சென்னை: சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.
இந்த வழக்குக்கு காரணமான புகாரைக் கொடுத்திருப்பவர் வல்லக்கோட்டை படத் தயாரிப்பாளர். இந்த வழக்கிலும் சக்சேனா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களான செல்வராஜ், சண்முகவேல், ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது கூட்டாளி அய்யப்பனை, போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
சில வழக்குளில் சக்சேனாவையும், அவரது கூட்டாளி ஐயப்பனையும், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
15ம் தேதி வெள்ளிக்கிழமை, சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ 50 லட்சம் மோசடி
சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராஜா, வல்லக்கோட்டை என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தின் வினியோகம் தொடர்பான விவகாரத்தில், 50 லட்சம் ரூபாயை சக்சேனா மோசடி செய்து விட்டதாக, ராஜா, விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில், சக்சேனா மற்றும் அவரது கூட்டாளி அய்யப்பன் ஆகியோரை கைது செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற மனுவை அரசு வக்கீல்கள் கோபிநாத், மேரி ஜெயந்தி ஆகியோர், சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர்.
அம்மனுவை ஏற்றுக்கொண்டு, வரும் 29ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி உத்தரவிட்டார்.Topics: hansraj saxena, வல்லக்கோட்டை, ஹன்ஸ்ராஜ் சக்சேனா, vallakkottai, மோசடி
0 comments:
Post a Comment