Wednesday, July 13, 2011

விதன்டாவாதம் பேசி அபிவிருத்தியை அடைய முடியாதாம் - சொல்கிறார் வி.முரளி

எதிர்கட்சியில் இருந்து கொண்டு விதன்டாவாதம் பேசினால் அபிவிருத்தியை அனுபவிக்க முடியாது என மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அதனைவிடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் மாத்திரமே அபிவிருத்தியை அடைய முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பதியூதினும் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டார்.

வடக்கில் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள அங்குள்ள தமிழ் மக்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அவர் இங்கு உரையாற்றினார்.

மேலதிக தகவல்களுக்கு காணொளியை பார்வையிடுக...

0 comments:

Post a Comment