This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Wednesday, July 13, 2011

“சயீப்அலிகானை பிரியவில்லை” திருமணம் முடிவானதும் அறிவிப்போம்-கரீனாகபூர்

Thursday, Jul 14, 2011பிரபல இந்தி நட்சத்திரங்கள் சயீப்அலிகான், கரீனாகபூர் இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். பொது நிகழ்ச்சிகளில் கைகோர்த்தபடி கலந்து கொள்கிறார்கள்.
 
கரீனாகபூர் ஏற்கனவே ஜாகித்கபூரை காதலித்தார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்.
 
“தஷன்” என்ற படத்தில் சயீப்அலிகானும், கரீனாகபூரும் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதற்கிடையே இருவாரங்களுக்கு முன்பு கரீனா-சயீப் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் காதலை முறித்துக்கொண்டு தனித்தனியாக பிரிந்து விட்டதாகவும் கிசுகிசுக்கள் பரவின.
 
மும்பையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கரீனாகபூரிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் நாங்கள் பிரிந்து விட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. அது வதந்திதான். எங்கள் இருவருக்கும் திருமணம் பற்றி முடிவானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றார்.

குளவி தாக்கி பெண் மரணம் - மஸ்கெலியாவில் சம்பவம்

மலையகத்தில் மஸ்கெலியா என்னும் இடத்தில் உள்ள குமரித்தோட்டம் என்ற பகுதியில் குளவிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

தேயிலை பறிக்கச் சென்ற பெண் ஒருவரே இதில் பலியானவராவார்.

நேற்று தொழிலாளர்கள் தமது தேயிலை பறிக்கும் பணிக்காகச் சென்றபோது, அங்கு இருந்த குளவிக் கூடு ஒன்று கலைந்து, அதில் இருந்த குளவிகள் தொழிலாளர்களைத் தாக்கியுள்ளதாகவும், அதனால் அவர்கள் காயமடைந்ததாகவும் அங்குள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து காயமடைந்த 12 பேர், 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஸ்கெலிய அரசினர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பயனளிக்காமல் அவர்களில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும் அந்தச் செய்தியாளர் கூறியுள்ளார் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

சனல் 4க்கு காணொளி வழங்கினார் : சந்தேகநபர் ஓகஸ்ட் 2ம் திகதி வரை தடுத்து வைப்பு

சனல் 4 தொலைக்காட்சிக்கு யுத்தகுற்றங்கள் எனக்கூறப்படும் காணொளிகளை வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் 71 இறுவட்டுக்களுடன் கைது செய்யப்பட்டவரை ஓகஸ்ட் 2 ம் திகதி வரை தடுத்துவைக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் குற்றப் புலனாய்வுத் துறையினர் பொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

நந்தவனம் ஜெகதீஸ்வரம் என்ற நபரே சனல் 4 சேவைக்கு அடிப்படை காணொளிகளை வழங்கியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

அவர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்த 71 இறுவட்டுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபரை ஓகஸ்ட் 2ம் திகதி வரை தடுத்து வைக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளது.

மும்பைத் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

மும்பையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கோழைத் தனமான தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனத்தையும் பாதிப்புக்கு உள்ளாகிய மக்களுக்கும் அரசுக்கு தனது இரங்கலையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தீவிரவாதத்தினை சகித்து கொண்டிருக்க கூடாது அத்தோடு அதன் கோழைத்தனமான அருவெறுப்பான செயற்பாடுகள் பெறுகுவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும் இந்த தாக்குதலை தான் கடுமையாக கண்டிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் இந்திய மக்களுக்கு ஆதரவாக நின்று பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கூட்டாக இணைந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் உறவுகளை இழந்தவர்களுக்காகவும் பாதிப்புற்றவர்களுக்காகவும் நம் பிரார்த்தனை செய்திடுவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

ஜோடி செருவாரா கமல் மகள் ஸ்ருதி

Wednesday, Jul 13, 2011தனுஷை வைத்து அவர் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கவிருக்கும் படத்தை பற்றிய அறிவிப்பு நாம் முதன் முதலில் தெரிவித்திருந்தோம்  இதில் தனுஷின் ஹீரோயின் கமல் மகள் ஸ்ருதி ஹாசன்தான் என்பது பற்றிய செய்திகளும் வெளியாகின ஆனால் ஸ்ருதியுடன் ஜோடி சேர்வது தொடர்பாக  தனுஷ் ம்றுப்பு தெரிவித்து வந்தார்.

ஆனால் ஐஸ்வர்யா தனுஷ்சின் விருப்பம் ஸ்ருதிஹாசனை தன் கணவருக்கு ஹீரோயின் ஆக்குவதுதானாம். ர் இதனல் இழுபரி ஏற்பட்டுவந்த வேளையில் தற்போது சூப்பர்ஸ்டார் சென்னை திரும்புவதால்  ரஜினி சென்னை வந்து ஒருவாரத்தில் இது தொடர்பான  அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.

ரஜினி படத்துக்கு விளம்பர அவசியமே கிடையாது: அமிதாப்பச்சன்

Thursday, Jul 14, 2011இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன், தனது சொந்ததயாரிப்பில் புத்தா ஹோகா தேரா பாப்' என்ற இந்தி திரைப்படத்தைதயாரித்துள்ளார். அந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணி முடிந்தநிலையில், ஆரக்ஷான்' என்ற அடுத்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியைதொடங்கி இருக்கிறார். அந்த திரைப்படம் ஆகஸ்டு 12ந் தேதி வெளியாகிறது.

இந்த பணியில் ஈடுபட்டுள்ள நடிகர் அமிதாப்பச்சன், தன்னுடையஇணையதள பக்கத்தில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், அவர்கூறியுள்ளதாவது:

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை பிரபலப்படுத்தும் பணி மிகவும்முக்கியமானது. அதிக அளவிலான மக்களின் கவனத்துக்கு அதைக் கொண்டுசேர்க்க வேண்டும். பெரும்பாலான படங்களை பொறுத்தவரை, வெளியானஒரு வாரத்துக்குள் அதிக ரசிகர்களை ஈர்ப்பது அவசியம். வர்த்தக ரீதியானவெற்றியே படத்தின் அளவு கோலாக கருதப்படுகிறது. ஆனால், இந்தவரையறைக்குள் தென் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி ஒருபோதும்வந்ததில்லை.

ரஜினி படத்தை பிரபலப்படுத்த வேண்டிய அவசியமே அவருக்கு கிடையாது.அவருடைய படத்துக்கு அவரே மிகப்பெரிய விளம்பரம். ஒரு முறை நாங்கள்பேசிக்கொண்டிருந்தபோது, எதற்காக படத்தை பிரபலப்படுத்தும் பணிக்குமுக்கியத்துவம் அளிக்கிறீர்கள்' என என்னிடம் கேட்டார். மேலும், அதுஉங்களை நீங்களே விற்பது போன்றது என்றும் கூறினார். நாங்கள்இருவருமே சிரித்தோம். பின்னர் அவரிடம் விளக்கி கூறினேன். அவருக்குஅந்த அவசியம் கிடையாது.

மிகச்சிறந்த விற்பனை சிந்தனை உள்ள நிபுணர்கள்,
24 மணி நேரமும்மேற்பார்வை, கண்காணிப்பு, ஆய்வு என உழைக்கின்றனர். மக்களிடம்திரைப்படங்களை எப்படி கொண்டு சேர்ப்பது என சிந்தனை செய்கின்றனர்.வேகமான இந்த உலகில் அனைத்துமே விரைவாக நடைபெற வேண்டும்.புதிய சிந்தனை இல்லாமல் வளர்ச்சியோ, மாற்றமோ கிடையாது. எனவே,புதிய தலைமுறைகளை நான் வாழ்த்துகிறேன்.

திரைப்படத்தை பொறுத்தவரை முதல் வாரம் மட்டுமே முக்கியமானது.இரண்டாவது வாரத்தில் அடுத்த படத்தின் வெளியீடு குறித்து மக்கள் பேசஆரம்பித்து விடுகிறார்கள். டி.வி., ரேடியோ, இன்டெர்நெட், செல்போன் எனஅனைத்து இடங்களிலும் திரைப்படங்கள் பரவி விட்டன. எனவே,நேரத்துக்கு நாம் அடிபணிந்து செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறுஅமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

சென்னை திரும்பினார் ரஜினி... ரசிகர்களின் உற்சாக வரவேற்பு

சென்னை: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை இரவு 10.45 மணிக்கு சென்னை திரும்பினார்.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், ஜூன் 14-ம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார்.

எனினும் தொடர் மருத்துவ பரிசோதனைகள் தேவைப்பட்டதால், அவர் அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.

அவர், புதன்கிழமை இரவு சென்னை வருவதாக தகவல் வெளியானது. இதனால், புதன்கிழமை மதியம் முதலே விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

தமிழகம் முழுவதுமிருந்து ரஜினி ரசிகர்கள் விமான நிலையத்துக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

இரவு 9.30 மணி வரை ரஜினிகாந்த் விமான நிலையத்தில் எந்த வழியாக ரஜினிகாந்த் வருகிறார் என்பது விமான நிலைய போலீஸாரால் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

ரஜினியின் வருகையை எதிர்பார்த்து அவருடைய ரசிகர்கள் அனைவரும் விமான நிலைய பிரதான நுழைவு வாயிலில் மேள தாளம், ஆட்டம் பாட்டம் என அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இரவு 9.40 மணியளவில் விமானநிலைய 6-வது வாயில் (விஐபி பிரிவு) வழியாக அவர் வருகிறார் என்று தகவல் வெளியானது.

இதையடுத்து ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் 6-வது வாயிலில் கூடினார்கள். இரவு 10 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினிகாந்த் வந்திறங்கினார்.

வாயிலின் முகப்பில் நின்றிருந்த தனது காருக்கு வந்த ரஜினிகாந்த், ரசிகர்களைப் பார்த்ததும் தனது பாணியில் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி 3 முறை வணக்கம் தெரிவித்து கையசைத்தார்.

வெள்ளைத் தாடியுடன் காணப்பட்ட ரஜினிகாந்த் நீல நிற ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிற சட்டை, கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தார்.

அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யா, குடும்பத்தினர் மற்றும் டாக்டர்களும் வந்திருந்தனர்.Topics: rajini, chennai return, ரசிகர்கள் உற்சாகம், rajini fans, ரஜினி

ஈராக்கில் இலங்கையர் போராட்டத்துக்கு வெற்றி

ஈராக்கில் ஊதியத்துக்காக போராடி வந்த இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் மூவாயிரம் அமெரிக்க டொலர்களும் நாடு திரும்புவதற்காக விமானச் சீட்டும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

அரச பேச்சாளரான அலி அல்-தபாக் குறித்த உறுதி மொழியை அளித்துள்ளார்.

குறித்த ஊதியம் வழங்காத நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

விதன்டாவாதம் பேசி அபிவிருத்தியை அடைய முடியாதாம் - சொல்கிறார் வி.முரளி

எதிர்கட்சியில் இருந்து கொண்டு விதன்டாவாதம் பேசினால் அபிவிருத்தியை அனுபவிக்க முடியாது என மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அதனைவிடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் மாத்திரமே அபிவிருத்தியை அடைய முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பதியூதினும் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டார்.

வடக்கில் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள அங்குள்ள தமிழ் மக்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அவர் இங்கு உரையாற்றினார்.

மேலதிக தகவல்களுக்கு காணொளியை பார்வையிடுக...

மும்பாயில் தொடர் குண்டுவெடிப்பு - இந்தியா முழுதும் பதற்றம்

மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்துள்ளன. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது. இதே போல், ஜாவேரி பஜார் பகுதியில் 2வது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மூன்றாவது குண்டுவெடிப்பு தெற்கு மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்புகளில், 4 பேர் பலியானதாகவும், 100 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து மும்பை முழுவதும் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலால் மும்பையில் பதட்டம் நிலவுகிறது. மும்பை குண்டுவெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலை நோக்கிய தமிழர் போராட்டமும் முன்னெடுக்க வேண்டிய ஊடகங்களும்.

விடுதலை நோக்கிய தமிழர் போராட்டமும் முன்னெடுக்க வேண்டிய ஊடகங்களும்.

இலங்கை அரசானது சர்வதேசத்தின் அழுத்தங்களையும் மீறி, மனித உரிமை சட்டங்களையும் மீறி, தமிழினத்திற்கெதிரான தொடர்ச்சியான இன அழிப்பினை நடத்தி வருகின்றது.

மக்களின் விடுதலை நோக்கிய உண்மை நிலவரங்களை வெளிப்படுத்தி மக்களுக்கு சரியான பாதையினைக் காட்டுவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு என்பதில் சந்தேகமில்லை.

தமிழர்களுக்கென தமிழர்களின் ஒட்டு மொத்த குரலாக விளங்கிய தமிழ்த் தேசிய தொலைக்காட்சியினை பயங்கரவாதத்தினால் நடத்தப்படுகின்ற தொலைக்காட்சியெனப் பொய்ப்; பிரச்சாரங்களை மேற்கொண்டு தமிழர்களின் விம்பத்தை நசுக்கியது இலங்கை அரசு. புவுஏ (புடழடியட வுயஅடை ஏளைழைn) ஆனது, அந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கு என்றொரு தொலைக்காட்சி சேவை வேண்டும் என்ற காலத்தின் தேவை கருதி அநேக தமிழ் மக்களின் ஆதரவையும் பெற்று வளரத் தொடங்கியது.

தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவூட்டுமுகமாகவும், மக்களை விழிப்படையச் செய்யுமுகமாகவும் பல நிகழ்ச்சிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்திருந்தது. எனினும் அண்மைக் காலங்களில் நடைபெற்ற சில மாற்றங்கள், தமிழர்களுக்கான தொலைக்காட்சி சேவை என்று நம்பப்பட்ட புவுஏ விலை போகத் தொடங்கிவிட்டதோ, அல்லது வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இயங்குகின்றதோ, என்ற சந்தேகங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

அனைத்தயும் இழந்து அநாதரவாக நிற்கின்ற தமிழ் இனத்திற்கு வலுச் சேர்க்க வேண்டிய ஊடகங்களே தமிழினக் கொள்கைகளில் இருந்து விலகி நிற்பது தமிழ் மக்களை மிகுந்த வேதனையடையச் செய்கின்றது.

புலம் பெயர் தேசங்களில் தமிழ் மக்களால் நடத்தப்படுகின்ற போராட்டங்களைக் காட்சிப்படுத்துவதிலும், தொகுத்து வழங்குவதிலும் பின் நிற்பதும், அவற்றிற்கான விளம்பரங்களுக்கு கூட கட்டணம் அறவிட்டு காட்சிப்படுத்துவதும் வெட்கக்கேடான விடயமாகும்.

பிரித்தானியாவில் வாழ்கின்ற தமிழர்கள், தமிழின அழிப்பிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகையில் 10.07.2011 புவுஏஇல் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குமார் சங்ககாரவின் செவ்வியினைக் காட்சிப்படுத்தியிருப்பது வேதனைக்குரிய விடயமே.

இலங்கை அரசானது துடுப்பாட்டத்தினை உலக நாடுகளிடையே நடத்தி;, தமிழினத்திற்கெதிரான பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கும், தமிழினப் படுகொலைகளுக்கெதிரான சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் முயன்று வருகின்றது.

இதற்கெதிராக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு தொடர்ச்சியான புறக்கணிப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற வேளையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குமார் சங்ககார வழங்கிய செவ்வியினை ஒளிபரப்பி இருப்பது தமிழர்களின் போராட்டங்களுக்கு எதிராக செய்யப்படுவதாகவே கருத முடியும். எனவே தமிழின விடுதலையினை வென்றெடுக்க வேண்டும் என்று முழுமனதாக நினைக்கின்ற எந்த ஒரு தமிழனும் சிந்திக்க வேண்டிய காலமிது.

எந்தவொருவகையிலும் தமிழின விடுதலைக்கு எதிராக செயற்படுகின்ற ஊடகங்களாக இருந்தாலும், அமைப்புக்களாக இருந்தாலும், தனிநபராக இருந்தாலும், அவர்கள் எமது இனத்திற்கும், விடுதலைக்கும் எதிரானவர்கள் என்றே கருத முடியும்.

எனவே இவ்வாறான செற்பாடுகளை இனங்காணுமிடத்து அவற்றினைத் தட்டிக் கேட்பதுடன் தொடர்ச்சியாக இவ்வாறு இடம்பெற்றால் அவ்வாறான ஊடகங்களைப் புறக்கணிப்பதிலும் ஈடுபட வேண்டும்.

அன்பான புவுஏபாவனையாளர்களே, புவுஏயினைத் தொடர்பு கொண்டு இந்த செவ்வியினை காட்சிப்படுத்தியதற்கான விளக்கத்தினைக் கேட்பதுடன், இனி வரும் காலங்களில் இவ்வாறான ஒளிபரப்புகளை தவிர்க்குமாறு புவுஏயினை வலியுறுத்துமாறு கேட்டக்கொள்கின்றோம்.

ஒன்றிணைந்து போராடி விடுதலையை விரைவாக வென்றெடுப்போம்.

றொபேட்

மீண்டும் மக்களை ஏமாற்றும் களத்தில் த.தே.கூட்டமைப்பு - டக்ளஸ் பாய்ச்சல்

தமிழ் மக்கள் ஓரணியில் நின்று ஒற்றுமையின் பலத்தை உலகுக்கு காட்ட வேண்டும் என்று கூறியே கால காலமாக பெற்று வந்த அரசியல் பலத்தை வைத்து சுயலாப அரசியல் தலைமைகள் இதுவரை எதைச் சாதித்திருக்கின்றார்கள் என்றும், பெற்றிருந்த அரசியல் பலத்தை அழிவுகளுக்காக அன்றி ஆக்கத்தை நோக்கி பயன்படுத்தியிருக்கவில்லையே என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட்டமைப்பை நோக்கி பகிரங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் அமைந்துள்ள கம்பர் சன சமூக நிலைய மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் இக்கேள்வியை எழுப்பியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் கூறுகையில்….

தமிழ் மக்களின் ஒற்றுமை என்பது அவசியமானது. ஆனாலும் அதை தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளை அபகரிப்பதற்கான வெற்றுக்கோசமாக பயன்படுத்துவதையே நான் வெறுக்கின்றேன்.

