July 2, 2011 | no commentsபஸ்சில் பயணித்த 16 வயது சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக கூறி தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர்கள் இருவர் உடுப்பியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்பத்தூர்-கொல்லூர் இடையிலான பேருந்து புதன்கிழமையன்று கோவையிலிருந்து கிளம்பியது. அந்தப் பேருந்தில், 16 வயது சிறுமி தனது தம்பி சிவா என்பவருடன் சத்தியமங்கலத்தில் ஏறியுள்ளார். இருவரும் கர்கலா அருகே வசித்து வரும் தங்களது பெற்றோரைப் பார்ப்பதற்காக வந்துள்ளனர். அவர்கள் பஸ்சில் பயணித்த போது வேறு யாரும் பஸ்சில் இல்லை என்று தெரிகிறது.
இதைப் பயன்படுத்திக் கொண்டு பஸ் டிரைவர் சிவக்குமாரும், இன்னொரு டிரைவரான ராமு என்பவரும், சிவாவை வேறு ஒரு இடத்தில் அமருமாறு கூறி விட்டு சிறுமியிடம் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
இரு டிரைவர்களும் மாறி மாறி செய்த செக்ஸ் சில்மிஷங்களால் கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியும், அவரது தம்பியும் பாடுபித்ரி என்றஇடத்தில் இறங்கி விட்டனர். இரு டிரைவர்களின் செல்போன் எண்களையும் எப்படியோ தெரிந்து கொண்ட சிறுமி, பஸ்சின் எண்ணையும் குறித்து வைத்துக் கொண்டார்.
பின்னர் உடுப்பி விரைந்த இருவரும், அங்கிருந்தபடி தங்களது பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார். இந்த நிலையில் உடுப்பியிலிருந்து கொல்லூர் சென்ற பஸ் மீண்டும் உடுப்பிக்கு வந்து சேர்ந்தபோது, அங்கு வந்து காத்திருந்த சிறுமியின் உறவினர்களும், நண்பர்களும், பொதுமக்களும் சேர்ந்து பஸ்சைப் பிடித்து உள்ளே இருந்த இரு டிரைவர்களையும் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்களை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment