தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் தான் தமிழரின் ஏகப்பிரதி நிதிகள்-கருணாவுக்கு தெரியுமா மண்வாசனை
தேசியத்தலைமையினால் தமிழனத்துக்கான குரலாக உருவாக்கப்பட்டு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் நாடுகடந்த தமிழீ அரசும் தமது தர்மீகப்பணியை தொடரும் வேளையில் மகிந்தாவின் கொடுங்கோல் ஆட்சி விடைபெறும் தருணம் தன்னைக் காக்க தமிழருக்கு தீர்வு கொடுத்து உலகத்தின் கண்ணில் மண்துவ எண்ணிய மகிந்தாவிற்கு தமிழ்க்கூட்டமைப்பு மாணமுள்ள தமிழர் மண்டியிட மாட்டோம் என்று பதிலுரைத்ததை தொடர்ந்து மிரட்டியும் நாய்த்தலை வெட்டியும் காட்டிய தெல்லாம் இத்துப்போனதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகளாக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளக் கூடாதென காக்கை வன்னியன் மகிந்தாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளான்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வடக்கு கிழக்கின் தற்போதைய நிலை மற்றும் அரசியல் தீர்வு தொடர்பிலான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே காக்கை வன்னியன் இந்த வேண்டுகோளை விடுத்தான்.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த இன்று பலர் உள்ளனர். கிழக்கில் ரவூப் ஹக்கீம் உள்ளார். வடக்கில் டக்ளஸ் தேவானந்தா உள்ளார். மேல் மாகாணத்தில் பிரபாகணேசனும் உள்ளார். மலையகத்தில் ஆறுமுகன் தொண்டமான் உள்ளார்.
இவர்களைத் தவிர என்னைப்போன்ற இன்னும் பலர் உள்ளனர்.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வது? என்று கேள்வி எழுப்பினார்.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகளாக ஏற்றுக் கொள்ளக் கூடாது.
மகிந்தாவிடம் கேட்டுக் கொள்வதோடு இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனையவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென மண்வாசனை அறியாதவர் மகிந்தாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் 30 வருடத்தின் முன் தந்தை செல்வா அயராது போராடி எதுவும் கிடைக்க வில்லை எனினும் விடுதலை போராட்டம் உலகத்தின் கதவுகளை உரக்கத்தட்டும் நிலையில் கூட்டமைப்பை கூலிக்கு வாங்கிவிட முடியாத கவலை மாவீரரின் தியாகம் அது கழுதை அறிய முடியாக் கற்பூர வாசனை
0 comments:
Post a Comment