77 இல் ஒற்றுமையை உலகுக்கு காட்டுங்கள் என்றும், தனிநாட்டு கோரிக்கைக்கு ஆணை வழங்குங்கள் என்றும் மக்களிடம் கோரியிருந்தார்கள். தமிழ் மக்களும் இவர்களை நம்பித்தான் வாக்களித்திருந்தார்கள்.

இவர்களால் நரம்புகள் முறுக்கேற்றப்பட்டு உசுப்பிவிடப்பட்ட இளைஞர் யுவதிகளும் அப்பாவி மக்களும் நடுத்தெருவில் நின்ற போது இவர்கள் மட்டும் தமிழ் நாட்டிற்கு ஓடிச்சென்று தனிவீடுகள் பெற்று தமது குடும்பங்களோடு ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இது போலவே அதற்குப் பின்னரும் கிடைத்திருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுயலாப அரசியல் தலைமைகள் வழங்கிய தேர்தல்கால வாக்குறுதிகளை நம்பி தமிழ் மக்கள் தமது ஒற்றுமையின் பலத்தைக் காட்டி ஏமாந்திருக்கிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டிருந்த அரசியல் தீர்வினை அரசாங்கத்தோடு கலந்து பேசி தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மாறாக, அன்றைய எதிர்க்கட்சிகளோடு இணைந்து நின்று அந்த தீர்வுத்திட்டத்தை தெருவில் இறங்கி எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தும், பாராளுமன்றத்தில் வைத்து எரித்து கொழுத்தியும் தமிழ் மக்களுக்கு வரலாற்று துரோகமிழைத்தனர்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்திலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் ஆட்சிக்கு வந்திருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களிடமிருந்து பெற்ற அரசியல் பலத்தை அழிவுகளுக்காக அன்றி எமது மக்களின் அரசியலுரிமைக்காக ஒரு போதும் பயன்படுத்த விரும்பியிருக்கவில்லை.

2004 இல் தாம் பெற்றிருந்த 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற பலத்தை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எமது மக்களை அழிவுகளில் இருந்து காப்பாற்றியிருக்கலாம், எமது அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம். அல்லது இவர்கள் கூறுவது போல் அந்த பலத்தை வைத்து சர்வதேச சமூகத்தின் ஊடாக அன்றே எமது மக்களின் தலைவிதியை மாற்றியமைத்திருக்கலாம்.

ஆனாலும் அதற்கு மாறாக, தாம் பெற்ற பாராளுமன்ற பலத்தை தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரை இட்டு சென்று அழிவுகளையும், அவலங்களையும் மட்டுமே அவர்கள் மீது சுமத்துவதற்கு பிரதான காரணியாக தமிழ் தேசிய கூட்டமைப்பினரே இருந்திருக்கிறார்கள்.

ஆகவே, இது வரை கால வரலாற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும், அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் தமது வாக்குப்பலத்தை வழங்கியதால் ஏமாந்து போனவர்களாக மட்டுமன்றி தாம் அழிந்து போன வரலாறுகளையே கண்டிருக்கின்றார்கள்.

இதை தமிழ் மக்கள் உணரத்தொடங்கியிருக்கும் இத்தருணத்தில் எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை மட்டும் அபகரிக்கும் கபட நோக்கத்தில் ஒற்றுமையின் பலத்தை உலகுக்கு காட்டுங்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களை இன்னொரு தடைவை ஏமற்ற எத்தனித்து வருகின்றனர்.

இவ்வாறு தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவறான அரசியல் தலைமைகளுக்கு வாக்களித்து அன்றாட அவலங்களுக்கான தீர்வும் இன்றி, அபிவிருத்தியும் இன்றி,

அரசியல் தீர்வும் இன்றி ஏமாற்றப்பட்டவர்களாக அல்லாமல் ஆக்க பூர்வமான இணக்க அரசியல் வழிமுறையின் பக்கம் அணிதிரள்வதே சிறந்த வழிமுறையாகும் என்றே இப்போது சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மகிந்தா சிந்தனை -சிங்கள நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்ட வேளை கைது ..!

மகிந்தா சிந்தனை -சிங்கள நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்ட வேளை கைது ..!  தென் இலங்கை சிங்கள தொலை காட்சி நடிகைகள் இருவர் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த போது காவல் துறையினரால் கைது செய பட்டுள்ளனர் . இவ்வாறு கைது செய்ய பட்ட இரு நடிகைகளுடன் இருபது வயது நிரம்பிய பெண்களும் உடன் இருந்து விபச்சாரத்தில்ஈடுபட்டுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது . ஒவ்வொரு வாடிக்கை யாளர்களிடமும்  ஐயாயிரம் ரூபாய்களை பெற்று கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் .குறித்த சநதேக நபர்களை காவல்துறையினர் நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர் .!நாப்பத்தி ஐந்து வயது நபருடன் உறவில் இருந்த போதே குறித்த பெண்கள் இருவரும் கைது செய்ய பட்டுள்ளனர் .பிற பெண்முஸ்லிம் என தெரிவிக்க பட்டுள்ளது ..!

பேருந்துக்குள் வைத்து 15வயது பெண் கற்பழிப்பு -பேருந்து நடத்துனர் கைது ..!

பேருந்துக்குள் வைத்து 15வயது பெண் கற்பழிப்பு -பேருந்து நடத்துனர் கைது ..!#gallery-1 {margin: auto;}#gallery-1 .gallery-item {float: left;margin-top: 10px;text-align: center;width: 33%;}#gallery-1 img {border: 2px solid #cfcfcf;}#gallery-1 .gallery-caption {margin-left: 0;}raperape

 கோரவபத்தான பேருந்து திரிப்பிடத்தில் வைத்து பதின் ஐந்து அகவையுடைய  சிறுமி ஒருத்தியைஅந்த பேருந்து நடத்துனர் கற்பழித்துள்ளார் . டியுசனுக்கு காலை  சென்ற பெண் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் அவரை தேடி சென்ற போதே இந்தகற்பழிப்பு நடைபெற்றுள்ளது கண்டறிய பட்டுள்ளது . குறித்த பெண்ணை பேருந்தில் வைத்து கற்பழித்த பின்னர் கொட்டலுக்கு அழைத்துசென்று அங்கு வைத்தும் தொடராக கற்பழித்த பின்னர் பேருந்துக்குள் இருவரும் நின்றவேளையேமகளை தேடி சென்ற பெற்றோர்கள் பேருந்துக்கில் இருவரும் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில்காவல்துறையினரிடன் தெரிவித்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்ய பட்டுள்ளார் . பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .>!

ஒரு காதலிக்காக சண்டை பிடித்த இரு காதலன்கள் -..!

ஒரு காதலிக்காக சண்டை பிடித்த இரு காதலன்கள் -..!  சிகிரியா பகுதியில் இரு நண்பர்கள் குடித்து விட்டு கடந்த மூன்று வருடங்களிற்கு  முன்னர் ஒரு இளம் பெண்ணைஇருவரும் காதலித்துள்ளனர் . அந்த நினைவுகளினால் தாக்கம்  அடைந்தவர்கள்  சண்டையில் ஈடுபட்டனர் . இவ்வாறு காதலித்த இருவரில் ஒருவர் அந்த பெண்ணை மணம் முடித்து விட்டார் . ஆனால் சில காலம் கழிய பிற நபருடன் குறித்த பெண் இரண்டாம் மணம் முடித்து ஓடிவிட்டார் . இந்த நிலையில்  இருவரும் சந்தித்த போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது . இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில்  அனுமதிக்க பட்டுள்ளார் .பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன .>!

சங்கிலியன் சிலை இடித்து அகற்றப்படுகின்றது

சங்கிலியன் சிலை இடித்து அகற்றப்படுகின்றது

யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்து அகற்றப்படுகின்றது.

சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இப்போதுள்ள சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியச் சிற்பியின் கைவண்ணத்தில் புதிய அழகிய சிலை நிறுவப்படும் என்று யாழ்.மாநகரசபை ஆணையாளர் மு.செ.சரவணபவ தெரிவித்தார்.புதிய சிலை அமைப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். யாழ்.மாநகரசபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக சங்கிலிய மன்னனது நினைவுத் தூபியை உயிரோட்டமுள்ளதாக மீள நிர்மாணிப்பதாக முடிவெடுக்கப்பட்டது.

தற்போது, சங்கிலிய மன்னனது சிலை முற்றாக இடித்தழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்தியச் சிற்பியான புருசோத்தமன் அந்தச் சிலையை மீள உயிரோட்டமுள்ளதாக நிர்மாணிக்க உள்ளார். சபை நிதி ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1500 செங்கற்களும் 10 சீமெந்துப் பைக்கற்றுகளும் வழங்கவுள்ளோம். மாநகர சபை ஊழியர்களும் நிர்மாண வேலையில் பங்கேற்க உள்ளனர் என்றார்  ஆணையாளர். மீள அமைக்கப்படும் இந்தச் சிலையில் சங்கிலிய மன்னனின் வாளேந்தும் போக்கில் சிறு மாறுதல் செய்யப்படவுள்ளதாக மாநகர சபையின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவித்தன

நாய்க்கூட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த 65 வயது தாய் பொலிஸாரால் மீட்பு

நாய்க்கூட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த 65 வயது தாய் பொலிஸாரால் மீட்பு

மாத்தறை, நூப்பே பிரதேச வீடொன்றிலுள்ள இருட்டறையொன்றை நாய்க்கூடு வடிவில்  வடிவமைத்து அதனுள் நாயுடன் தங்க வைக்கப்பட்டிருந்த 65 வயது மூதாட்டி ஒருவரை மாத்தறை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நான்கு பிள்ளைகளின் தாயாரான மேற்படி மூதாட்டி குறித்த நாய்க் கூட்டினுள்ளேயே காலத்தைக் களித்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே மாத்தறை பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரிவு அவரை மீட்டுள்ளது.

குறித்த கூண்டுக்குள்ளிருந்த நாய், மேற்படி மூதாட்டி அங்கிருந்து வெளியே செல்லாது பாதகாத்து வந்ததாகவும் குறித்த நாயை அங்கிருந்து அகற்றிய பின்னரே அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளை இந்தியா ஆதரிக்கும் நிலைமை வரும்.

விடுதலைப் புலிகளை இந்தியா ஆதரிக்கும் நிலைமை வரும்.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவோடு எப்போது கடுமையான முரண்பாடு ஏற்படுகின்றதோ அப்போது விடுதலைப் புலிகளை இந்தியாவே ஆதரிக்கும் நிலை வரும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக  விடுதலை சிறுத்தைகள் கட்சியால் கையெழுத்து இயக்கம் சென்னையில் நேற்று ஆரம்பிக்கப் பட்டது. கட்சித் தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டு இதனை ஆம்பித்து வைத்தார்.

இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

மத்திய அரசை சர்வதேச சமூகம் மட்டும்தான் பணிய வைக்க முடியும். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே ஈழம் மலரக் கூடாது என்பது தான். என்றைக்கு ராஜபக்ஷவோடு இந்தியாவுக்கு கடுமையான முரண்பாடு ஏற்படுகிறதோ, அன்றைக்கு இந்தியாவே விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் நிலை வரும். புலிகளை ஆதரித்து ஈழம் வாங்கித் தருகிறோம் என்ற நிலைப்பாட்டை எடுப்பார்கள்.

இந்திராகாந்தி அம்மையார் அன்றைக்கு ஜெயவர்த்தன அரசை மிரட்டுவதற்காக போராளிகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து பயிற்சி கொடுத்தார். போராளிகள் யாரும் அதைக் கேட்க வில்லை. அன்றைக்கு அவர்களுக்கு பயிற்சி கொடுத்ததும் இந்திய அரசுதான். ஆயுதங்கள் கொடுத்ததும் இந்திய அரசுதான்.

ஐந்து குழுக்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து, ஜெயவர்த்தனவுக்கு எதிராக கலவரங்களை ஏற்படுத்துங்கள் என்று கூறியது இந்திய அரசு தான். ஜெயவர்த்தன பணிந்த பின்னர், ஆயுதங்களைக் கீழே போடுமாறு போராளிகளிடம் சொன்னார்கள். அப்போது பிரபாகரன் மட்டும் அதனை மறுத்தார். உங்களுக்காக ஒன்றும் நாம் ஆயுதம் ஏந்தவில்லை. எங்களுக்காகத் தான் ஆயுதம் ஏந்தினோம் என்று அன்று கூறினார்.  இது தான் அவர்களுக்கிடையே இருக்கும் முரண்பாடாகும் என்றார் அவர்.

இந்தியாவில் இலங்கை குறித்து பேசமாட்டாராம் ஹிலாரி

சென்னைக்கு ஜூலை 19ம் திகதி விஜயம் செய்யவுள்ள ஹிலாரி கிளிண்டன் இலங்கை குறித்தோ அல்லது வெளிநாட்டு கொள்கைகள் குறித்தோ கலந்துரையாடமாட்டார் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தகுற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகளுக்கு இடங்கொடுக்க வேண்டும் என அமெரிக்க வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வீதி அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பம்

நீண்ட காலமாக திருத்தப்படாத யாழ் வீதிகள் அனைத்தும் 447 மில்லியன் ரூபா செலவில் காப்பற் வீதிகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட 33 வீதிகள் காப்பற் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

கைலாச பிள்ளையார் கோவில் முற்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தெழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறுவர் வலுவூட்டல் மற்றும் மகளீர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திர சிறி, யாழ்.நகர மேயர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் யாழ்.மாசகர சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தும்முல்லை - ரெதிமோல் வரையிலான வீதி நாளை மாலை பூட்டு

ஜனாதிபதியின் தலைமையில் பள்ளி மாணவர்கள் 12 ஆயிரம் பேர் பங்கு கொள்ளும் எசல மாஹா சிசு பெரஹரா நாளை இடம்பெறவுள்ளதனால் தும்முல்லை தொடக்கம் ரெதிமோல் வரையிலான வீதி நாளை மாலை 4 மணி தொடக்கம் 6.30 வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு முதல்முறை இடம்பெறவுள்ளதுடன் இன மத பேதமின்றி மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எசல மாஹா சிசு பெரஹரா ஆனது ஒவ்வொரு வெசாக் போயாதினத்திலும் முன்னெடுக்ப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிகழ்வில் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜீ.எல்.பீரிஸ் பாகிஸ்தான் விஜயம்

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்துக்கு நாளை விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாகிஸ்தான் ஜனாதிபதி அஷீப் அலி சர்தாரியுடன் கலந்துரையாடவுள்ளார்.

ஆதாரங்களை தாருங்கள் சந்தேக நபரை கைது செய்கிறோம் - நெவின் பத்மதேவ

குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை எமக்கு தெளிவாக தாருங்கள் நாங்கள் உடன் சந்தேக நபர்களைக் கைது செய்கின்றோம் என யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவின் பத்மதேவ தெரிவித்துள்ளார்.

யாழ்.உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமார் தலமையில் விஷேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், யாழில் தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மற்றும் முறைப்பாடுகள் நிறையக் கிடைக்கப்பெற்றுள்ளன இது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலின் போது யாழ். உதவித்தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கலந்து கொண்டு கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

இந்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகள், ஈபிடிபி கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சுயேட்சைக்குழு பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

தென் சூடான் போன்று தமிழீழம் கேட்கும் வைகோ

நீண்ட காலமாக திருத்தப்படாத யாழ் வீதிகள் அனைத்தும் 447 மில்லியன் ரூபா செலவில் காப்பற் வீதிகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட 33 வீதிகள் காப்பற் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

கைலாச பிள்ளையார் கோவில் முற்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தெழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறுவர் வலுவூட்டல் மற்றும் மகளீர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திர சிறி, யாழ்.நகர மேயர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் யாழ்.மாசகர சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடங்கி விடும் நிலையில் 'சன் பிக்சர்ஸ்'?

Wednesday, Jul 13, 2011தமிழ்த் திரையுலகைப் புரட்டிப் போட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் இனிமேல் எழ முடியாது என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத நிறுவனங்கள் எத்தனையோ. ஏவிஎம், ஜெமினி என பல நிறுவனங்கள் சகாப்தங்களைக் கண்ட திரையுலகம் தமிழ். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இவை எதுவுமே தமிழில் படமெடுக்க முடியாத நிலை. இவர்களை விட மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் சிறு படத் தயாரிப்பாளர்கள்தான். சிறிய அளவிலான முதலீட்டில் படம் எடுத்து அதில் வரும் லாபத்தை வைத்து பிழைத்து வந்தவர்கள் இவர்கள்.

இப்படி அத்தனை பேரின் பிழைப்பிலும் கிட்டத்தட்ட மண்ணைப் போட்டு மூடிய நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்கிறார்கள் அதனால் பாதிக்கப்பட்ட திரையுலகினர்.

எங்கிருந்தோ வந்த டைனசோர் போல தடாலடியாக வந்து திரையுலகத்தையே வளைத்துப் போட்டு விட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது திரையுலகினரின் கருத்து.

ஆரம்பத்தி்ல விநியோகத்தில் இறங்கியது சன் பிக்சர்ஸ். அதாவது படத்தை எடுத்து முடித்து விட்டு அதை வெளியிட்டால் லாபம் கிடைக்குமா, நஷ்டம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களை அணுகி, அவர்களது தயாரிப்புச் செல்வை முழுமையாக கையில் கொடுத்து படத்தை அப்படியே வாங்கியது சன் பிக்சர்ஸ்.

இது ரிஸ்க் எடுக்கும் வாய்ப்பைக் குறைத்து, லாபத்தையும் கொடுத்ததால் பல தயாரிப்பாளர்கள் சன் பிக்சர்ஸிடம் படத்தைக் கொடுக்க முண்டியடித்தனர். ஆனால் அது நாளடைவில் சன் பிக்சர்ஸிடம்தான் படத்தைக் கொடுத்தாக வேண்டும் என்ற கஷ்ட காலத்திற்கு தயாரிப்பாளர்களைத் தள்ளி விட்டது.

ஆரம்பத்தில் சன் பிக்சர்ஸ் காட்டிய வழி சிறப்பாக இருப்பதாக கருதிய தயாரிப்பாளர்களுக்கு, பின்னர்தான் அது திரும்பி வரவே முடியாத ஒத்தையடிப் பாதை என்பது தெரிய வந்து திடுக்கிட்டனர்.

ஆனால் அவர்கள் விழித்து எழுவதற்குள் ரெட் ஜெயன்ட் மூவிஸ், கிளவுட் நைன் மூவிஸ் என்று கருணாநிதி குடும்பத்தினர் படையெடுத்து வந்து விட்டனர். இதனால் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ், தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என முக்கோணச் சிக்கலில் மாட்டிக் கொண்டனர் தமிழ்த் திரையுலகினர். எப்படி 'பெர்முடா' முக்கோணத்தில் சிக்கினால் அதோ கதியோ, அதே நிலைதான் தமிழ்ச் சினிமாக்காரர்களுக்கும் ஏற்பட்டது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்தனை காலத்தில் வாங்கி விநியோகித்த படங்களின் எண்ணிக்கை 18 ஆகும். அவர்கள் வாங்கி விநியோகித்த முதல் படம் காதலில் விழுந்தேன். கடைசியாக விநியோகித்த படம் எங்கேயும் காதல்.

சன் பிக்சர்ஸ் இதுவரை ஒரே ஒரு படத்தை மட்டுமே தயாரித்துள்ளது. அது ரஜினிகாந்த் நடித்த எந்திரன். இப்படத்தின் மூலம் ரூ. 179 கோடி அளவுக்கு சன் பிக்சர்ஸ் லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸால், சன் டிவிக்கு கிடைத்து வந்த லாபம் கிட்டத்தட்ட 11.5 சதவீதமாகும்.

சன் பிக்சர்ஸ் மீது தற்போது பெருமளவில் மோசடிப் புகார்களும், பண முறைகேடு புகார்களும் குவி்ந்து வருவதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவிலேயே முடங்கி விடும் என்று திரையுலகில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அஸ்தமனத்தில் 'சன் பிக்சர்ஸ்'?

தமிழ்த் திரையுலகைப் புரட்டிப் போட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் இனிமேல் எழ முடியாது என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத நிறுவனங்கள் எத்தனையோ. ஏவிஎம், ஜெமினி என பல நிறுவனங்கள் சகாப்தங்களைக் கண்ட திரையுலகம் தமிழ். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இவை எதுவுமே தமிழில் படமெடுக்க முடியாத நிலை. இவர்களை விட மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் சிறு படத் தயாரிப்பாளர்கள்தான். சிறிய அளவிலான முதலீட்டில் படம் எடுத்து அதில் வரும் லாபத்தை வைத்து பிழைத்து வந்தவர்கள் இவர்கள்.

இப்படி அத்தனை பேரின் பிழைப்பிலும் கிட்டத்தட்ட மண்ணைப் போட்டு மூடிய நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்கிறார்கள் அதனால் பாதிக்கப்பட்ட திரையுலகினர்.

எங்கிருந்தோ வந்த டைனசோர் போல தடாலடியாக வந்து திரையுலகத்தையே வளைத்துப் போட்டு விட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது திரையுலகினரின் கருத்து.

ஆரம்பத்தி்ல விநியோகத்தில் இறங்கியது சன் பிக்சர்ஸ். அதாவது படத்தை எடுத்து முடித்து விட்டு அதை வெளியிட்டால் லாபம் கிடைக்குமா, நஷ்டம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களை அணுகி, அவர்களது தயாரிப்புச் செல்வை முழுமையாக கையில் கொடுத்து படத்தை அப்படியே வாங்கியது சன் பிக்சர்ஸ்.

இது ரிஸ்க் எடுக்கும் வாய்ப்பைக் குறைத்து, லாபத்தையும் கொடுத்ததால் பல தயாரிப்பாளர்கள் சன் பிக்சர்ஸிடம் படத்தைக் கொடுக்க முண்டியடித்தனர். ஆனால் அது நாளடைவில் சன் பிக்சர்ஸிடம்தான் படத்தைக் கொடுத்தாக வேண்டும் என்ற கஷ்ட காலத்திற்கு தயாரிப்பாளர்களைத் தள்ளி விட்டது.

ஆரம்பத்தில் சன் பிக்சர்ஸ் காட்டிய வழி சிறப்பாக இருப்பதாக கருதிய தயாரிப்பாளர்களுக்கு, பின்னர்தான் அது திரும்பி வரவே முடியாத ஒத்தையடிப் பாதை என்பது தெரிய வந்து திடுக்கிட்டனர்.

ஆனால் அவர்கள் விழித்து எழுவதற்குள் ரெட் ஜெயன்ட் மூவிஸ், கிளவுட் நைன் மூவிஸ் என்று கருணாநிதி குடும்பத்தினர் படையெடுத்து வந்து விட்டனர். இதனால் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ், தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என முக்கோணச் சிக்கலில் மாட்டிக் கொண்டனர் தமிழ்த் திரையுலகினர். எப்படி 'பெர்முடா' முக்கோணத்தில் சிக்கினால் அதோ கதியோ, அதே நிலைதான் தமிழ்ச் சினிமாக்காரர்களுக்கும் ஏற்பட்டது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்தனை காலத்தில் வாங்கி விநியோகித்த படங்களின் எண்ணிக்கை 18 ஆகும். அவர்கள் வாங்கி விநியோகித்த முதல் படம் காதலில் விழுந்தேன். கடைசியாக விநியோகித்த படம் எங்கேயும் காதல்.

சன் பிக்சர்ஸ் இதுவரை ஒரே ஒரு படத்தை மட்டுமே தயாரித்துள்ளது. அது ரஜினிகாந்த் நடித்த எந்திரன். இப்படத்தின் மூலம் ரூ. 179 கோடி அளவுக்கு சன் பிக்சர்ஸ் லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸால், சன் டிவிக்கு கிடைத்து வந்த லாபம் கிட்டத்தட்ட 11.5 சதவீதமாகும்.

சன் பிக்சர்ஸ் மீது தற்போது பெருமளவில் மோசடிப் புகார்களும், பண முறைகேடு புகார்களும் குவி்ந்து வருவதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவிலேயே முடங்கி விடும் என்று திரையுலகில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.Topics: sun pictures, sun tv, hansraj saxena, kalanidhi maran, tamil cinema, சன் பிக்சர்ஸ், சன் டிவி, சக்சேனா, கலாநிதி மாறன், தமிழ் சினிமா

ஸ்ருதியுடன் நடிக்க மறுத்தாரா தனுஷ்?

இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கப் போவது அவர் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் புதிய படம்தான் என்பது உறுதியாகியுள்ளது.

கமல் மகள் ஸ்ருதிதான் இந்தப் படத்தின் நாயகி என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இடையில், ஸ்ருதியுடன் தனுஷ் நடிக்க மறுத்தார் என்று வந்த செய்திகளில் உண்மையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

படத்தில் நடிப்பது குறித்து ஸ்ருதியுடன் ஐஸ்வர்யாவே பேசி வருகிறாராம். எனவே கண்டிப்பாக அவர் நடிப்பது உறுதி என்கிறார்கள் ஐஸ்வர்யா தரப்பில்.

ரஜினியின் வருகைக்குப் பிறகு இந்தப் படத்தை அறிவிக்கக் காத்திருந்தார் ஐஸ்வர்யா. இன்று ரஜினி வருகிறார். எனவே இந்த வாரம் பட அறிவிப்பு வரக்கூடும்.

ரஜினியின் வாழ்த்துடன் ஆகஸ்டில் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.Topics: தனுஷ், ஸ்ருதி, ஐஸ்வர்யா ரஜினி, danush, sruthi hassan, aishwarya rajini

இலங்கைக்கு எரிபொருட்களை அனுப்பக்கூடாது - டி.ராஜேந்தர்

இலங்கைக்கு இந்தியாவிலிருந்து பெற்றோல், டீசல், எரிவாயு பொருட்களை மத்திய அரசு அனுப்பக்கூடாது என லட்சிய தி.மு.க. நிறுவனத்தலைவர் டி.ராஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பெற்றோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும். அப்போது தான் ஈழத்தமிழர்களின் கண்ணீருக்கு விடை கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசு, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் மத்திய அரசு அதை என்ன செய்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

லக்விஜிய மின் நிலையத்தில் 300 மெகாவொட் மின் உற்பத்தி

தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்து காணப்பட்ட லக்விஜிய மின் நிலையம் திருத்த வேலைகளின் பின் செயற்பட ஆரம்பித்துள்ளதாக மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுகிழமை லக்விஜிய மின் நிலைய மின் உற்பத்தி காலை 2.40 மணியளவில் 100 மெகாவொட்டினால் அதிகரிக்கப்பட்டது. பின்பு அதேநாள் மாலை 70 மெகாவொட் அதிகரிப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்றையதினம் 50 மெகாவொட் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி நேற்றுக்காலை 09.40 மணியளவில் எதிர்பார்க்கபட்ட 300 மெகாவொட்டை அண்மித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சங்கக்கார மீதான விசாரணை அவசியமற்றது

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மேற்கொண்ட உரைமீது விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு கிரிக்கெட் வீரராக அவர் இதயத்தில் இருந்து வெளிவந்த வார்த்தைகள் தான் அந்த உரையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பிரச்சினைகள் தற்போது இரண்டாக அதிகரித்துள்ளதாகவும், அதில் முதலாவது தருஸ்மன் அறிக்கை எனவும் இரண்டாவது கிரிக்கெட் சபைப் பிரச்சனை எனவும் அவர் தெரவித்துள்ளார்.

இந்நிலையில் உப்புல் தரங்கவிற்கு மருத்துவ சேவை வழங்கிய எளியந்த வைட் தொடர்பான நிலைப்பாடு என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு சூரியவெவ மைதானத்திட்டம் 2006ல் மேற்கொள்ளப்பட்டதாகவும் 2011ல் அதற்கான செலவு அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது ஆனால் சூரியவெவ திட்டம் 2009ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது எனவும் 2009ல் இருந்து 2011 வரை பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை உலகக்கிண்ண போட்டியில் இறுதியாக இலங்கை அணி பங்கேற்ற போட்டியில் இலங்கை அணி வீரர்களில் நான்கு பேர் சுகவீனம் காரணமாக பங்கேற்கவில்லை, அவர்களுக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் எவ்வாறு தெரிவுசெய்யப்பட்டனர் என தெளிவுபடுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹைகோப் வழக்கு ஓகஸ்ட் 4ம் திகதிக்கு ஒத்திவைப்பு

முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத்பொன்சேகா மற்றும் அவரது மருமகன் தனுன திலகரட்னவுக்கு எதிரான ஹைகோப் வழக்கு விசாரணையை கொழும்பு மேல்நீதிமன்றம் ஓகஸ்ட் 4ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இன்றைய வழக்கு விசாரணைக்காக சரத்பொன்சேகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

எனினும் சரத்பொன்சேகா தரப்பு சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுகவீனம் காரணமாக இன்று வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு ஆஜராகி இருக்கவில்லை.

இதனையடுத்து கொழும்பு மேல்நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 4ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

குத்துப் பாட்டா வேண்டவே வேண்டாம்: பிரியங்கா சோப்ரா

Wednesday, Jul 13, 2011பாலிவுட்டில் குத்துப்பாட்டுக்கு நான், நீ என போட்டி போட்டு ஆடிக் கொண்டிருக்கையில் குத்துப் பாட்டுக்கு ஆட மாட்டேன் என்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

பாலிவுட்டின் முன்னணி கவர்ச்சி நாயகி பிரியங்கா சோப்ரா(28). பாலிவுட்டில் தற்போது குத்துப் பாட்டில்லாத படமே இல்லை எனலாம். இந்த குத்துப் பாட்டிற்கு குத்தாட்டம் போட முன்னணி நாயகிகள் எல்லாம் போட்டி போடுகின்றனர். அங்கு குத்துப் பாட்டு அவ்வளவு பிரபலம்.

இந்நிலையில் குத்துப் பாட்டே வேண்டாம் என்கிறார் பிரியங்கா சோப்ரா. தற்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி குத்துப் பாட்டுக்கு ஆடும் எண்ணமே இல்லை என்கிறார் அவர்.

இதற்கிடையே அனில் கபூர், அஜய் தேவ்கன் மற்றும் கங்கனா ரனௌத் நடிக்கும் இயக்குனர் பிரியதர்ஷனின் தேஸ் படத்தில் பிரியங்கா ஒரு பாட்டிற்கு மட்டும் வந்து குத்தாட்டம் போடுவார் என்று பேசப்படுகிறது. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் பிரியங்காவின் செய்தித் தொடர்பாளர்.

எனினும் தீபாவளிக்கு வெளியாகும் ஷாருக் கானின் ரா ஒன் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் பிரியங்கா.