Wednesday, July 13, 2011

சங்கக்கார மீதான விசாரணை அவசியமற்றது

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மேற்கொண்ட உரைமீது விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு கிரிக்கெட் வீரராக அவர் இதயத்தில் இருந்து வெளிவந்த வார்த்தைகள் தான் அந்த உரையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பிரச்சினைகள் தற்போது இரண்டாக அதிகரித்துள்ளதாகவும், அதில் முதலாவது தருஸ்மன் அறிக்கை எனவும் இரண்டாவது கிரிக்கெட் சபைப் பிரச்சனை எனவும் அவர் தெரவித்துள்ளார்.

இந்நிலையில் உப்புல் தரங்கவிற்கு மருத்துவ சேவை வழங்கிய எளியந்த வைட் தொடர்பான நிலைப்பாடு என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு சூரியவெவ மைதானத்திட்டம் 2006ல் மேற்கொள்ளப்பட்டதாகவும் 2011ல் அதற்கான செலவு அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது ஆனால் சூரியவெவ திட்டம் 2009ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது எனவும் 2009ல் இருந்து 2011 வரை பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை உலகக்கிண்ண போட்டியில் இறுதியாக இலங்கை அணி பங்கேற்ற போட்டியில் இலங்கை அணி வீரர்களில் நான்கு பேர் சுகவீனம் காரணமாக பங்கேற்கவில்லை, அவர்களுக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் எவ்வாறு தெரிவுசெய்யப்பட்டனர் என தெளிவுபடுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment