Tuesday, July 19, 2011

ஹாலிவுட் நடிகைகளை பின் பற்றும் ப்ரியா ஆனந்த்

Tuesday, Jul 19, 2011நூற்றெண்பது” படத்தில் நாயகன் சித்தார்த், நித்யா மேனன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளவர் ப்ரியா ஆனந்த்.

ஹாலிவுட் நடிகைகளின் பாணியில் சமூக அக்கறையை காட்டி வருகிறார்.

உலக அளவில் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டி, அதற்காக பாடுபட்டு வரும் பொதுநல அமைப்புடன் சேர்ந்து குழந்தைகளின் நன்மைக்காக குரல் கொடுத்துள்ளார் அவர். இன்றும் நான், என் குழந்தை பருவ நினைவுகளில் மூழ்குவதுண்டு.

மற்ற குழந்தைகள் மாதிரி நானில்லை. என்னுடைய அனுபவங்களே வித்தியாசமாக இருக்கும். குழந்தைகளின் உழைப்பை சுரண்டி பிழைக்கின்றவர்களுக்கு எதிராக என் உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்துள்ளேன்.

குழந்தைகளின் அழகான நேரங்களை எவரும் எந்தவகையிலும் பயன்படுத்தி கொள்வதை எதிர்க்கிறேன். இன்றைய குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியம். அதில் தான் அவர்களின் பசுமையான எதிர்காலம் அடங்கியுள்ளது என்று ப்ரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment