நடிகர் பிரபுதேவாவும் அவரது மனைவி ரம்லத்தும் சில மாதங்களுக்கு முன்பு பரஸ்பர முறையில் விவாகரத்து செய்து கொள்வதாக குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
பிரபுதேவா தனது இரு மகன்கள் மற்றும் ரம்லத்துக்கு கிழக்கு கடற்கரையில் உள்ள வீடு, அண்ணாநகரில் உள்ள வீடு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இரண்டு பிளாட்டுகள் போன்றவற்றை எழுதி கொடுப்பதாக உத்தரவாதம் அளித்திருந்தார்.
இதையடுத்து ரம்லத் விவாகரத்துக்கு சம்மதித்தார். கடந்த வியாழக்கிழமை இவ்வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரபுதேவாவும், ரம்லத்தும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் நீதிமன்றத்துக்கு இன்று சனிக்கிழமை காலை திடீரென வந்தார் பிரபுதேவா. காருக்குள்ளேயே தன்னை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அவர், நீதிபதிகள் வந்ததும் உள்ளே நுழைந்து ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
தனு வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும் என்று கோரி நீதிபதி பாண்டியன் முன்பு மனுதாக்கல் செய்தார். பிரபுதேவா கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது இன்று தெரிந்துவிடும்.Topics: prabhu deva, divorce, ramlath, பிரபு தேவா, விவாகரத்து வழக்கு, விசாரணை