Saturday, July 2, 2011

கவர்ச்சி நடிகை மீட்பு

July 2, 2011 | no comments

படப்பிடிப்பு என்ற பெயரில் விசா மோசடி கும்பலுடன் போய் மாட்டிக் கொண்ட கவர்ச்சி நடிகை லக்ஷா பெப்சி சங்கத்தின் துணையுடன் மீட்கப்பட்டார். பிரபல கவர்ச்சி நடிகை லக்ஷா. இவர் முன்னாள் கவர்ச்சி நடிகை பபிதாவின் மகள். லாலி, என்ற படத்தில் லக்ஷா நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்புக்காக தென் கொரியாவுக்கு லக்ஷாவை அழைத்து சென்றனர்.

அவருடன் சில நடன கலைஞர்களும் , துணை நடிகர்கள் என்ற பெயரில் மேலும் 29 பேரும் ஏறிக்கொண்டனர். தயாரிப்பாளர் செல்லவில்லை. தென் கொரியாவில் லக்ஷா பங்கேற்ற நடன காட்சி 4 நாட்கள் படமாக்கப்பட்டது. அப்போது டெல்லியில் இருந்து சென்ற 29 பேரும் திடீரென மாயமானார்கள்.

லக்ஷாவும் சென்னையில் இருந்து சென்ற நடனக் குழுவினரும் நாடு திரும்ப தென் கொரியா விமான நிலையத்துக்கு வந்தபோது அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். டெல்லியில் இருந்து வந்த 29 பேரும் ஜாயிண்ட் விசாவில் வந்திருப்பதால் அவர்களும் வந்தால்தான் நாடு திரும்ப அனுமதிப்போம் என்றனர்.

பெப்சி தலையீடு

லக்ஷா உள்ளிட்ட படக்குழுவினர் அங்குள்ள ஓட்டலில் சிறை வைக்கப்பட்டனர். லக்ஷா தாய் பபீதா இதுகுறித்து பெப்சி யூனியனில் புகார் செய்தார். பெப்சி நிர்வாகிகள் தலையிட்டனர். அவர்கள் முயற்சியால் லக்ஷா விடுவிக்கப்பட்டார்.

நேற்று அவர் டெல்லி வந்து சேர்ந்தார். இன்று காலை அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு மதியம் சென்னை வந்து சேர்ந்தார். லக்ஷா மீட்கப்பட்டது பபிதா கூறுகையில், “சிறு தயாரிப்பாளர்கள்தான் இந்த மாதிரி வேலையைச் செய்கின்றனர்.

சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத 29 பேரை டெல்லியில் இருந்து அழைத்து போனதால்தான் தென் கொரியாவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.  தயாரிப்பாளர்கள் தென் கொரியாவுக்கு போகவில்லை. இதில் மோசடி நடந்துள்ளது. என் மகளை மீட்டுத் தந்த பெப்சிக்கு நன்றி,” என்றார்.

0 comments:

Post a Comment