Sunday, Jul 17, 2011கல்யாணம் முடிந்த கையோடு ஆஸ்திரியாவுக்கு ஹனிமூன் கொண்டாட பறந்துவிட்டார்கள் கார்த்தியும் அவர் மனைவி ரஞ்சனியும். ஐரோப்பியாவில் உள்ள ஆஸ்திரியா அழகிய மலைகள், கண்கவர் ஏரிகள், அதிவேக நதிகள், அடர்ந்த காடுகளுக்குப் பெயர் பெற்றது. ஆபத்தில்லாத அழகிய நாடு.
கல்யாணம் முடிந்ததுமே இங்குதான் ஹனிமூன் செல்ல வேண்டும் எனக் கூறிவிட்டாராம் கார்த்தி. அடுத்த வாரம் வரை ஆஸ்திரியாவில் ஹனிமூன் கொண்டாடும் கார்த்தி தம்பதி, வரும் 20ம் தேதி சென்னை திரும்புகிறது. அதன் பிறகு நேராக சகுனி படப்பிடிப்பில் பங்கேற்கவிருக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தை இயக்குபவர் சங்கர் தயாள். ஏற்கெனவே கணிசமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
மனைவி வந்த நேரம், இந்தப் படம் பெரிய அளவுக்குப் பேசப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளார் கார்த்தி.
0 comments:
Post a Comment