Wednesday, July 13, 2011

விடுதலை நோக்கிய தமிழர் போராட்டமும் முன்னெடுக்க வேண்டிய ஊடகங்களும்.

விடுதலை நோக்கிய தமிழர் போராட்டமும் முன்னெடுக்க வேண்டிய ஊடகங்களும்.

இலங்கை அரசானது சர்வதேசத்தின் அழுத்தங்களையும் மீறி, மனித உரிமை சட்டங்களையும் மீறி, தமிழினத்திற்கெதிரான தொடர்ச்சியான இன அழிப்பினை நடத்தி வருகின்றது.

மக்களின் விடுதலை நோக்கிய உண்மை நிலவரங்களை வெளிப்படுத்தி மக்களுக்கு சரியான பாதையினைக் காட்டுவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு என்பதில் சந்தேகமில்லை.

தமிழர்களுக்கென தமிழர்களின் ஒட்டு மொத்த குரலாக விளங்கிய தமிழ்த் தேசிய தொலைக்காட்சியினை பயங்கரவாதத்தினால் நடத்தப்படுகின்ற தொலைக்காட்சியெனப் பொய்ப்; பிரச்சாரங்களை மேற்கொண்டு தமிழர்களின் விம்பத்தை நசுக்கியது இலங்கை அரசு. புவுஏ (புடழடியட வுயஅடை ஏளைழைn) ஆனது, அந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கு என்றொரு தொலைக்காட்சி சேவை வேண்டும் என்ற காலத்தின் தேவை கருதி அநேக தமிழ் மக்களின் ஆதரவையும் பெற்று வளரத் தொடங்கியது.

தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவூட்டுமுகமாகவும், மக்களை விழிப்படையச் செய்யுமுகமாகவும் பல நிகழ்ச்சிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்திருந்தது. எனினும் அண்மைக் காலங்களில் நடைபெற்ற சில மாற்றங்கள், தமிழர்களுக்கான தொலைக்காட்சி சேவை என்று நம்பப்பட்ட புவுஏ விலை போகத் தொடங்கிவிட்டதோ, அல்லது வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இயங்குகின்றதோ, என்ற சந்தேகங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

அனைத்தயும் இழந்து அநாதரவாக நிற்கின்ற தமிழ் இனத்திற்கு வலுச் சேர்க்க வேண்டிய ஊடகங்களே தமிழினக் கொள்கைகளில் இருந்து விலகி நிற்பது தமிழ் மக்களை மிகுந்த வேதனையடையச் செய்கின்றது.

புலம் பெயர் தேசங்களில் தமிழ் மக்களால் நடத்தப்படுகின்ற போராட்டங்களைக் காட்சிப்படுத்துவதிலும், தொகுத்து வழங்குவதிலும் பின் நிற்பதும், அவற்றிற்கான விளம்பரங்களுக்கு கூட கட்டணம் அறவிட்டு காட்சிப்படுத்துவதும் வெட்கக்கேடான விடயமாகும்.

பிரித்தானியாவில் வாழ்கின்ற தமிழர்கள், தமிழின அழிப்பிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகையில் 10.07.2011 புவுஏஇல் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குமார் சங்ககாரவின் செவ்வியினைக் காட்சிப்படுத்தியிருப்பது வேதனைக்குரிய விடயமே.

இலங்கை அரசானது துடுப்பாட்டத்தினை உலக நாடுகளிடையே நடத்தி;, தமிழினத்திற்கெதிரான பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கும், தமிழினப் படுகொலைகளுக்கெதிரான சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் முயன்று வருகின்றது.

இதற்கெதிராக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு தொடர்ச்சியான புறக்கணிப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற வேளையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குமார் சங்ககார வழங்கிய செவ்வியினை ஒளிபரப்பி இருப்பது தமிழர்களின் போராட்டங்களுக்கு எதிராக செய்யப்படுவதாகவே கருத முடியும். எனவே தமிழின விடுதலையினை வென்றெடுக்க வேண்டும் என்று முழுமனதாக நினைக்கின்ற எந்த ஒரு தமிழனும் சிந்திக்க வேண்டிய காலமிது.

எந்தவொருவகையிலும் தமிழின விடுதலைக்கு எதிராக செயற்படுகின்ற ஊடகங்களாக இருந்தாலும், அமைப்புக்களாக இருந்தாலும், தனிநபராக இருந்தாலும், அவர்கள் எமது இனத்திற்கும், விடுதலைக்கும் எதிரானவர்கள் என்றே கருத முடியும்.

எனவே இவ்வாறான செற்பாடுகளை இனங்காணுமிடத்து அவற்றினைத் தட்டிக் கேட்பதுடன் தொடர்ச்சியாக இவ்வாறு இடம்பெற்றால் அவ்வாறான ஊடகங்களைப் புறக்கணிப்பதிலும் ஈடுபட வேண்டும்.

அன்பான புவுஏபாவனையாளர்களே, புவுஏயினைத் தொடர்பு கொண்டு இந்த செவ்வியினை காட்சிப்படுத்தியதற்கான விளக்கத்தினைக் கேட்பதுடன், இனி வரும் காலங்களில் இவ்வாறான ஒளிபரப்புகளை தவிர்க்குமாறு புவுஏயினை வலியுறுத்துமாறு கேட்டக்கொள்கின்றோம்.

ஒன்றிணைந்து போராடி விடுதலையை விரைவாக வென்றெடுப்போம்.

றொபேட்

0 comments:

Post a Comment