Wednesday, July 13, 2011

லக்விஜிய மின் நிலையத்தில் 300 மெகாவொட் மின் உற்பத்தி

தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்து காணப்பட்ட லக்விஜிய மின் நிலையம் திருத்த வேலைகளின் பின் செயற்பட ஆரம்பித்துள்ளதாக மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுகிழமை லக்விஜிய மின் நிலைய மின் உற்பத்தி காலை 2.40 மணியளவில் 100 மெகாவொட்டினால் அதிகரிக்கப்பட்டது. பின்பு அதேநாள் மாலை 70 மெகாவொட் அதிகரிப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்றையதினம் 50 மெகாவொட் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி நேற்றுக்காலை 09.40 மணியளவில் எதிர்பார்க்கபட்ட 300 மெகாவொட்டை அண்மித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment