Tuesday, July 19, 2011

மேக்னா நாயுடுவின் கவர்ச்சியில் வெளியாகும் ‘மோக மந்திரம்’

Tuesday, Jul 19, 2011சிம்பு நடித்த ‘சரவணா’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் மேக்னா நாயுடு. இப்படத்தை அடுத்து தமிழில் ஜாம்பவான், வீராசாமி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது குத்துப்பாடலுக்கும் ஆடி வருகிறார்.

கடைசியாக கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தில் இடம்பெற்ற குத்துப் பாடலுக்கு ஆடி இருக்கிறார். இவர் ஹிந்தி, தலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

அப்படி ஹிந்தியில் இவர் கவர்ச்சியாக நடித்து வெளியான படம் ‘மாசூக்கா’. இப்படம் அங்கு வசூலில் அபார வெற்றி பெறவே, இதனை அப்படியே ‘மோக மந்திரம்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்கிறார்கள்.

இப்படத்தில் மேக்னா நாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் வித்யா மாளவடே, ஆதித்யா பால் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கதாநாயகனுக்கும், இரண்டு பெண்களுக்கும் இடையே நடைபெறும் உறவுமுறை சிக்கல் பற்றிய கதையினை சஸ்பென்ஸ்-திகில் கலந்து சொல்லியிருக்கிறார்கள். இப்படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

0 comments:

Post a Comment