Wednesday, July 13, 2011

ஹைகோப் வழக்கு ஓகஸ்ட் 4ம் திகதிக்கு ஒத்திவைப்பு

முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத்பொன்சேகா மற்றும் அவரது மருமகன் தனுன திலகரட்னவுக்கு எதிரான ஹைகோப் வழக்கு விசாரணையை கொழும்பு மேல்நீதிமன்றம் ஓகஸ்ட் 4ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இன்றைய வழக்கு விசாரணைக்காக சரத்பொன்சேகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

எனினும் சரத்பொன்சேகா தரப்பு சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுகவீனம் காரணமாக இன்று வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு ஆஜராகி இருக்கவில்லை.

இதனையடுத்து கொழும்பு மேல்நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 4ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

0 comments:

Post a Comment