இலங்கை பிரச்சனை, ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புவோம் என இந்திய கம்யூனியஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் :-
இலங்கையில் யுத்தம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்தும் அங்கு இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஏற்படவில்லை. இலங்கையில் யுத்தத்தின் போது நடைபெற்ற மனித மீறல்களின் இறுவட்டுக்களைப் பார்த்து பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளின் வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது.
ஆனால் இலங்கை பிரச்சினையில் சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் இந்தியா மௌனமாக உள்ளது. இலங்கை பிரச்சனை என்பது தமிழக மக்களின் பிரச்சினை மட்டுமல்லாது தேசிய அளவிலான பிரச்சினை ஆகும். இதனையும் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது கேள்வி எழுப்புவோம், என்றார்.
0 comments:
Post a Comment