Wednesday, July 13, 2011

யாழில் வீதி அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பம்

நீண்ட காலமாக திருத்தப்படாத யாழ் வீதிகள் அனைத்தும் 447 மில்லியன் ரூபா செலவில் காப்பற் வீதிகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட 33 வீதிகள் காப்பற் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

கைலாச பிள்ளையார் கோவில் முற்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தெழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறுவர் வலுவூட்டல் மற்றும் மகளீர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திர சிறி, யாழ்.நகர மேயர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் யாழ்.மாசகர சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment