Monday, Jul 11, 2011அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிக்கும் அவருடைய 50 – வது படம் ‘மங்காத்தா’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா அதோ இதோ என்று தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதற்கு முன்னதாக ‘விளையாடு மங்காத்தா.. விடமாட்டா எங்காத்தா’ என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிட்டிருக்கிறார்கள். இப்படத்தில் மொத்தம் 7 பாடல்களாம். பாடல்களுக்கான இசைக்கோர்ப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதாகத் தெரிகிறது.
ஏன் இன்னும் பாடல்களை வெளியிடாமல் இருக்கிறீர்கள்? என்று அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கேட்டதற்கு;
“பாடலுக்கு இசையமைக்கும் வேலைகள் எல்லாம கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. ஏன் பாடல் வெளியிடும் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறோம் என்றால், இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் தேதி கிடைக்கவில்லை. அது கிடைத்துவிட்டால் போதும் உடனே பாடல் வெளியிடும் தேதியை அறிவித்து விடுவோம்” என்றார்.
இப்படத்தில் அஜித் குமாருடன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, லட்சுமிராய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இதில் யாருடைய தேதியால் பாடல் வெளியிட தாமதம் ஆகும் என்பதை வாசகர்களாகிய நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்!
0 comments:
Post a Comment