Saturday, July 16, 2011

சாய்பாபா படத்தில் நடிக்கும் சச்சின்.?

Saturday, Jul 16, 2011ஸ்ரீசத்ய சாய்பாபா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் புதிய படத்தில் சச்சின் டெண்டுல்கரை நடிக்க வைக்க இயக்குநர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில் மரணமடைந்த ஸ்ரீசத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார் பிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.

தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு 'பாபா சத்யசாயி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா கூறுகையில், "சாய்பாபா படத்தில் தெண்டுல்கர், காவஸ்கர் ஆகியோரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறோம். அவர்கள் இப்படத்தில் நடித்தால் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இப்படத்தை வெளியிடலாம். பட வசூலும் நன்றாக இருக்கும்.

இருவருமே பாபாவின் பெரிய பக்தர்கள் என்பதால், நடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இப்படத்தில் நடிக்க நடிகை ஜமுனா ஒப்புக் கொண்டுள்ளார். வேறு நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது," என்றார்.

0 comments:

Post a Comment