This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, July 19, 2011

கிளிநொச்சியில் புலிகள் விமான ஓடுபாதையில் இறங்கிய சிங்கள விமானம் ..!

கிளிநொச்சியில் புலிகள் விமான ஓடுபாதையில் இறங்கிய சிங்கள விமானம் ..!கிளிநொச்சியில் தமிழீழ வான்புலிகள் பாவித்த விமான ஒடுபாதையினை  மீள புனரமைத்துஇலங்கை வான் படை பவிகின்றது .இன்று வை 12 ரக இலகுரக விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது .இரத்மலானை கிளிநொச்சிக்கு இடையில் இந்த வான் தளம் பாவனைக்கு உட்படுத்தபடும் என தெரிவிக்க பட்டுள்ளது .ஆயிராம் மீட்டர் நீளமான இந்த ஓடுபாதை A9சாலையில் அமைய பெற்றுள்ளது .இந்த வான் தளத்தை  சுற்றி ஒன்பது கிலோ மீட்டருக்கு இலங்கை தரைபடைகளின் அதி உச்ச பாதுகாப்பு  வலயமாக பிரகடனபடுத்த பட்ட பகுதியில் நிறுவ பெற்றுள்ளதகா இலங்கை வான்படை தெரிவித்துள்ளது  ..!

ஆண் கடத்தபட்டு கொலை -பெண்கைது ..!

ஆண் கடத்தபட்டு கொலை -பெண்கைது ..!இன்று தப்போவா – மாரவில  பகுதியில் ஆண் ஒருவர் கடத்த பட்டுகொலை செய்யபட்ட நிலையில் பிணமாக  மீட்க பட்டுள்ளார் .குறித்த கொலையினை மேற்கொண்ட சந்தேக நபரான பெண் ஒருவர்அப்பகுதியில் இருந்து தப்பிக்க முனைந்த வேளை  காவல் துறையினரால்கைது செய்ய பட்டுள்ளார் .மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன .

கிளிநொச்சி கடை உரிமையாளர்களிற்கு இராணுவம் கொலை மிரட்டல் ..!

கிளிநொச்சியில் புலிகள் விமான ஓடுபாதையில் இறங்கிய சிங்கள விமானம் ..!கிளிநொச்சியில் தமிழீழ வான்புலிகள் பாவித்த விமான ஒடுபாதையினை  மீள புனரமைத்துஇலங்கை வான் படை பவிகின்றது .இன்று வை 12 ரக இலகுரக விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது .இரத்மலானை கிளிநொச்சிக்கு இடையில் இந்த வான் தளம் பாவனைக்கு உட்படுத்தபடும் என தெரிவிக்க பட்டுள்ளது .ஆயிராம் மீட்டர் நீளமான இந்த ஓடுபாதை A9சாலையில் அமைய பெற்றுள்ளது .இந்த வான் தளத்தை  சுற்றி ஒன்பது கிலோ மீட்டருக்கு இலங்கை தரைபடைகளின் அதி உச்ச பாதுகாப்பு  வலயமாக பிரகடனபடுத்த பட்ட பகுதியில் நிறுவ பெற்றுள்ளதகா இலங்கை வான்படை தெரிவித்துள்ளது  ..!

ரஜினி நடிக்கும் “ராணா” படத்தின் பெயர் மாறுகிறதா.?

Tuesday, Jul 19, 2011ரஜினி நடிக்கும் “ராணா” படத்தின் தலைப்பை மாற்ற பரிசீலனை நடக்கிறது. இப்படத்தின் கதை 17-ம் நூற்றாண்டில் நடப்பது போல் உருவாக்கப்பட்டு உள்ளது. ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
 
ஒரு கேரக்டருக்கு “ராணா” என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. கதையே படத்துக்கும் தலைப்பாக்கினார். “ராணா” என்பது ஒரு மன்னனின் பெயர். தற்போது “ராணா” பெயரை மாற்ற முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ரஜினி குணமடைந்து சென்னை திரும்பியதையடுத்து பட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. கதை விவாதமும் நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களுக்குள் படப்பிடிப்புக்கு புறப்பட உள்ளார். அதற்குள் படத்துக்கு புது தலைப்பை தேர்வு செய்துவிட திட்டமிட்டுள்ளனர்.
 
“ராணா” பெயரை மாற்ற ரஜினி சம்மதிப்பாரா? என்பதில் சந்தேகம் கிளப்பப்படுகிறது. ஏற்கனவே அண்ணாமலை படத்தில் நடித்த போது தலைப்பை பலர் கிண்டல் செய்தனர். அண்ணாமலை அரோகரா என்று பேசினர். எனவே தலைப்பை மாற்றலாமா? என யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினி அதை ஏற்கவில்லை. அண்ணாமலை என்பது திருவண்ணாமலை சிவன் பெயர் எனவே அதை மாற்றக் கூடாது என்று பிடிவாதமாக மறுத்தார். இதையடுத்து அந்த பெயரிலேயே படம் வந்து வெற்றிகரமாக ஓடியது.
 
படையப்பா பெயரையும் இது போன்ற விமர்சித்தனர். ஆனால் அப்பெயரை மாற்ற ரஜினி சம்மதிக்கவில்லை. படையப்பாவும் ஹிட் படமானது.

உதட்டில் பிளவோடு ஐஸ்வர்யா ராய் காரணம் என்ன.?

Tuesday, Jul 19, 2011கடந்த சில தினங்களாக இணையத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் போட்டோ ஒன்று உலா வந்த வண்ணம் உள்ளது. அப்போட்டோவில் அவரது மேல்வாய் கிழிந்துள்ள நிலையில் காணப்படுகிறது. என்னாச்சு ஐஸுக்கு என்று விசாரித்துப் பார்த்தபோது கிடைத்த தகவல் இதோ

உலகளாவிய அளவில் உதட்டு பிளவோடு பிறக்கும் குழந்தைகள் நலனுக்காக பாடுபடும் சமூக அமைப்பான ‘டிரெயின் சில்ட்ரன்’ என்ற அமைப்பு, இக்குறைபாட்டை நீக்க தகுந்த சிகிச்சை முறைகள் இருக்கிறது என்று மக்களுக்கு தெரியப்படுத்தவும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விரும்பியது.

அத்றகாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயினை சந்தித்து, குழந்தைகள் நலனை குறித்து பேச, ஒரு குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் ஐஸோ. அதற்கென்ன தாராளமாக செய்து கொடுக்கிறேன் என்று ஒதுக் கொண்டார். அது மட்டுமின்றி இந்த அமைப்பின் பிராண்ட் அம்பாஸிடராகவும் இருக்க சம்மதித்துள்ளார்.

இந்த ஒத்துழைப்பால்தான் மேற்கண்ட போட்டோ வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உதட்டு பிளவு குறைபாட்டிற்கு சிகிச்சை இருக்கிறது என்று, இந்தியா உள்ளிட்ட 78 வளரும் நாடுகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

நான் பாதி இந்தியர் என்றால் ராகுல் காந்தி யார்?- கத்ரீனா கேள்வி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் தன்னைப் போன்று பாதி இந்தியர் தான் என்று பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் தெரிவித்துள்ளார்.

கத்ரீனா கைப் இந்திய காஷ்மீரி தந்தைக்கும், இங்கிலாந்து அன்னைக்கும் பிறந்தவர். அவர் பாதி இந்தியர். பாதி ஐரோப்பியராக இருப்பதால் அடிக்கடி இது தொடர்பான சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

அழகிய பதுமை கத்ரீனாவை தாக்கிப் பேச விரும்புவர்கள் முதலில் கூறுவது அவர் பாதி இந்தியர் என்பதைத் தான். இவ்வாறு கூறுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு திருப்தி.

இது குறித்து கத்ரீனா கைப் கூறியதாவது,

நான் பாதி இந்தியர் என்று பிறர் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கின்றனர். இந்த உலகத்தில் என்னைப் போன்று பாதி இந்தியர்கள் பலர் உள்ளனர்.

இந்திய நியூஸ் சேனல்கள் எனது பாஸ்போர்ட் நகலை வைத்துள்ளன. அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்காதீர்கள். என் பாஸ்போர்டில் எனது அன்னையின் பெயர் உள்ளது. எனது பிறந்த நாள், பிறப்பிடத்தை என்றைக்குமே மறைத்ததில்லை. நான் ஹங்காங்கில் பிறந்தேன். இந்த தகவலை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்றார் கடுப்பாக.

நான் பாதி இந்தியர், பாதி ஐரோப்பியர் என்பதற்காக வெட்கப்பட வேண்டுமா? வேண்டியதில்லை. ராகுல் காந்தி கூட தான் பாதி இந்தியர், பாதி இத்தாலியர் என்றார்.

சபாஷ், சரியான கேள்வி!Topics: katrina kaif, rahul gandhi, கத்ரீனா கைப், bollywood

அழுதது உண்மைதான்... ஆனா விலகறதா இல்ல-நயன்தாரா

சென்னை: ராம ராஜ்யம் படப்பிடிப்பின் இறுதிநாளில் நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதது உண்மைதான். ஆனால் சினிமாவிலிருந்து விலகப்போவதற்காக நான் அழுததாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம், என நயன்தாரா கூறியுள்ளார்.

நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என செய்தி பரவி உள்ளது.

தெலுங்கில் நயன்தாரா கடைசியாக நடித்த ராம ராஜ்ஜியம் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிந்தது. படப்பிடிப்பின் கடைசி நாளில் அவர் கதறி அழுததும், படக்குழுவினர் அனைவரிடமும் பிரியா விடை பெற்றதும் கடந்த வாரச் செய்திகள்.

இது அழுகையும் பிரியா விடையும் சினிமாவுக்கும் சேர்த்துதான் என்று கூறப்பட்டது. அப்போது செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்த நயன்தாரா, இப்போது சினிமாவை நான்விலகமாட்டேன், என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் சினிமாவை விட்டு விலகப்போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பில் அழுததற்கான காரணமே வேறு.

என்னையும் மீறி என் மன வேதனை கண்ணீராய் வெளிப்பட்டுவிட்டது.

இன்னொரு பக்கம் ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பு குழுவினர் பாட்டு பாடி என்மேல் பூக்களை தூவி வழியனுப்பினார்கள். என் அழுகைக்கு அதுவும் ஒரு காரணம்.கடந்த ஆண்டு நான்நடித்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட். நான் எதற்கு விலகப் போகிறேன்", என்றார்.

எதுக்கும் பார்த்து பேட்டி கொடுங்க... அடுத்த செய்தி பிரபுதேவாவிடமிருந்து நயன் விலகல் என்று வரக்கூடும்!Topics: நயன்தாரா, பிரபுதேவா, தமிழ் சினிமா, nayanthara, quitting cinema, prabhu deva

சென்டிமெண்ட்.... ரஜினியின் ராணா படத் தலைப்பில் மாற்றம்?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராணா படத் தலைப்பு மாறக்கூடும் என சில தினங்களாகவே பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் ரஜினி அல்லது இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த ரியாக்ஷனும் இல்லை.

ரஜினி கதை எழுதி, 3 வேடங்களில் நடிக்கும் மெகா பட்ஜெட் படம் ராணா. தமிழ் மன்னன் ஒருவனின் கதை. முழுக்க முழுக்க சரித்திரப் படம். இதில் ரஜினியின் ஒரு வேடத்துக்குப் பெயர்தான் ராணா. இந்தப் பெயரை தேர்வு செய்தததும் ரஜினிதான்.

இந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின்போதுதான் அவருக்கு உடல் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு, சிங்கப்பூருக்குப் போய் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளார்.

இப்போது ஓய்விலிருக்கும் ரஜினி படத்தின் காட்சியமைப்புகள் குறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருடன் விவாதித்து வருகிறார்.

இந்த நிலையில், சென்டிமெண்டாக ராணா தலைப்பு வேண்டாம் என ஒரு சாரார் கருத்து தெரிவி்த்துள்ளார்களாம். ஆனால் ரஜினியோ ராணா தலைப்புதான் மிக ஈர்ப்பாக இருக்கிறது என அபிப்பிராயப்படுகிறாராம்.

அடுத்தவர் கருத்துக்கு எப்போதுமே அவர் மதிப்பளிப்பவர் என்பதால், தலைப்பில் மாற்றம் செய்யக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ரஜினியோ கேஎஸ் ரவிக்குமாரோ இதுபற்றி எதுவும் கருத்து தெரிவிக்காமல் உள்ளனர்.

ஏற்கனவே அண்ணாமலை படத்தில் நடித்த போது தலைப்பை பலர் கிண்டல் செய்தனர். அண்ணாமலை அரோகரா என்று பேசினர். எனவே தலைப்பை மாற்றலாமா? என யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினி அதை ஏற்கவில்லை. அண்ணாமலை என்பது திருவண்ணாமலை சிவன் பெயர் எனவே அதை மாற்றக் கூடாது என்று பிடிவாதமாக மறுத்தார். இதையடுத்து அந்த பெயரிலேயே படம் வந்து வெற்றிகரமாக ஓடியது.

படையப்பா பெயர்தான் பெரும் அளவு கிண்டலடிக்கப்பட்டது. ஆனால் வசூலில் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்டது இந்தப் படம்.

எனவே ரஜினி தலைப்பை மாற்றுவாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.Topics: ராணா, தலைப்பு மாற்றம், rajini, raana, title change

தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் பூட்டு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23ம் திகதி சனிக்கிழமை 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் விமானத்தளம் திறப்பு

கிளிநொச்சியில் இலங்கை விமானப்படையினர் வை 12 ரக விமானத்தினை தரையிறக்கி இலங்கை விமானப் படையினர் புதிய விமானத்தளம் ஒன்றினை இன்று சற்றுமுன்பு திறந்து வைத்துள்ளனர்.

மேக்னா நாயுடுவின் கவர்ச்சியில் வெளியாகும் ‘மோக மந்திரம்’

Tuesday, Jul 19, 2011சிம்பு நடித்த ‘சரவணா’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் மேக்னா நாயுடு. இப்படத்தை அடுத்து தமிழில் ஜாம்பவான், வீராசாமி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது குத்துப்பாடலுக்கும் ஆடி வருகிறார்.

கடைசியாக கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தில் இடம்பெற்ற குத்துப் பாடலுக்கு ஆடி இருக்கிறார். இவர் ஹிந்தி, தலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

அப்படி ஹிந்தியில் இவர் கவர்ச்சியாக நடித்து வெளியான படம் ‘மாசூக்கா’. இப்படம் அங்கு வசூலில் அபார வெற்றி பெறவே, இதனை அப்படியே ‘மோக மந்திரம்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்கிறார்கள்.

இப்படத்தில் மேக்னா நாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் வித்யா மாளவடே, ஆதித்யா பால் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கதாநாயகனுக்கும், இரண்டு பெண்களுக்கும் இடையே நடைபெறும் உறவுமுறை சிக்கல் பற்றிய கதையினை சஸ்பென்ஸ்-திகில் கலந்து சொல்லியிருக்கிறார்கள். இப்படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

ஹாலிவுட் நடிகைகளை பின் பற்றும் ப்ரியா ஆனந்த்

Tuesday, Jul 19, 2011நூற்றெண்பது” படத்தில் நாயகன் சித்தார்த், நித்யா மேனன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளவர் ப்ரியா ஆனந்த்.

ஹாலிவுட் நடிகைகளின் பாணியில் சமூக அக்கறையை காட்டி வருகிறார்.

உலக அளவில் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டி, அதற்காக பாடுபட்டு வரும் பொதுநல அமைப்புடன் சேர்ந்து குழந்தைகளின் நன்மைக்காக குரல் கொடுத்துள்ளார் அவர். இன்றும் நான், என் குழந்தை பருவ நினைவுகளில் மூழ்குவதுண்டு.

மற்ற குழந்தைகள் மாதிரி நானில்லை. என்னுடைய அனுபவங்களே வித்தியாசமாக இருக்கும். குழந்தைகளின் உழைப்பை சுரண்டி பிழைக்கின்றவர்களுக்கு எதிராக என் உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்துள்ளேன்.

குழந்தைகளின் அழகான நேரங்களை எவரும் எந்தவகையிலும் பயன்படுத்தி கொள்வதை எதிர்க்கிறேன். இன்றைய குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியம். அதில் தான் அவர்களின் பசுமையான எதிர்காலம் அடங்கியுள்ளது என்று ப்ரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.