Saturday, Jul 16, 2011தன்னை சாமியார் என்று கூறிக் கொள்ளும் நித்தியானந்தா, நேற்று பெங்களூரில் உள்ள பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழாவை கொண்டாடினார். இந்த விழாவின் போது நடிகை ரஞ்சிதா நித்தியானந்தா முன்பு நடனம் ஆடினார்.
பெங்களூர் அருகே உள்ள பிடரியில் நித்யானந்தாவின் ஆசிரமம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள் பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு நேற்று பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது. இந்த குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அவர் நித்யானந்தா சாமியாருக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது நித்யானந்தா ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கினார்.
பின்னர் நித்யானந்தா அங்கு வந்திருந்த அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். அப்போது நடிகை ரஞ்சிதா திடீரென எழுந்து துள்ளி துள்ளி குதித்தபடி ஆனந்த நடனம் ஆடினார். அவரைப் போல் ஏராளமான பெண்களும் உற்சாக நடனம் ஆடினர். சில பெண்கள் தரையில் படுத்து உருண்டனர்.
கடந்த ஒன்றரை வருடங்களாக வெளி உலகில் தலைகாட்டாத இருவரும், இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அதன் பிறகு வெளி உலகத்தில் தைரியமாக தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment