சனல் 4 தொலைக்காட்சிக்கு யுத்தகுற்றங்கள் எனக்கூறப்படும் காணொளிகளை வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் 71 இறுவட்டுக்களுடன் கைது செய்யப்பட்டவரை ஓகஸ்ட் 2 ம் திகதி வரை தடுத்துவைக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் குற்றப் புலனாய்வுத் துறையினர் பொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
நந்தவனம் ஜெகதீஸ்வரம் என்ற நபரே சனல் 4 சேவைக்கு அடிப்படை காணொளிகளை வழங்கியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
அவர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்த 71 இறுவட்டுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபரை ஓகஸ்ட் 2ம் திகதி வரை தடுத்து வைக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளது.
0 comments:
Post a Comment