This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Saturday, July 16, 2011

இன விகிதாசார அடிப்படையில் ஆட்சேர்ப்பு - பொன்.செல்வராசா எதிர்ப்பு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு இன விகிதாசார அடிப்படையில் ஆட்களை திரட்டுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சேவைக்கு ஆட்களைத் திரட்டுவது தொடர்பாக மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் போட்டிப் பரீட்சையொன்றை நடத்துவதற்கான அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், கூடுதலான புள்ளிகளைப் பெற்றவர்கள், அரச நிர்வாக சுற்றறிக்கை (15/90)ன்படி இன விகிதாசார அடிப்படையிலேயே இந்த சேவைக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரினால் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அரச நிர்வாக சுற்றறிக்கை ஏற்கனவே நீதிமன்ற உத்தரவின் பேரில் பல வருடங்களுக்கு முன்னர் இரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, அதன் பின்னர் தான் அறிந்தவரை இன விகிதாசார அடிப்படையில் நியமனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.

சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசினால் இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்திரட்டல் நடைபெற்ற போதும் திறமை அடிப்படையிலேயே சுமார் 250 பேர் தெரிவானார்கள். இதில் தமிழ் பேசும் எவரும் தெரிவாகவில்லை. இன விகிதாசார அடிப்படை பேணப்பட்டிருந்தால் 40 - 50 பேர்வரை அதில் தமிழ் பேசும் இனத்தவர்கள் தெரிவாக வாய்ப்பு கிடைத்திருந்திருக்கும் என்றும் சுட்டிக் காட்டினார் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா.

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளருக்கு தான் அனுப்பி வைத்துள்ள ஆட்சேபனைக் கடிதத்தில் திறமை அடிப்படையில் ஆட்தெரிவு இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

தனது கடிதத்திற்கு பதில் கிடைக்காவிட்டால் அல்லது சாதகமான முடிவு கிடைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இது தொடர்பாக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு அதிகாரிகளின் கருத்துக்களை உடனடியாகப் பெற முடியவில்லை.

இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்தியா மௌனமாக உள்ளது

இலங்கை பிரச்சனை, ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புவோம் என இந்திய கம்யூனியஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் :-

இலங்கையில் யுத்தம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்தும் அங்கு இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஏற்படவில்லை. இலங்கையில் யுத்தத்தின் போது நடைபெற்ற மனித மீறல்களின் இறுவட்டுக்களைப் பார்த்து பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளின் வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது.

ஆனால் இலங்கை பிரச்சினையில் சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் இந்தியா மௌனமாக உள்ளது. இலங்கை பிரச்சனை என்பது தமிழக மக்களின் பிரச்சினை மட்டுமல்லாது தேசிய அளவிலான பிரச்சினை ஆகும். இதனையும் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது கேள்வி எழுப்புவோம், என்றார்.

ஈரானின் உதவியை மறுத்தது இலங்கை

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் வெளியீட்டினை 50,000 பரல்களில் இருந்து 100,000 பரல்களாக அதிகரிக்கும் ஈரானின் உதவி செயற்திட்டத்தினை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது சபுகஸ்கந்தயில் நாளந்தம் 40,000 பரல்கள் சுத்திகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹனிமூனுக்கு ஆஸ்திரியா புறப்பட்ட‌ கார்த்தி : றஞ்சனி

Sunday, Jul 17, 2011கல்யாணம் முடிந்த கையோடு ஆஸ்திரியாவுக்கு ஹனிமூன் கொண்டாட பறந்துவிட்டார்கள் கார்த்தியும் அவர் மனைவி ரஞ்சனியும். ஐரோப்பியாவில் உள்ள ஆஸ்திரியா அழகிய மலைகள், கண்கவர் ஏரிகள், அதிவேக நதிகள், அடர்ந்த காடுகளுக்குப் பெயர் பெற்றது. ஆபத்தில்லாத அழகிய நாடு.

கல்யாணம் முடிந்ததுமே இங்குதான் ஹனிமூன் செல்ல வேண்டும் எனக் கூறிவிட்டாராம் கார்த்தி. அடுத்த வாரம் வரை ஆஸ்திரியாவில் ஹனிமூன் கொண்டாடும் கார்த்தி தம்பதி, வரும் 20ம் தேதி சென்னை திரும்புகிறது. அதன் பிறகு நேராக சகுனி படப்பிடிப்பில் பங்கேற்கவிருக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தை இயக்குபவர் சங்கர் தயாள். ஏற்கெனவே கணிசமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

மனைவி வந்த நேரம், இந்தப் படம் பெரிய அளவுக்குப் பேசப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளார் கார்த்தி.

இரு பேருந்து நேரெதிர் மோதல் -இருவர் பலி ..15பேர் காயம் !

இரு பேருந்து நேரெதிர் மோதல் -இருவர் பலி ..15பேர் காயம் !இன்று காலை கிரிபத்கும்புற  சாந்தி  கண்டி -கொழும்பு பிரதான வீதியில்நேரெதிர் இரு பேருந்துகள் மோதியதில் இருவர் ஸ்தலத்தில் பலியாகினர் . மேலும் பதின் ஐந்து பேர்  படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்த அனைவரும்  கண்டி போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர் என காவல்துறை பேச்சாளர் ப்ரிஷந்த  ஜெயகொடி தெரிவித்துள்ளார் .!

இலங்கையில் அதிகரித்து வரும் ஆண் -பெண் ஓரினசேர்க்கை ..!

இலங்கையில் அதிகரித்து வரும் ஆண் -பெண் ஓரினசேர்க்கை ..! இலங்கையில் ஒரே பாலின உறவுகள்  அதிகரித்து வருகிறது,சமுக நல தளமான FACEBOOKஊடாக இலங்கை சேர்ந்த ஆண் பெண்கள் இணைந்திருக்கும் ஓரின சேர்க்கைகாட்சி படங்கள் வெளியாகியுள்ளன .  இலங்கையில் இவ்வாறான செயல் பாடுகள் மக்களினால் ஏற்று கொள்ள முடியாத  சூழல்உருவாகி உள்ள நிலையில் இந்த செயற்கை  மாற்றம் அதிகரித்து வருவதாக சமுக நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளன . ..!!

இலங்கையில் கர்ப்பமாகும் 12,13வயது சிறுமிகள் -..!

இலங்கையில் கர்ப்பமாகும் 12,13வயது சிறுமிகள் -..!  Mahaweli பகுதிகளில் பன்னிரண்டு பதின்மூன்று வாயதான பெண்கள்கர்ப்பம் அடைந்துள்ளனர் . இவர்களிற்கு திருமணம் செய்து கொடுக்க பட்டு வெளியில் தெரியாத படிஇவர்களது திருமண உறவு முறைகள் மறைக்க  பட்டுள்ளன . இவ்வாறு அண்மையில் சிறு வயதுடைய சிறுமிகள்கர்ப்பம்மாகியுள்ளது கண்டு பிடிக்க பட்டதாக வட மத்திய மாகாண சுகாதார அமைச்சர் Peshala ஜயரத்னதெரிவித்துள்ளார் ..!

15நாளில் 1684டெங்கு நோயாளர்கள் மருத்துவ மனையில் அனுமதி ..!

15நாளில் 1684டெங்கு நோயாளர்கள் மருத்துவ மனையில் அனுமதி ..! இலங்கையில் பதின் ஐந்து நாளில் 1684நோயாளர்கள் மருத்துவ மனையில்  அனுமதிக்க பட்டுள்ளனர் .இந்தவருடம் 4632பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர் . குறித்த ஏழு மாத  கால பகுதியில் 93பேர் பலியாகியுள்ளனர் எனEpidemiology Unit of the Health Ministry தெரிவித்துள்ளது ..!

வடக்கில் ஏழு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறப்பு ..!

இலங்கையில் அதிகரித்து வரும் ஆண் -பெண் ஓரினசேர்க்கை ..! இலங்கையில் ஒரே பாலின உறவுகள்  அதிகரித்து வருகிறது,சமுக நல தளமான FACEBOOKஊடாக இலங்கை சேர்ந்த ஆண் பெண்கள் இணைந்திருக்கும் ஓரின சேர்க்கைகாட்சி படங்கள் வெளியாகியுள்ளன .  இலங்கையில் இவ்வாறான செயல் பாடுகள் மக்களினால் ஏற்று கொள்ள முடியாத  சூழல்உருவாகி உள்ள நிலையில் இந்த செயற்கை  மாற்றம் அதிகரித்து வருவதாக சமுக நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளன . ..!!

கிழக்கில் ஐந்து பாலங்கள் கட்ட ஜப்பான் 1,4 மில்லியன் நிதி அளிப்பு ..!

கிழக்கில் ஐந்து பாலங்கள் கட்ட ஜப்பான் 1,4 மில்லியன் நிதி அளிப்பு ..!இலங்கை கிழக்கில் ஜப்பான் நாட்டின் உதவியின் அடிப்படையில் ஐந்து பாலங்கள் கட்ட பட உள்ளன .Peradeniya -Badulla - செங்கலடி வீதியில் நான்கு பாலங்கள் . Batticaloa  - Tirikkondiadimadu - திருமலை  வீதியில் ஒரு பாலம் கட்ட பட உள்ளதாகதெரிவிக்க பட்டுள்ளது ..!

11 வருடங்களின் பின் கொடிகாமம் - பருத்தித்துறை இடையிலான வீதி திறப்பு

11 வருடங்களின் பின்னர் கொடிகாமம் - பருத்தித்துறைக்கு இடையிலான பாதை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ் மற்றும் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரஸ்ரீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வின் பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

காஷ்மீரில் சபையர் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர் கைது

மூன்று இலங்கையர்கள் உட்பட நான்கு பேர் காஷ்மீர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சபையர் கடத்தல்கார சர்வதேச கும்பலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் உலோகங்கள் லிமிடெட் நிறுவனத்தின் சில உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதன் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள சபையர்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தலுடன் JKML சில உயர் அதிகாரிகள் தொடர்புபட்டிருக்கிறார்கள் என சந்தேகிப்பதாக காஷ்மீர் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வெளியில் இருந்து சில நபர்கள் சர்வதேச சந்தையில் Padder சுரங்கங்களில் இருந்து உலக புகழ்பெற்ற நீல சபையர் கடத்தல் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபு ஹஸனின் மகள் மொஹமட் இக்ரம், Zaabur பின் சுல்தான் Izakoreஇன் மகன் முஹம்மது ஷா பின் காசிம் பின் Hattar, மற்றும் அஹர் அல் Zehrat என்பவரின் மகன் Akber காசிம் ஆகிய இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என காஸ்மீர் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையில் அமைதியான தீர்வு உருவாவதை இந்தியா அப்போதே எதிர்த்தது - கசிவு

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு அமைதியான ஒரு தீர்வை எட்டும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் 2007ம் ஆண்டு தமிழ்நாடு சிவில் சமூக அமைப்பை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியதாக புதிய தகவல் கிளம்பியுள்ளது.

சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த இரகசிய விடயம் குறித்த செய்தியை சர்வதேச செய்தித் தளமொன்று வெளியிட்டுள்ளது.

எனினும் அவ்வாறானதொரு அமைதியான தீர்வுக்கு வருவதை இந்திய அரசாங்கம் எதிர்த்ததாக தமிழ்நாடு சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டாளராக செயற்பட்ட முன்னாள் நிர்வாக அதிகாரியும் சமூக ஆர்வளருமான எம்.ஜீ.தேவசகாயம் தெரிவித்துள்ளார்.

தான் ஏற்பாட்டாளராக செயற்பட்ட குறித்த சிவில் சமூகக் குழுவில் ஓய்வுபெற்ற சிவில் சேவையாளர்கள், சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் எனப்பலர் உள்ளடங்கியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சிவில் சமூகக் குழுவின் முதல் அமர்வு ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ஒருவர் தலைமையில் சென்னையில் 2007ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி இடம்பெற்றதாகவும் இனப்பிரச்சனைக்கான ஒரே தீர்வு அரசியல் தீர்வு என அக்கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் எம்.ஜீ.தேவசகாயம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் குறித்து 2007ம் ஆண்டு ஜூலை 17ம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளை தமது சிவில் சமூக அமைப்பு சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் காலங்கடந்து கூறியுள்ளார்.

கொழும்பின் சில வீதிகளில் இன்று போக்குவரத்து நெரிசல்

கொழும்பு நகரின் சில வீதிகளில் இன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

பிலியந்தலை விகாரையின் வருடாந்த பெரஹரா இன்றிரவு வீதி உலா வருகிறது.

இதன்படி ஹொரண - கொழும்பு, கொட்டாவை - கல்கிஸ்ஸை மற்றும் மஹரகம கல்கிஸ்ஸை வீதிகளில் இன்றிரவு 7 மணியிலிருந்து நள்ளிரவுவரை போக்குவரத்து நெரிசல் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் குறித்த வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து தடங்களை தவிர்க்கும் வகையில் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நித்தியானந்தா முன்பு ஆனந்த நடனமாடிய நடிகை ரஞ்சிதா !

Saturday, Jul 16, 2011தன்னை சாமியார் என்று கூறிக் கொள்ளும் நித்தியானந்தா, நேற்று பெங்களூரில் உள்ள பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழாவை கொண்டாடினார். இந்த விழாவின் போது நடிகை ரஞ்சிதா நித்தியானந்தா முன்பு நடனம் ஆடினார்.

பெங்களூர் அருகே உள்ள பிடரியில் நித்யானந்தாவின் ஆசிரமம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள் பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு நேற்று பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது. இந்த குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அவர் நித்யானந்தா சாமியாருக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது நித்யானந்தா ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கினார்.

பின்னர் நித்யானந்தா அங்கு வந்திருந்த அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். அப்போது நடிகை ரஞ்சிதா திடீரென எழுந்து துள்ளி துள்ளி குதித்தபடி ஆனந்த நடனம் ஆடினார். அவரைப் போல் ஏராளமான பெண்களும் உற்சாக நடனம் ஆடினர். சில பெண்கள் தரையில் படுத்து உருண்டனர்.

கடந்த ஒன்றரை வருடங்களாக வெளி உலகில் தலைகாட்டாத இருவரும், இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அதன் பிறகு வெளி உலகத்தில் தைரியமாக தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாய்பாபா படத்தில் நடிக்கும் சச்சின்.?

Saturday, Jul 16, 2011ஸ்ரீசத்ய சாய்பாபா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் புதிய படத்தில் சச்சின் டெண்டுல்கரை நடிக்க வைக்க இயக்குநர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில் மரணமடைந்த ஸ்ரீசத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார் பிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.

தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு 'பாபா சத்யசாயி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா கூறுகையில், "சாய்பாபா படத்தில் தெண்டுல்கர், காவஸ்கர் ஆகியோரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறோம். அவர்கள் இப்படத்தில் நடித்தால் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இப்படத்தை வெளியிடலாம். பட வசூலும் நன்றாக இருக்கும்.

இருவருமே பாபாவின் பெரிய பக்தர்கள் என்பதால், நடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இப்படத்தில் நடிக்க நடிகை ஜமுனா ஒப்புக் கொண்டுள்ளார். வேறு நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது," என்றார்.

பேரக்குழந்தைகளால் முடிவை மாற்றினார் ரஜினிகந் !

Saturday, Jul 16, 2011ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.அப்போது பூரண குணமடைந்து  உற்சாகமாக காணப்பட்பார்.  விமான நிலையத்தில் தன்னை வரவேற்க திரண்ட ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ரஜினிக்கு ஓய்வு தேவைப்படுவதால் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் தங்குவார் என கூறப்பட்டது. இதற்காக அந்த வீட்டில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் மராமத்து பணிகள் நடந்து வருகின்றன. அந்த வீடு வாஸ்துப்படி மாற்றி அமைக்கப்படுகிறது. எனவே கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு போய் விடுவார் என்றனர். ஆனால் ரஜினி பண்ணை வீட்டுக்கு போகவில்லை.போயஸ்கார்டன் வீட்டிலும் தங்கவில்லை. ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் மூத்த மகள் ஐஸ்வர்யா வீடு இருக்கிறது. கணவர் தனுஷ் மற்றும் குழந்தைகளுடன் அவர் அந்த வீட்டில் வசிக்கிறார். ரஜினி நேராக ஐஸ்வர்யா வீட்டுக்கு சென்றார். ரஜினி தங்குவதற்காக அவ்வீட்டின் அறைகள் பிரத்யேகமாக புதுப்பிக்கப்பட்டு உள்ளன. ரஜினி கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு போகத்தான் முதலில் விரும்பினாராம். உறவினர்களும் அதே மனநிலையில் இருந்தனர். ஆனால் பேரக்குழந்தைகள் யாத்ரா, லிங்காவை பார்க்க முடியாது என்பதற்காக பண்ணை வீட்டுக்கு போவதை ரத்து செய்து விட்டார். குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்வதற்காகவே ஐஸ்வர்யா வீட்டில் தங்கியுள்ளார். பேரக்குழந்தைகளுடன் விளையாடுவது ரஜினிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு புறம் “ராணா” படவேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

பஸ் பின்கண்ணாடி ஒட்டுப்படம், திரைச்சீலை அகற்றுமாறு கோரிக்கை

கொழும்பு நகருக்குள் நுழையும் அனைத்து பஸ்களின் பின்பக்கக் கண்ணாடியில் காணப்படும் ஒட்டுப்படம் மற்றும் திரைச்சீலை என்பவற்றை எதிர்வரும் ஜூலை 20ம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்புக்குள் நுழையும் பஸ்களின் பின்பக்கக் கண்ணாடியில் பஸ்ஸின் வீதி இலக்கம் மாத்திரமே பொருத்தப்பட்டிருக்க வேண்டுமென பொலிஸ் தலைமைகயம் தெரிவித்துள்ளது.

ஜீலை 20ம் திகதிக்கு பின்னர் இந்த சட்டதிட்டத்தை கடைபிடிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வவுனியா சிறையில் மேலும் 40 தமிழ் கைதிகள் உண்ணாவிரம் - சிலர் கவலைக்கிடம்

வவுனியா சிறைச்சாலையில் தங்களை விடுவிக்ககோரி மேற்கொண்டுவரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் 40 சிறைக்கைதிகள் போராட்டத்தில் இன்று சனிக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக தங்கள் மீதான விசாரணைகளை உடனடியாக மேற்கொண்டு தங்களது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு கோரி அரசியல் கைதிகள் தொடராக உண்ணாவிரத போராத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக மேலும் 40பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கும் கைதிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காலத்துக்கு காலம் தமிழ் அரசியல் கைதிகள் போராட்டம் மேற்கொண்டுவருகின்றபோதிலும் அரசாங்கம் அது தொடர்பில் கவனத்தில் கொள்வதில்லை.

தேர்தல் காலம் நெருங்கியுள்ள இந்த வேளையில் வடக்குக்கு படையெடுக்கும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் இந்த அரசியல் கைதிகள் தொடர்பில் அக்கரைகொள்ளாதது அவர்களது சுயநலத்தை வெளிக்காட்டி நிற்கின்றது.

தமிழ் அரசியல்கைதிகள் தொடர்பில் பல்வேறு தடவைகள் ஜனாதிபதி, சட்டமா அதிபர், நீதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.

இந்த நிலை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது. இன்று சிறைச்சாலையில் பலர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கையில் உருவாகக் காரணமாகவிருந்தவர்கள் இன்று சுதந்திரமாக அரசாங்கத்தின் ஆதரவுடன் உல்லாசம் அனுபவித்துவரும் வேளையில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடுவது வேதனையளிப்பதாகவுள்ளது.

எனவே ஜனாதிபதி, நீதியமைச்சர், சட்டமா அதிபர் இனியாவது இந்த அரசியல் கைதிகளின் நிலையினை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கையெடுக்க வேண்டும்.

இல்லாது போனால் இன்று வவுனியாவில் ஆரம்பித்துள்ள போராட்டம் நாளை இலங்கை முழுவதும் பரவலாம். இவற்றை தடுக்க காத்திரமான நடவடிக்கையினை ஜனாதிபதி எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரியபொலவில் மினி சூறாவளி - 6 வீடுகளுக்கு சேதம்

வாரியபொல கரகஸ்வெவ பிரதேசத்தில் இன்று அதிகாலை வீசிய மினி சூறாவளியின் காரணமாக 6 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த மினி சூறாவளி இன்று அதிகாலை 4.30 மணியளவில் வீசியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இதன்போது கரகஸ்வெவ விகாரைக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.

வீடுகளுக்கு ஏற்பட்ட சேத விபரங்களை பார்வையிட சிரேஸ்ட அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அங்கு சென்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சக்சேனா, அய்யப்பன் மீது வல்லக்கோட்டை தயாரிப்பாளரும் புகார்

சென்னை: சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.

இந்த வழக்குக்கு காரணமான புகாரைக் கொடுத்திருப்பவர் வல்லக்கோட்டை படத் தயாரிப்பாளர். இந்த வழக்கிலும் சக்சேனா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களான செல்வராஜ், சண்முகவேல், ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது கூட்டாளி அய்யப்பனை, போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

சில வழக்குளில் சக்சேனாவையும், அவரது கூட்டாளி ஐயப்பனையும், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

15ம் தேதி வெள்ளிக்கிழமை, சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ 50 லட்சம் மோசடி

சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராஜா, வல்லக்கோட்டை என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தின் வினியோகம் தொடர்பான விவகாரத்தில், 50 லட்சம் ரூபாயை சக்சேனா மோசடி செய்து விட்டதாக, ராஜா, விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

அப்புகாரின் பேரில், சக்சேனா மற்றும் அவரது கூட்டாளி அய்யப்பன் ஆகியோரை கைது செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற மனுவை அரசு வக்கீல்கள் கோபிநாத், மேரி ஜெயந்தி ஆகியோர், சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர்.

அம்மனுவை ஏற்றுக்கொண்டு, வரும் 29ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி உத்தரவிட்டார்.Topics: hansraj saxena, வல்லக்கோட்டை, ஹன்ஸ்ராஜ் சக்சேனா, vallakkottai, மோசடி