இலங்கை கிரிக்கெட் அணியினர் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தியவர்களுள் ஒருவர் என்று சந்தேகிக்கப்பட்ட மலிக் இஷாகிற்கு லாகூர் நீதிமன்றம் பிணை வழங்க அனுமதித்துள்ளது.
2009ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி வீரர்கள் மீது லாகூரில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருவருடங்கலான 5 லட்சம் சரீரப்பிணையில் இவருக்கு பிணை வழங்கப்பட்ட போதும், மேலும் 7 தீவிரவாத குற்றசாட்டுகள் இவர்மீது உள்ளதால் இவர் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடந்த வேளையில் தான் சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தாக்குதலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும் மலிக் இஷாக் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தாக்குதல் திட்டத்தின் பிரதான திட்டமிடல் சூத்திரதாரி மலிக் என சந்தேகிப்பதாக லாகூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment