Monday, July 11, 2011

ஜான் ஆபிரகாமுடன் கல்யாணமா? - ஜெனிலியா ஆவேசம்

ஏதாவது ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயின் திருமணம் செய்து கொள்வது போல, படுக்கையில் இருப்பது போல அல்லது முத்தம் கொடுப்பது போல புகைப்படங்கள் முதலில் வெளியான உடன், இருவரும் ரகசியமாய் திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு கிளம்பும்.

அடுத்த இரு தினங்களில், அந்த ஸ்டில் படத்தில் வரும் ஒரு காட்சி என்பது தெரிய வருவதற்குள், வேறு பரபரப்பு வந்து அதை மறக்கடித்துவிடும்.

தமிழ், பாலிவுட் சினிமாக்களில் வெளியாகும் ஹீரோ ஹீரோயின் கிசுகிசுக்களின் தன்மை இப்படித்தான் உள்ளது.

அசின், த்ரிஷா, பிபாஷா பாசு போன்றவர்கள் இதற்கு முன்பு இப்படி கிசுக்கப்பட்டார்கள். ஆனால் இன்னமும் அதே ரக கிசுகிசுக்கள் அவர்களைத் துரத்திக் கொண்டுதான் உள்ளன.

இப்போது ஜெனிலியா சிக்கியுள்ளார் இந்த ரக கிசுகிசு ஒன்றில்.

அவருக்கும் பாலிவுட் முன்னணி நடிகர் ஜான் ஆபிரகாமுக்கும் திருமணம் நடந்து விட்டதாகக் கூறி ஒரு படத்தையும் வெளியிட்டுள்ளனர் பத்திரிகை மற்றும் இணையங்களில்.

இதைக் கேள்விப்பட்டதும் கடுப்பான ஜெனிலியா, "போர்ஸ் என்ற படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில் அது. புரோகிதரை வைத்து நிஜ திருமணம் போலவே அந்தக் காட்சியை எடுத்தனர். ஆனால் அது சினிமா காட்சி என்று புரோகிதருக்கு சொல்லவில்லை போலிருக்கிறது. அதற்காக என்ன ஏது என்று விசாரிக்காமலேயே செய்தி வெளியிடலாமா?" என்றார்.

ஜெனிலியாவுக்கும் ரிதேஷ் தேஷ்முக்கும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்தி வெளியாகியுள்ளதும், அதை ஜெனிலியா மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.Topics: genelia, secrete marriage, john abraham, ஜெனிலியா, ஜான் ஆப்ரகாம், ரகசிய திருமணம்

0 comments:

Post a Comment