Wednesday, Jul 13, 2011பாலிவுட்டில் குத்துப்பாட்டுக்கு நான், நீ என போட்டி போட்டு ஆடிக் கொண்டிருக்கையில் குத்துப் பாட்டுக்கு ஆட மாட்டேன் என்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.
பாலிவுட்டின் முன்னணி கவர்ச்சி நாயகி பிரியங்கா சோப்ரா(28). பாலிவுட்டில் தற்போது குத்துப் பாட்டில்லாத படமே இல்லை எனலாம். இந்த குத்துப் பாட்டிற்கு குத்தாட்டம் போட முன்னணி நாயகிகள் எல்லாம் போட்டி போடுகின்றனர். அங்கு குத்துப் பாட்டு அவ்வளவு பிரபலம்.
இந்நிலையில் குத்துப் பாட்டே வேண்டாம் என்கிறார் பிரியங்கா சோப்ரா. தற்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி குத்துப் பாட்டுக்கு ஆடும் எண்ணமே இல்லை என்கிறார் அவர்.
இதற்கிடையே அனில் கபூர், அஜய் தேவ்கன் மற்றும் கங்கனா ரனௌத் நடிக்கும் இயக்குனர் பிரியதர்ஷனின் தேஸ் படத்தில் பிரியங்கா ஒரு பாட்டிற்கு மட்டும் வந்து குத்தாட்டம் போடுவார் என்று பேசப்படுகிறது. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் பிரியங்காவின் செய்தித் தொடர்பாளர்.
எனினும் தீபாவளிக்கு வெளியாகும் ஷாருக் கானின் ரா ஒன் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் பிரியங்கா.
0 comments:
Post a Comment