இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு அமைதியான ஒரு தீர்வை எட்டும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் 2007ம் ஆண்டு தமிழ்நாடு சிவில் சமூக அமைப்பை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியதாக புதிய தகவல் கிளம்பியுள்ளது.
சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த இரகசிய விடயம் குறித்த செய்தியை சர்வதேச செய்தித் தளமொன்று வெளியிட்டுள்ளது.
எனினும் அவ்வாறானதொரு அமைதியான தீர்வுக்கு வருவதை இந்திய அரசாங்கம் எதிர்த்ததாக தமிழ்நாடு சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டாளராக செயற்பட்ட முன்னாள் நிர்வாக அதிகாரியும் சமூக ஆர்வளருமான எம்.ஜீ.தேவசகாயம் தெரிவித்துள்ளார்.
தான் ஏற்பாட்டாளராக செயற்பட்ட குறித்த சிவில் சமூகக் குழுவில் ஓய்வுபெற்ற சிவில் சேவையாளர்கள், சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் எனப்பலர் உள்ளடங்கியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சிவில் சமூகக் குழுவின் முதல் அமர்வு ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ஒருவர் தலைமையில் சென்னையில் 2007ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி இடம்பெற்றதாகவும் இனப்பிரச்சனைக்கான ஒரே தீர்வு அரசியல் தீர்வு என அக்கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் எம்.ஜீ.தேவசகாயம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விடயம் குறித்து 2007ம் ஆண்டு ஜூலை 17ம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளை தமது சிவில் சமூக அமைப்பு சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் காலங்கடந்து கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment