Monday, July 11, 2011

மழையை ரசித்துக்கொண்டிருந்த சிறுமி மின்னல் தாக்கி மரணம்

காலஞ்சென்ற சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்குடன் சம்பந்தப்பட்டவர் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் பிணை வழங்க அனுமதியளித்துள்ளது.

குறித்த சந்தேகநபர் சுமார் ஒன்றரை வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையால் சந்தேக நபருக்கு பிணை வழங்க அனுமதிக்க வேண்டும் என சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், சந்தேக நபர் இன்னமும் இராணுவத்தில் இருப்பதால் அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை பிணை வழங்க எதுவித மறுப்பும் இல்லை என அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபரை 75 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment