Wednesday, July 13, 2011

மும்பாயில் தொடர் குண்டுவெடிப்பு - இந்தியா முழுதும் பதற்றம்

மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்துள்ளன. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது. இதே போல், ஜாவேரி பஜார் பகுதியில் 2வது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மூன்றாவது குண்டுவெடிப்பு தெற்கு மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்புகளில், 4 பேர் பலியானதாகவும், 100 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து மும்பை முழுவதும் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலால் மும்பையில் பதட்டம் நிலவுகிறது. மும்பை குண்டுவெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment