Wednesday, July 13, 2011

ஸ்ருதியுடன் நடிக்க மறுத்தாரா தனுஷ்?

இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கப் போவது அவர் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் புதிய படம்தான் என்பது உறுதியாகியுள்ளது.

கமல் மகள் ஸ்ருதிதான் இந்தப் படத்தின் நாயகி என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இடையில், ஸ்ருதியுடன் தனுஷ் நடிக்க மறுத்தார் என்று வந்த செய்திகளில் உண்மையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

படத்தில் நடிப்பது குறித்து ஸ்ருதியுடன் ஐஸ்வர்யாவே பேசி வருகிறாராம். எனவே கண்டிப்பாக அவர் நடிப்பது உறுதி என்கிறார்கள் ஐஸ்வர்யா தரப்பில்.

ரஜினியின் வருகைக்குப் பிறகு இந்தப் படத்தை அறிவிக்கக் காத்திருந்தார் ஐஸ்வர்யா. இன்று ரஜினி வருகிறார். எனவே இந்த வாரம் பட அறிவிப்பு வரக்கூடும்.

ரஜினியின் வாழ்த்துடன் ஆகஸ்டில் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.Topics: தனுஷ், ஸ்ருதி, ஐஸ்வர்யா ரஜினி, danush, sruthi hassan, aishwarya rajini

0 comments:

Post a Comment