Wednesday, July 13, 2011

குளவி தாக்கி பெண் மரணம் - மஸ்கெலியாவில் சம்பவம்

மலையகத்தில் மஸ்கெலியா என்னும் இடத்தில் உள்ள குமரித்தோட்டம் என்ற பகுதியில் குளவிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

தேயிலை பறிக்கச் சென்ற பெண் ஒருவரே இதில் பலியானவராவார்.

நேற்று தொழிலாளர்கள் தமது தேயிலை பறிக்கும் பணிக்காகச் சென்றபோது, அங்கு இருந்த குளவிக் கூடு ஒன்று கலைந்து, அதில் இருந்த குளவிகள் தொழிலாளர்களைத் தாக்கியுள்ளதாகவும், அதனால் அவர்கள் காயமடைந்ததாகவும் அங்குள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து காயமடைந்த 12 பேர், 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஸ்கெலிய அரசினர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பயனளிக்காமல் அவர்களில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும் அந்தச் செய்தியாளர் கூறியுள்ளார் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment