நாய்க்கூட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த 65 வயது தாய் பொலிஸாரால் மீட்பு
மாத்தறை, நூப்பே பிரதேச வீடொன்றிலுள்ள இருட்டறையொன்றை நாய்க்கூடு வடிவில் வடிவமைத்து அதனுள் நாயுடன் தங்க வைக்கப்பட்டிருந்த 65 வயது மூதாட்டி ஒருவரை மாத்தறை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நான்கு பிள்ளைகளின் தாயாரான மேற்படி மூதாட்டி குறித்த நாய்க் கூட்டினுள்ளேயே காலத்தைக் களித்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே மாத்தறை பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரிவு அவரை மீட்டுள்ளது.
குறித்த கூண்டுக்குள்ளிருந்த நாய், மேற்படி மூதாட்டி அங்கிருந்து வெளியே செல்லாது பாதகாத்து வந்ததாகவும் குறித்த நாயை அங்கிருந்து அகற்றிய பின்னரே அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment