிக் கம்பெனிகளின் உதவியுடன் இவற்றை தயாரித்த தாக மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானி மைக்கேல் டெல்டான் தெரிவித்துள்ளார்.

சிறார் பாலியல் துஷ்பிரயோகம் 112பேர் கைது

« குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? D அண்ட் C செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? » சிறார் பாலியல் துஷ்பிரயோகம் 112பேர் கைதுPublished December 18, 2011 சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதான வீடியோ காட்சிகளை இணையம் வழியாக பரிமாறிக்கொண்ட சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 22 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து இந்த குற்றச்செயலில் சம்பந்தப்பட்டதாக இதுவரை 270 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பில் மிக மோசமான வீடியோக்களை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்திருக்கும் ஐரோப்பிய காவல்துறையான யூரோ போல், பச்சிளம் குழந்தைகளும், இளம் சிறார்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுவதை இவை காட்டுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்துவரும் இந்த நடவடிக்கையில் இதற்கு முன்னர் கண்டுபிடிக்காத புதிய வலையமைப்புக்களை தாங்கள் கண்டுபிடித்ததாகவும், இந்த குற்றமிழைத்தவர்கள் இணையத்தை பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இந்த வீடியோக்களை உலக அளவில் பகிர்ந்துகொண்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும் யூரோபோல் தெரிவித்துள்ளது.

முட்டை கொலஸ்ட்ராலை குறைக்கும்

« கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது நல்லதா? ஸ்கேன் செய்வதால் குழந்தையின் வளர்ச்சி கர்ப்பப்பையில் பாதிக்கப்படுமா? » முட்டை கொலஸ்ட்ராலை குறைக்கும்Published December 18, 2011 அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன. முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஆய்வு தெரிவிக்கிறது. “சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் ‘பி’ குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன” என்கிறார் டாக்டர் டெனால்ட் மெக்மைரா.
1976-ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இந்த ஆய்வு 2 வருடம் நடந்தது.

1986-ம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், கால்நடை வைத்தியர்கள் தினமும் முட்டை சாப்பிட்டனர். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, 12 ஆண்டுகள் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.
80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவ குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவ குறிப்பேடுகள் தெரிவிக்கும் உறுதியான தகவல்கள்: தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்பதுதான்.

சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துச் சாப்பிட்டால் கெடுதல் தான்.

நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்.

தேனியின் ரீங்காரம் எப்படி ஏற்படுகின்றது

« நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம் பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம் – ஆய்வு முடிவு » தேனியின் ரீங்காரம் எப்படி ஏற்படுகின்றதுPublished December 18, 2011

தேனியின் ரீங்காரம் என்பது – அதன் குரல் ஒலி அல்ல அது தன்னுடைய சிறகுகளை விநாடிக்கு 400 தடைவைகளுக்கு மேல் அடிப்பதால் ஏற்படும் ஒலி ஆகும்.

 

33 பவுண்ட்ஸ் எடைகொண்ட விசித்திர பூனைக்குட்டி (காணொளி இணைப்பு)

« கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது நல்லதா? ஸ்கேன் செய்வதால் குழந்தையின் வளர்ச்சி கர்ப்பப்பையில் பாதிக்கப்படுமா? » 33 பவுண்ட்ஸ் எடைகொண்ட விசித்திர பூனைக்குட்டி (காணொளி இணைப்பு)Published December 18, 2011

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளில் பூனையும் ஒன்றாகும். குழந்தைகள் முதல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பூனைகளின் அளவு ஒரே மாதிரியாகத் தான் காணப்படுவதைத் தான் பார்த்திருப்போம். சீனாவில் சாங்டங் மாகாணத்தில் காணப்படும் Monster என்ற 9 வயது பூனை 33 பவுண்ட்ஸ் எடையுடன் காணப்படுகிறது. இதன் உரிமையாளர் மீன், கோழி மற்றும் பன்றி இறைச்சிகளை தினமும் ஆறு பவுண்டுகள் இந்தப் பூனைக்கு உணவாக அளிக்கிறார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஒரு பாம்பு இன்னொரு பாம்பை உயிருடன் முழுவதுமாக விழுங்கும் – அதிர்ச்சி வீடியோ

« முட்டை மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும் பூமியில் ரஷ்ய விண்கலம் மோதும் அபாயம்! » ஒரு பாம்பு இன்னொரு பாம்பை உயிருடன் முழுவதுமாக விழுங்கும் – அதிர்ச்சி வீடியோPublished December 18, 2011

நெஞ்சை உறைய வைக்கும் காட்சி. ஒரு பாம்பு இன்னொரு பாம்பை உயிருடன் முழுவதுமாக விழுங் கும் அசாதாரண காட்சி. இந்த அரிய வீடியோ இணைப்பை பாருங்கள்.