Tuesday, Jul 19, 2011கடந்த சில தினங்களாக இணையத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் போட்டோ ஒன்று உலா வந்த வண்ணம் உள்ளது. அப்போட்டோவில் அவரது மேல்வாய் கிழிந்துள்ள நிலையில் காணப்படுகிறது. என்னாச்சு ஐஸுக்கு என்று விசாரித்துப் பார்த்தபோது கிடைத்த தகவல் இதோ
உலகளாவிய அளவில் உதட்டு பிளவோடு பிறக்கும் குழந்தைகள் நலனுக்காக பாடுபடும் சமூக அமைப்பான ‘டிரெயின் சில்ட்ரன்’ என்ற அமைப்பு, இக்குறைபாட்டை நீக்க தகுந்த சிகிச்சை முறைகள் இருக்கிறது என்று மக்களுக்கு தெரியப்படுத்தவும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விரும்பியது.
அத்றகாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயினை சந்தித்து, குழந்தைகள் நலனை குறித்து பேச, ஒரு குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் ஐஸோ. அதற்கென்ன தாராளமாக செய்து கொடுக்கிறேன் என்று ஒதுக் கொண்டார். அது மட்டுமின்றி இந்த அமைப்பின் பிராண்ட் அம்பாஸிடராகவும் இருக்க சம்மதித்துள்ளார்.
இந்த ஒத்துழைப்பால்தான் மேற்கண்ட போட்டோ வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உதட்டு பிளவு குறைபாட்டிற்கு சிகிச்சை இருக்கிறது என்று, இந்தியா உள்ளிட்ட 78 வளரும் நாடுகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
0 comments:
Post a Comment