This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, July 11, 2011

வோசிங்கம் தேவலாயத்திற்கு சென்ற35தமிழர் கைது ..! photo -video in

வோசிங்கம் தேவலாயத்திற்கு சென்ற35தமிழர் கைது ..! photo -video in

 

நேற்று பிரித்தானியாவில் வோசிங்கம் தேவலாயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு சென்ற தமிழர்கள் காவல்துறை மற்றும் குடிவரவு அதிகாரிகளின் சோதனைக்கு உட்படுத்த பட்ட நிலையில் சட்ட விரோதமாக விசா இன்றி தங்கியிருந்தவர்கள் என கருதப்படும் முப்பத்தி ஐந்து பேர் கைது செய்ய பட்டு சிறை வைக்க பட்டுள்ளதாக பாதிக்க பட்ட நபர்கள் தோழர்கள் வாயிலாக தெரிவிக்க பட்டுள்ளது . நீல நிற காவல்துறை வாகனத்தில் வந்த காவல் துறையினரால் கைது செய்ய பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ..! படங்கள் -ஈழம் ரஞ்சன்

இணக்க அரசியல் பாதையில் இணைகிறதா அமெரிக்கா?-இதயச்சந்திரன்

இணக்க அரசியல் பாதையில் இணைகிறதா அமெரிக்கா?-இதயச்சந்திரன்

 
அண்மையில் அமெரிக்க காங்கிரஸின் ஆய்வுச் சேவை வெளியிட்ட எட்டு பக்க அறிக்கை, இலங்கை குறித்தான அமெரிக்காவின் பார்வை எவ்வாறு அமைய வேண்டுமென்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு உதவி வழங்குவதன் ஊடாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது மேலாண்மையை நிலைநாட்ட சீனா முயல்வதாக அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
அதில் கூறப்பட்ட விடயங்கள் ஒன்றும் புதிதானவையல்ல. ஏற்கனவே பல ஆய்வாளர்களால முன்வைக்கப்பட்ட கருத்துகளின் ஒட்டுமொத்த வடிவம், எட்டுப் பக்க அறிக்கையாக வெளி வந்துள்ளது.
ஒருவகையில் இலங்கை விவகாரம் குறித்து, அண்மையில் சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) வெளியிட்ட அறிக்கையும் ,இதுவும், இந்தியாவிற்கே பலமான செய்தியொன்றினை கூற முனைவது போலுள்ளது.
2005 இலிருந்து சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுவது போன்று, “முத்துமாலைத் திட்டம்’ (String of Pearls) ஒன்றின் ஊடாக, துறைமுக அபிவிருத்தி என்கிற போர்வையில், கடற்படை விரிவாக்கத்திற்கான மூலோபாயத் திட்டமொன்றினை சீனா வகுப்பதாகவும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இராணுவ வெற்றியால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு பெரும்பான்மை மக்கள் மத்தியில் பெற்றுவரும் பேராதரவு குறித்து அறிக்கை கவலையடைகிறது.
வீட்டோ அதிகாரம் கொண்ட இரண்டு வல்லரசுகள், இலங்கைக்குச் சார்பான நிலைப்பாட்டுடன் இருப்பதால், மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத கையறு நிலை தோன்றியிருப்பதாகவும் அது கூறுகிறது.
அதாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வகையில், ஒரு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிறைவேற்ற முடியாமல், சீனாவும் ரஷ்யாவும் தடுக்கின்றன என்பதுதான் அமெரிக்காவின் ஆதங்கம்.
அதேவேளை, போர்க்குற்ற விசாரணை ஒன்றினை ஐ.நா. சபையோ அல்லது சர்வதேச சமூகமோ முன்னெடுத்தால், அது இலங்கை பேரினவாதத்தின் ஆதரவுடன் தற்போதைய ஆட்சியினைப் பலப்படுத்தி எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடுமென, பார்வையாளர்கள் கருதுவதாகக் கூறுகிறது.
ஆட்சியைப் பலப்படுத்தினால் வரும் எதிர்மறையான விளைவுகள் குறித்து இந்த அறிககை வெளிப்படையாக எதனையும் கூறாவிட்டாலும், சீனாவின் ஆதிக்கத்திற்குள் இலங்கை முற்று முழுதாக விழுந்து விடும் என்பதையே அது மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது.
அமெரிக்காவிற்கு இருக்கும் தடுமாற்றமே இந்தியாவிற்கும் இருக்கிறது.
“ஒற்றையாட்சிக்குள், ஒருமித்த இலங்கை பலமாக இருக்க வேண்டும்’ என இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவ் அண்மையில் கூறிய விடயத்தைக் கவனிக்க வேண்டும்.
அதாவது நிபுணர் குழு அறிக்கை மற்றும் போர்க் குற்றவிசாரணை ஊடாக, இலங்கை மீது மேற்குலகம் பிரயோகிக்கும் அழுத்தங்களைப் போன்று, தாமும் மோசமான அச்சுறுத்தலை விடுத்து, இலங்கையுடனான உறவில் விரிசலை உருவாக்க இந்தியா விரும்பவில்லை என்பதையே நிரூபமா ராவின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.
அரசோடு பேசுங்களென்று கூட்டமைப்பை வலியுறுத்தும் அதேவேளை, 13 ஆவது திருத்த சட்ட அமுலாக்கம் குறித்தோ அல்லது அரசியல் தீர்வு பற்றியோ நீங்கள் முடிவெடுங்களென்று இலங்கையிடம் கூறுகின்றார் நிரூபமாராவ்.
ஆகவே தமிழ் மக்களுக்காகவோ அல்லது மேற்குலகத்திற்காகவோ, இலங்கை அரசினைப் பகைத்துக் கொள்ள, தற்போதைய நிலையில் இந்தியா தயாராக இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
இதே நிலைப்பாட்டை அமெரிக்காவும் எடுக்க முயல்வது போன்றே, காங்கிரஸின் ஆய்வுச் சேவையின் அறிக்கை புலப்படுத்துகிறது.
சீனா மேற்கொள்ளும் முதலீட்டு ஆதிக்கப் போக்கினை தடுத்து நிறுத்த முடியாத நிலையில், இந்தியாவும் மேற்குலகும் இருப்பதைக் காணலாம்.
தொடர்ச்சியாக அரச பிணையங்களையும், முறிகளையும் விற்றுவரும் இலங்கையின் பொருளாதாரம், பலவீனமாக இருப்பதை, சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதை உணரும் மேற்குலகம், போர்க்குற்ற விசாரணை என்கிற ஆயுதத்தை கொண்டு இலங்கையை அச்சுறுத்தினாலும் அது எதிர்மறையான விளைவுகளையே உருவாக்குமென நம்புகிறது.
அதேவேளை இந்தியாவின் நழுவல் போக்கும், உறவுக்காக ஏங்கும் நிலைப்பாடும் மேற்குலகைப் பொறுத்தவரை பல நெருக்கடிகளை தோற்றுவிக்கிறது.
இலங்கை இராணுவத்தின் உயர்நிலை அதிகாரிகள் உடனான உறவுகளை வலுப்படுத்த, இந்தியா மேற்கொள்ளும் அண்மைக் கால நகர்வுகளும், பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றினை ஏற்படுத்த முனையும் இந்தியாவின் எதிர்பார்ப்பும், மேற்குலகின் இந்து சமுத்திர பிராந்தியம் குறித்த அல்லது குறிப்பாக இலங்கை பற்றியதான தந்திரோபாய கொள்கையில் மாறுதல்களை ஏற்படுத்தலாம் போல் தெரிகிறது.
ஆகவே தமிழர் தாயகம் மீதான பொருண்மிய ஆதிக்கம், “சீபா’ ஒப்பந்தம் போன்றவை கை நழுவிச் சென்ற நிலையில், அரச இயந்திரத்தின் வலுவான மையமான படைத்துறை உயர்மட்டத்தோடு, இறுக்கமான உறவினை உருவாக்கிக் கொள்ளும் புதிய முயற்சியொன்றில் இந்தியா ஈடுபடுவதை தற்போது காணலாம்.
எட்டு சுற்றப் பேச்சுவார்த்தைகள், 13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம், இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள் குடியேற்றம், இயல்பு வாழ்வு என்பவை குறித்து அக்கறைப்படுவது போன்று இந்தியா வெளிக்காட்டினாலும், அவர்களின் உள்நோக்கமும் நலனும், இவை சார்ந்து இருக்கவில்லை என்பது தான் உண்மை.
மேற்குலகும் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இந்தியாவிற்குமிடையே நிலவும் சந்தை சார்ந்த ஆதிக்கப் போட்டியினை எவ்வாறு கையாள்வது என்பதிலும், அதேவேளை அமெரிக்காவின் பொருண்மிய பிடிமானம் ஆசியாவில் தளர்ந்து செல்கிறது என்பதனை உணர்ந்து கொள்வதிலும், இலங்கையின் வெளியுறவு இராஜதந்திரிகள் சரியான மதிப்பீட்டினை கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.
அமெரிக்காவின் உள்ளக் கிடக்கையை, ஆதங்கத்தை, காங்கிரஸின் அறிக்கை அம்பலமாக்கி, இலங்கை அரசின் இறுக்கமான நிலைப்பாட்டினை மேலும் வலுப்படுத்தி உள்ளதென்று கணிப்பிடலாம்.
தமது பலவீனமான பக்கங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தும் அமெரிக்காவின் இது போன்ற அறிக்கைகளை இந்தியா இன்னமும் வெளியிடவில்லை என்பதிலிருந்து, இந்தியாவின் நுண்ணரசியல் தளத்தினை புரிந்து கொள்ளலாம்.
ஆனால் கொதி நிலையை எட்டியுள்ள சீனாவின் பொருண்மிய வளர்ச்சியானது, அடுத்த பாய்ச்சலிற்கான உலக சந்தைத் தளம் பலவீனமுற்று இருப்பதால், ஏனைய வல்லரசுகளோடு முரண் நிலையை உருவாக்கும் வகையில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமக்குச் சார்பான அணிகளை உருவாக்க சீனா தற்போது விரும்பாது.
இதுவே இந்தியா, அமெரிக்காவிற்கான பலமான பக்கங்களõக அல்லது தளமாக அமையலாம்

ஒருநிமிடத்தில் மூன்று குழந்தைகள் பிறக்கின்றன.வருட தொகை 93 மில்லியன்..

ஒருநிமிடத்தில் மூன்று குழந்தைகள் பிறக்கின்றன.வருட தொகை 93 மில்லியன்.. உலகில்  ஒரு நிமிடத்தில் மூன்று குழைந்தைகள் பிறக்கின்றன .வருடத்தில் 93மில்லியன் என தெரிவிக்க பட்டுள்ளது . இவ்வாறு பிறக்கின்ற குழைந்தைகள் சில இறந்தும்  விடுகின்றனஎன உலக குழைந்தைகள் புள்ளி விபர தொகையினை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன ..!

கணவனை கொல்ல ஒருலட்சம் கொடுத்த மனைவி -கள்ள காதலினால் கம்பி என்னும் பெண் ..!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் தான் தமிழரின் ஏகப்பிரதி நிதிகள்-கருணாவுக்கு தெரியுமா மண்வாசனை

 
தேசியத்தலைமையினால் தமிழனத்துக்கான குரலாக உருவாக்கப்பட்டு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் நாடுகடந்த தமிழீ அரசும் தமது தர்மீகப்பணியை தொடரும் வேளையில் மகிந்தாவின் கொடுங்கோல் ஆட்சி விடைபெறும் தருணம்  தன்னைக் காக்க  தமிழருக்கு தீர்வு கொடுத்து உலகத்தின் கண்ணில் மண்துவ எண்ணிய மகிந்தாவிற்கு தமிழ்க்கூட்டமைப்பு மாணமுள்ள தமிழர் மண்டியிட மாட்டோம் என்று   பதிலுரைத்ததை தொடர்ந்து மிரட்டியும் நாய்த்தலை வெட்டியும் காட்டிய தெல்லாம் இத்துப்போனதால்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகளாக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளக் கூடாதென காக்கை வன்னியன் மகிந்தாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளான்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வடக்கு  கிழக்கின் தற்போதைய நிலை மற்றும் அரசியல் தீர்வு தொடர்பிலான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே காக்கை வன்னியன் இந்த வேண்டுகோளை விடுத்தான்.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த இன்று பலர் உள்ளனர். கிழக்கில் ரவூப் ஹக்கீம் உள்ளார். வடக்கில் டக்ளஸ் தேவானந்தா உள்ளார். மேல் மாகாணத்தில் பிரபாகணேசனும் உள்ளார். மலையகத்தில் ஆறுமுகன் தொண்டமான் உள்ளார்.
இவர்களைத் தவிர என்னைப்போன்ற இன்னும் பலர் உள்ளனர்.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வது?  என்று கேள்வி எழுப்பினார்.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகளாக ஏற்றுக் கொள்ளக் கூடாது.
மகிந்தாவிடம் கேட்டுக் கொள்வதோடு இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனையவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென மண்வாசனை அறியாதவர் மகிந்தாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் 30 வருடத்தின் முன் தந்தை செல்வா அயராது போராடி எதுவும் கிடைக்க வில்லை எனினும் விடுதலை போராட்டம் உலகத்தின் கதவுகளை உரக்கத்தட்டும் நிலையில் கூட்டமைப்பை கூலிக்கு வாங்கிவிட முடியாத கவலை மாவீரரின் தியாகம் அது கழுதை அறிய முடியாக் கற்பூர வாசனை

தமிழ் பெண்ணை அடித்து கொலை செய்த கரடி ..!

தமிழ் பெண்ணை அடித்து கொலை செய்த கரடி ..! நேற்று காலை Kataragama  மஹா  Devale பகுதியில் முப்பத்தி இரண்டு வயதுடைய கிறிஸ்ன  பிள்ளை சந்திரகுமாரிஎன்ற இளம் ஆசிரியை அவ்வழி வந்த கரடி வழிமறித்து அடித்து கொலை செய்துள்ளது . கரடியின் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலயில்அவர் பரிதாபகரமாக இறந்துள்ளார் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பினை உருவாக்கியுள்ளது ..!

தமிழர்கள் 87 பேர் கப்பலில் இருந்து இறங்க மறுப்பு

தமிழர்கள் 87 பேர் கப்பலில் இருந்து இறங்க மறுப்புஇந்தோனேசிய கடற்படையினரால் பிடித்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள், தம்மை நியுசிலாந்து அரசோ, ஐநா மன்றமோ பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியுள்ளனர். 

 

இலங்கைத் தமிழர்கள் 87 பேரை நியூசிலாந்து நோக்கி ஏற்றிச் சென்று கொண்டிருந்த கப்பலொன்று இந்தோனேசிய துறைமுகத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இயந்திரக் கோளாறு ஏற்பட்ட நிலையில் இந்தோனேசியக் கடற்பரப்பில் நின்று கொண்டிருந்த போதே எம்.வி.அலிசியா என்ற இந்தக் கப்பலை சனிக்கிழமை இந்தோனேசிய கடற்பரப்பு காவல் துறையினர் மற்றும் கடற்படையினர், டான் ஜுங் பினாங்
என்ற துறைமுகத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த கப்பலில் இருந்தவர்களில் சிலரிடம் விசாரணை நடத்தப் பட்டுள்ள நிலையில், தங்களை ஐ.நா மன்றமோ அல்லது நியுசிலாந்து நாடோ பொறுப்பேற்றுக் கொள்ளும் வரை தாங்கள் கப்பலை விட்டு இறங்கப் போவதில்லை என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் உறவினர்கள், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் கப்பலில் இருப்பதாக கப்பலிலிருந்து செல்வக்குமார் என்பவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.

கப்பலிலுள்ள பெரும்பாலானவர்கள் மலேஷியாவிலிருந்தே, புறப்பட்டதாகவும், கப்பல் இந்தோனேஷியாவிலிருந்து விலைக்கு வாங்கப்பட்டதென்றும் செல்வக்குமார் மேலும் கூறினார்.

போரின் பின்னர் இலங்கையில் இன்னும் சுமுக நிலை திரும்ப வில்லையென்றும் அங்கு தாம் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்து காரணமாகவே வெளிநாட்டுக்கு தஞ்சம் கோரிச் செல்வதாகவும் கப்பலிலுள்ளவர்கள் கூறுகின்றனர்.

கதிர்காம பாதயாத்திரையின் போது நிகழ்ந்த மரணம் தொடர்பில் சந்தேகம்

இலங்கை கிரிக்கெட் அணியினர் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தியவர்களுள் ஒருவர் என்று சந்தேகிக்கப்பட்ட மலிக் இஷாகிற்கு லாகூர் நீதிமன்றம் பிணை வழங்க அனுமதித்துள்ளது.

2009ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி வீரர்கள் மீது லாகூரில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருவருடங்கலான 5 லட்சம் சரீரப்பிணையில் இவருக்கு பிணை வழங்கப்பட்ட போதும், மேலும் 7 தீவிரவாத குற்றசாட்டுகள் இவர்மீது உள்ளதால் இவர் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடந்த வேளையில் தான் சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தாக்குதலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும் மலிக் இஷாக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாக்குதல் திட்டத்தின் பிரதான திட்டமிடல் சூத்திரதாரி மலிக் என சந்தேகிப்பதாக லாகூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை 162 மில். டொலர்களை ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு வழங்க வேண்டும்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுமார் 162 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் அதற்கான வட்டியுடன் சேர்த்து ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹெஜிங் உடன்படிக்கைக்கு அமைவாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் நாம் கனியவள அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்திடம் கேட்டபோது, இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆலோசனைகளை பெற்று வருவதாக தெரிவித்தார்.

மழையை ரசித்துக்கொண்டிருந்த சிறுமி மின்னல் தாக்கி மரணம்

காலஞ்சென்ற சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்குடன் சம்பந்தப்பட்டவர் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் பிணை வழங்க அனுமதியளித்துள்ளது.

குறித்த சந்தேகநபர் சுமார் ஒன்றரை வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையால் சந்தேக நபருக்கு பிணை வழங்க அனுமதிக்க வேண்டும் என சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், சந்தேக நபர் இன்னமும் இராணுவத்தில் இருப்பதால் அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை பிணை வழங்க எதுவித மறுப்பும் இல்லை என அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபரை 75 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் மாதம் இலங்கை மின்சார சபைக்கு 20 மில்லியன் ரூபா வருமானம்

ஜூன் மாதம் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் இலங்கை மின்சார சபைக்கு 19,787,155.14, ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அபராதங்களில் இருந்து 3,705,000 ரூபா இலங்கை மின்சார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பாவனையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளால் பல மில்லியன் நட்டம் மின்வலு, எரிசக்தி அமைச்சு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையை இலாபமீட்டும் ஒரு நிறுவனமாக மாற்றுவதற்கு சிறப்பு குழுவொன்றை அமைத்து அதன் மூலம் மின்சார சபைக்கு ஏற்படும் நட்டத்ததை தவிர்ப்பதற்காக மின்வலு, எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகினறமை குறிப்பிடத்தக்கது.

முறைகேடாக வாசிப்பு மானியில் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 228 வழக்குகளும் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றமை தொடர்பில் 350 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

ஜீவாவுடன் ஜோடி சேரும் அமலா பால்?

Monday, Jul 11, 2011அமலா பால்தான் இன்றைய ஹீரோக்களின் சாய்ஸ் எனும் அளவுக்கு முன்னணி நடிகர்கள் அவரையே நாடுகின்றனர்.

மிஷ்கின் இயக்கும் முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க அமலா பாலிடம் பேச்சு நடப்பதாகத் தெரிகிறது.

சூப்பர் ஹீரோ சப்ஜெக்டான முகமூடியில் ஜீவாவுக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார் நரேன். இந்த இருவரையும் பேலன்ஸ் செய்யும் அளவுக்கு வலுவான பாத்திரம் என்பதாலும், மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பதால் கிடைக்கும் இமேஜையும் நினைத்துப் பார்த்தவர், கால்ஷீட்டுகளை அட்ஜஸ்ட் செய்து தர சம்மதித்துள்ளாராம்.

ஆனாலும் சம்பளம் உள்ளிட்ட பிற விஷயங்களை விக்ரமுடன் நடித்துள்ள தெய்வத் திருமகள் படம் வந்தபிறகு பேசிக் கொள்ளலாம் என்கிறாராம் அமலா. காரணம், அந்தப் படம் நன்றாக ஓடினால் சில லட்சங்களை தாராளமாகக் கூட்டலாம் அல்லவா... அதான்!

நல்ல டெக்னிக்தான்!

'மங்காத்தா' பாடல்கள் வெளியயீடு தாமதம் எதற்கு.? வெங்கட் பிரபு

Monday, Jul 11, 2011அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிக்கும் அவருடைய 50 – வது படம் ‘மங்காத்தா’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா அதோ இதோ என்று தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதற்கு முன்னதாக ‘விளையாடு மங்காத்தா.. விடமாட்டா எங்காத்தா’ என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிட்டிருக்கிறார்கள். இப்படத்தில் மொத்தம் 7 பாடல்களாம். பாடல்களுக்கான இசைக்கோர்ப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதாகத் தெரிகிறது.

ஏன் இன்னும் பாடல்களை வெளியிடாமல் இருக்கிறீர்கள்? என்று அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கேட்டதற்கு;

“பாடலுக்கு இசையமைக்கும் வேலைகள் எல்லாம கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. ஏன் பாடல் வெளியிடும் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறோம் என்றால், இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் தேதி கிடைக்கவில்லை. அது கிடைத்துவிட்டால் போதும் உடனே பாடல் வெளியிடும் தேதியை அறிவித்து விடுவோம்” என்றார்.

இப்படத்தில் அஜித் குமாருடன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, லட்சுமிராய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இதில் யாருடைய தேதியால் பாடல் வெளியிட தாமதம் ஆகும் என்பதை வாசகர்களாகிய நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்!

ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்?

ஏஆர் முருகதாஸும் விஜய்யும் இணைகிறார்கள் என்பதுதான் கோடம்பாக்கத்தன் இன்றைய ஸ்பெஷல் செய்தி

முழுக்க முழுக்க ஆக்ஷன் அட்வென்சராக உருவாகும் இந்தப் படத்தை மும்பை நிறுவனம் ஒன்று தயாரிக்கிறது பட்ஜெட் ரூ 65 கோடி என்கிறார்கள்.

முருகதாஸுக்கு மட்டும் ரூ 12 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.

இப்போது சூர்யாவை வைத்து முருகதாஸ் இயக்கி வரும் ஏழாம் அறிவு படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிகிறது. அதன்பிறகு இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

கதை, நடிகர்கள் தேர்வு குறித்தெல்லாம் ஏற்கெனவே முருகதாஸும் விஜய்யும் பேச்சு நடத்தி முடிவு செய்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தால் சீமான் இயக்குவதாக அறிவித்துள்ள பகலவன் பணிகள் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.Topics: vijay, ar murugadoss, விஜய், முருகதாஸ், புதிய படம்

விஜய் ரசிகர்கள் 50 பேர் கண்தானம்

விஜய் பிறந்த நாளைக் கொண்டாடும் விதத்தில் அவரது ரசிகர்கள் 50 பேர் நேற்று கண்தானம் செய்தனர்.

நாகர்கோயில் அருகே ஆசாரி பள்ளத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் ஆசாரி பள்ளத்தில் நடந்தது. இதில் இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் 50 பேர் கண் தானம் செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முன்னிலையில் விஜய் ரசிகர்கள் 50 பேரும் கண் தானம் செய்தனர்.

கண்தானம் அளித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய சந்திரசேகரன், உங்களைப் போன்ற ரசிகர்கள் கிடைப்பது மிகவும் அரிதான விஷயம். இந்த நல்ல காரியத்தை தொடர்ந்து செய்யுங்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை விஜய் அமைத்துத் தருவார், என்றார்.Topics: eye donation, விஜய் ரசிகர்கள், கண்தானம், vijay fans, nagerkoil

ஜான் ஆபிரகாமுடன் கல்யாணமா? - ஜெனிலியா ஆவேசம்

ஏதாவது ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயின் திருமணம் செய்து கொள்வது போல, படுக்கையில் இருப்பது போல அல்லது முத்தம் கொடுப்பது போல புகைப்படங்கள் முதலில் வெளியான உடன், இருவரும் ரகசியமாய் திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு கிளம்பும்.

அடுத்த இரு தினங்களில், அந்த ஸ்டில் படத்தில் வரும் ஒரு காட்சி என்பது தெரிய வருவதற்குள், வேறு பரபரப்பு வந்து அதை மறக்கடித்துவிடும்.

தமிழ், பாலிவுட் சினிமாக்களில் வெளியாகும் ஹீரோ ஹீரோயின் கிசுகிசுக்களின் தன்மை இப்படித்தான் உள்ளது.

அசின், த்ரிஷா, பிபாஷா பாசு போன்றவர்கள் இதற்கு முன்பு இப்படி கிசுக்கப்பட்டார்கள். ஆனால் இன்னமும் அதே ரக கிசுகிசுக்கள் அவர்களைத் துரத்திக் கொண்டுதான் உள்ளன.

இப்போது ஜெனிலியா சிக்கியுள்ளார் இந்த ரக கிசுகிசு ஒன்றில்.

அவருக்கும் பாலிவுட் முன்னணி நடிகர் ஜான் ஆபிரகாமுக்கும் திருமணம் நடந்து விட்டதாகக் கூறி ஒரு படத்தையும் வெளியிட்டுள்ளனர் பத்திரிகை மற்றும் இணையங்களில்.

இதைக் கேள்விப்பட்டதும் கடுப்பான ஜெனிலியா, "போர்ஸ் என்ற படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில் அது. புரோகிதரை வைத்து நிஜ திருமணம் போலவே அந்தக் காட்சியை எடுத்தனர். ஆனால் அது சினிமா காட்சி என்று புரோகிதருக்கு சொல்லவில்லை போலிருக்கிறது. அதற்காக என்ன ஏது என்று விசாரிக்காமலேயே செய்தி வெளியிடலாமா?" என்றார்.

ஜெனிலியாவுக்கும் ரிதேஷ் தேஷ்முக்கும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்தி வெளியாகியுள்ளதும், அதை ஜெனிலியா மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.Topics: genelia, secrete marriage, john abraham, ஜெனிலியா, ஜான் ஆப்ரகாம், ரகசிய திருமணம்