Saturday, Jul 16, 2011ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.அப்போது பூரண குணமடைந்து உற்சாகமாக காணப்பட்பார். விமான நிலையத்தில் தன்னை வரவேற்க திரண்ட ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ரஜினிக்கு ஓய்வு தேவைப்படுவதால் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் தங்குவார் என கூறப்பட்டது. இதற்காக அந்த வீட்டில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் மராமத்து பணிகள் நடந்து வருகின்றன. அந்த வீடு வாஸ்துப்படி மாற்றி அமைக்கப்படுகிறது. எனவே கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு போய் விடுவார் என்றனர். ஆனால் ரஜினி பண்ணை வீட்டுக்கு போகவில்லை.போயஸ்கார்டன் வீட்டிலும் தங்கவில்லை. ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் மூத்த மகள் ஐஸ்வர்யா வீடு இருக்கிறது. கணவர் தனுஷ் மற்றும் குழந்தைகளுடன் அவர் அந்த வீட்டில் வசிக்கிறார். ரஜினி நேராக ஐஸ்வர்யா வீட்டுக்கு சென்றார். ரஜினி தங்குவதற்காக அவ்வீட்டின் அறைகள் பிரத்யேகமாக புதுப்பிக்கப்பட்டு உள்ளன. ரஜினி கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு போகத்தான் முதலில் விரும்பினாராம். உறவினர்களும் அதே மனநிலையில் இருந்தனர். ஆனால் பேரக்குழந்தைகள் யாத்ரா, லிங்காவை பார்க்க முடியாது என்பதற்காக பண்ணை வீட்டுக்கு போவதை ரத்து செய்து விட்டார். குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்வதற்காகவே ஐஸ்வர்யா வீட்டில் தங்கியுள்ளார். பேரக்குழந்தைகளுடன் விளையாடுவது ரஜினிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு புறம் “ராணா” படவேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
0 comments:
Post a Comment