Tuesday, July 19, 2011

ரஜினி நடிக்கும் “ராணா” படத்தின் பெயர் மாறுகிறதா.?

Tuesday, Jul 19, 2011ரஜினி நடிக்கும் “ராணா” படத்தின் தலைப்பை மாற்ற பரிசீலனை நடக்கிறது. இப்படத்தின் கதை 17-ம் நூற்றாண்டில் நடப்பது போல் உருவாக்கப்பட்டு உள்ளது. ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
 
ஒரு கேரக்டருக்கு “ராணா” என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. கதையே படத்துக்கும் தலைப்பாக்கினார். “ராணா” என்பது ஒரு மன்னனின் பெயர். தற்போது “ராணா” பெயரை மாற்ற முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ரஜினி குணமடைந்து சென்னை திரும்பியதையடுத்து பட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. கதை விவாதமும் நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களுக்குள் படப்பிடிப்புக்கு புறப்பட உள்ளார். அதற்குள் படத்துக்கு புது தலைப்பை தேர்வு செய்துவிட திட்டமிட்டுள்ளனர்.
 
“ராணா” பெயரை மாற்ற ரஜினி சம்மதிப்பாரா? என்பதில் சந்தேகம் கிளப்பப்படுகிறது. ஏற்கனவே அண்ணாமலை படத்தில் நடித்த போது தலைப்பை பலர் கிண்டல் செய்தனர். அண்ணாமலை அரோகரா என்று பேசினர். எனவே தலைப்பை மாற்றலாமா? என யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினி அதை ஏற்கவில்லை. அண்ணாமலை என்பது திருவண்ணாமலை சிவன் பெயர் எனவே அதை மாற்றக் கூடாது என்று பிடிவாதமாக மறுத்தார். இதையடுத்து அந்த பெயரிலேயே படம் வந்து வெற்றிகரமாக ஓடியது.
 
படையப்பா பெயரையும் இது போன்ற விமர்சித்தனர். ஆனால் அப்பெயரை மாற்ற ரஜினி சம்மதிக்கவில்லை. படையப்பாவும் ஹிட் படமானது.

0 comments:

Post a Comment