This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, July 17, 2011

மருதமுனையில் மூன்று சிறுவர்கள் விரிவுரையாளரால் பாலியல் துஸ்பிரயோகம்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படடுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான்பெரேரா தெரிவித்தார்.

கடந்த செம்பர் மாதம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களினால் உரிய அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டபோதிலும் அவை விசாரணை நடாத்தப்படாமல் மூடி மறைக்கப்பட்டதாகவும் இதனையடுத்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார்தெரிவித்தனர்.

குறித்த விரிவுரையாளர் சம்மந்தப்பட்ட சிறுவர்களள வீட்டிற்கு அழைத்து தமது கையடக்கத் தொலைபேசி மூலமும், கணினி மூலமும் ஆபாசபடங்களை காண்பித்ததுடன்சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர்கள் 14, மற்றும் 8 வயதை உடையவர்கள் எனவும் தொடர்ச்சியாக இச்சம்பவம் இடம்பெற்று வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது.

இது தொடர்பான முழு அளவிலான விசாரணைகள் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.என்.மென்டிஸ்சின் நேரடி மேற்பார்வையில் கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர்பெண்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் சம்மந்தப்பட்ட விரிவுரையாளரை சனிக்கிழமை (16.7.2011) திகதி கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கெனஅழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குற்றாலத்தில் 70வது பிறந்த நாள் கொண்டாடிய பாரதிராஜா

குற்றாலம்: இயக்குநர் பாரதிராஜா தனது 70-வது பிறந்த நாளை குற்றாலத்தில் கொண்டாடினார்.

குற்றாலம் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இலஞ்சியுள்ள தனியார் ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. இவ் விழாவில் இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது,

வாழ்க்கையில் மனிதன் கண்டிப்பாக சேவை செய்ய வேண்டும். வாழும் காலத்தில் தானம் கொடுத்து பழகிவிட்டால் அதை விட சுகமானது வேறொன்றும் இல்லை. அற்புதமான சுகம் தர்ம செயல்கள் செய்யும்போது கிடைக்கும். ஒரு ஊடகத்திற்கு இருக்கும் பொறுப்பை போல் பொது சேவையாற்றும் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளுக்கும் கடமை உள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். காவிரி, முல்லை பெரியாறு நீர்த்தேக்க பிரச்சனை, இனப்படுகொலை, இனஅழிப்பு, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பு நிகழ்வுக்கெல்லாம் பொது நல அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும்.

நாற்கலி கனவுகளில் இருந்து விலகி இருக்கும் சமூக சேவை இயக்குநர்கள் குரல் கொடுக்க தொடங்கினால் நாடெங்கும் அக்குரல் எதிரொலிக்கும். மொழி, இனம் என அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கிறோம். தாயை இழப்பதும், மொழியை இழப்பதும் ஒன்று தான். நாட்டில் போலியோவை ஒழி்த்த உங்கள் இயக்கம் லஞ்சம், ஊழலையும் ஒழிக்க பாடுபட வேண்டும்.

நாம் சம்பாதித்த பணத்தை மற்றவர்களுக்கு ஏன் லஞ்சமாகத் தர வேண்டும். லஞ்சம் வாங்கி பிழைப்பு நடத்துவதை விட கேவலமானது எதுமில்லை. மடங்களிலும், சாமியார் வீடுகளிலும், கோடி கோடியாய் பணம் கிடைக்கிறது. ஆனால் எந்த துறையாவது விசாரணை நடத்துகிறார்களா, எங்களை போல் உழைப்பவர்களிடம் தான் வருமான வரி சோதனை செய்கிறார்கள்.

ஜாதி, மதம் அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது சேவை அமைப்புகள் பொது மக்களின் பிரச்சனைகளுக்காகவும், களத்தில் இறங்கி குரல் கொடுக்க வேண்டும். மனிதன் இதயத்தை சுத்தமாக்கினால் அவனை அனைத்தும் தேடி வரும். ஒவ்வொருவரும் தன்னை பெற்ற தாயை மதிக்க கற்றுக் கொண்டால் சமுதாயத்தில் மரியாதை தானாகவே உயர்ந்து தலை நிமிர முடியும் என்றார்.

பின்னர் இரவு 9.30 மணி அளவில் ரோட்டரி பிரமுகர்களுடன் கேக் வெட்டி தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடினார். பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜ் பேசும்போது, ஒரு அரசால் மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்த முடியாது. ஆனால் இதுபோன்ற சங்கங்கள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது என்றார்.Topics: bharathiraja, பிறந்தநாள், குற்றாலம், courtallam, பாரதிராஜா

இலங்கையில் 3000எயிட்ஸ் நோயாளர் புதிதாக இனம் காணப்பட்டுள்ளனர் .!

இலங்கையில் 3000எயிட்ஸ் நோயாளர் புதிதாக இனம் காணப்பட்டுள்ளனர் .!தற்போது இலங்கையில்  புதிதாக மூவாயிரம் எயிட்ஸ் நோயாளர்கள்கண்டு பிடிக்க பட்டுள்ளனர் .இவர்களில் சிறார் ஆண் பெண்களும் அடங்குவதாக தெரிவிக்க பட்டுள்ளது .நாப்பதாயிரம்  பாலியால் பணியாளர்கள்   இலங்கையில்  உள்ளனர் .அதிகமானோர் வெளிநாடுகளிற்கு சென்று வந்தவர்களினாலேயே இந்த நோய் தோற்று அதிகரித்துகாணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது ..!இந்த எண்ணிக்கை மகிந்தா சிந்தையின் பின்னர் உருவாக்கம் பெற்றுள்ளது அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது ..!மகிந்தா ஆட்சியின் முன்னர் வீதிக்கு பிறந்த சிசுக்கள் அனாதையாகவும்  இறந்த நிலையிலும் கைவிட  படவில்லை என்பது இங்கே சுட்டி காட்டத்தக்கது  ..!

மார்பு புற்று நோயால் 1800பேர் பாதிப்பு ,..!

மார்பு புற்று நோயால் 1800பேர் பாதிப்பு ,..!இலங்கையில் வருடம் தோறும் ஆயிரத்து எண்ணூறு பேர் மார்பு புற்று நோயால் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகசுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது .இந்த எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்து செல்வதாக அவர்கள் சுட்டி காட்டியுள்ளனர் …இந்த நோய் தாக்கத்தினால் பலர்  பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது ..!

சானல்4க்கு எதிராக சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்

சானல்4க்கு எதிராக சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்

சானல் 4
கொலைக்களம் என்ற பெயரில் இலங்கையின் இறுதிப் போர் குறித்த விவரணப் படம் ஒன்றை தயாரித்து வெளியிட்ட, பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இங்கு லண்டனில் நடைபெற்றுள்ளது.

சானல்-4 நிறுவனத்தினால் காண்பிக்கப்பட்ட இலங்கையின் இறுதிப் போர் குறித்த விவரணப்படம், இலங்கையில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் என்று தாம் கருதுவதாகவும், அதனாலேயே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், அந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் சார்பில் பேசவல்லவராக தன்னைக் கூறிக்கொள்ளும் முஹமட் சஜிமுல்லா பிபிசிக்கு தெரிவித்தார்.

அந்தப் படத்தைப் பார்க்கும் இலங்கையின் இனங்கள், ஒன்று மற்றொன்றுக்கு எதிராக வன்செயலில் ஈடுபடலாம் என்று அவர் கூறினார்.

ஆகவே அத்தகைய வீடியோக்கள் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படக்கூடாது என்றும், வேண்டுமானால், அப்படியான போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளின் போது அவை காண்பிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

உண்ணாவிரதமிருந்த சிறைக்கைதி வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா சிறைச்சாலையில் நேற்றுடன் ஏழாவது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்ற நான்கு அரசியல் கைதிகளில் ஒருவருடைய உடல் நிலைமை மோசமடைந்துள்ளதையடுத்து, சிறைச்சாலை வைத்தியர்கள் அவரை வவுனியா பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

செட்டிகுளத்தைச் சேர்ந்த கட்டையர் லோகேஸ்வரன் என்ற 40 வயதுடைய அரசியல் கைதியே இவ்வாறு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் நால்வரும் தாங்கள் நிரபராதிகள் என்றும் தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதுடன், இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணைக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்து தடுத்து வைப்பது நிறுத்தப்பட வேண்டும் எனவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிரான விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதே உண்ணாவிரதம் இருப்பவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இவர்களில் ஒருவர் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நால்வருக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியாவில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 40 பேர் இந்த உண்ணாவிரதத்தில் இணைந்துள்ளார்கள்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இரண்டாவது தடவையாக சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளதுடன் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு உடனடியாகத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியிருக்கின்றனர்.

இதற்கிடையில், தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருகின்ற இந்தத் தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் பார்வையிட்டுள்ளார்.

உண்ணாவிரதம் இருப்பவர்களின் கோரிக்கை தொடர்பாகக் கவனம் செலுத்தப்படும் என்றும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் கைதிகளிடம் அவர் கேட்ட போதிலும், சிறைக்கைதிகள் தமது உண்ணாவிரதத்தை உடனடியாகக் கைவிடுவதற்கு மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சனல் 4க்கு முன்பு ஆர்ப்பாட்டம்

கொலைக்களம் என்ற பெயரில் இலங்கையின் இறுதிப் யுத்தம் குறித்த விவரணப் படம் ஒன்றை தயாரித்து வெளியிட்ட, பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று லண்டனில் நடைபெற்றுள்ளது.

சனல்-4 நிறுவனத்தினால் காண்பிக்கப்பட்ட இலங்கையின் இறுதி யுத்தம் குறித்த விவரணப்படம், இலங்கையில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் என்று தாம் கருதுவதாகவும், அதனாலேயே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், அந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் சார்பில் பேசவல்லவராக தன்னைக் கூறிக்கொள்ளும் முஹமட் சஜிமுல்லா தெரிவித்தார்.

அந்தப் படத்தைப் பார்க்கும் இலங்கையின் இனங்கள், ஒன்று மற்றொன்றுக்கு எதிராக வன்செயலில் ஈடுபடலாம் என்று அவர் கூறினார்.

ஆகவே அத்தகைய வீடியோக்கள் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படக்கூடாது என்றும், வேண்டுமானால், அப்படியான போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளின் போது அவை காண்பிக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பில் விபத்து ஒருவர் பலி, இருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் நேற்றிரவு 6.45மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மண்முனைக்கு செல்லும் ஒல்லிக்குளம் வீதியில் உள்ள சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் பண்டாரியாவெளியை சேர்ந்த கருணா (30வயது) என்ற குடும்பஸ்த்தரே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியில் வீடுகட்டும் பணியில் கூலித்தொழிலாளியாக வேலைசெய்துவிட்டு தனது முதலாளியின் மோட்டார் சைக்கிளை செலுத்திக்கொண்டு வீடு செல்லும்போது சந்திப்பகுதியில் வேகமாக சைக்கிளை திருப்ப முனைந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் கழுத்துப்பகுதி மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் நசியுண்ட நிலையில் அவ்விடத்தில் இருந்த பொதுமக்களால் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது வழியிலேயே அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேநேரம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த காத்தான்குடியை சேர்ந்த இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

122 இலங்கைச் சாரணர்கள் சுவீடன் பயணம்

சுவீடன் நாட்டில் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ம் திகதி நடைபெறவுள்ள 22வது உலக சாரணர் ஜம்போறியில் இலங்கையிலிருந்து 122 சாரணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை சாரணர் குழுவில் 05 சாரணர் தலைவர்கள், 10 குழுச் சாரணர் தலைவர்கள், 17 திரிசாரணர் தலைவர்கள், 90 சாரணர்கள் கலந்து கொள்ளவுள்ளதூக இலங்கை சாரணர் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவி ஆணையாளர் தெரிவித்தார்.

சாரணிய இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் பிறந்த தினமான ஓகஸ்ட் 10 ம் திகதி உலக சாரணர் தினமாக கொண்டாடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது

இலங்கை தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது

இலங்கை, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற ரோம் சாசனத்தில் கைச்சாத்திடாத நாடுகள் தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சாங் கியூன் சோங் கூறியுள்ளார்.

இலங்கை யுத்தத்தின் இறுதி நாட்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இலங்கை என்பன ரோம் சாசனத்தில் கைச்சாத்திட்டிருக்கவில்லையென்று தெரிவித்துள்ளார்.

ஆதலால் ஐ.நா. பாதுகாப்புச் சபையினால் நீதிமன்றத்திற்கு விடயத்தை பாரப்படுத்தாமல் சர்வதேச நீதிமன்றம் அந்த விடயம் தொடர்பாக செயற்பட முடியாது என்று அவர் தெரிவித்ததாக த அவுஸ்திரேலியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அதேசமயம் தேசிய சட்ட முறைகளுக்கு மேலான முறையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இயங்குவதாக அவர் கூறியுள்ளார்.

குற்ற நீதிக்கான தேசிய முறைமைகளை தனது நீதிமன்றம் கொண்டிருப்பதாகக் கூறியுள்ள சோங், ஆனால், சில விமர்சகர்கள் குறிப்பாக அமெரிக்கா, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தேசிய இறைமைக்கு அச்சுறுத்தலென வர்ணித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவ்வாறான அச்சுறுத்தல் இருந்தால் 116 நாடுகளில் அந்த அச்சுறுத்தல்கள் சிறியளவிலான தாக்கத்தையே கொண்டிருக்குமென்று அவர் தெரிவித்துள்ளார்.

கொள்கை ரீதியின் பிரகாரம் இந்த நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அதிகாரத்தை அளித்துள்ளன. தமது ஆயுதப் படைகளின் செயற்பாடு தொடர்பாக தீர்ப்பை வழங்குவதற்கு அவை அங்கீகாரமளித்திருக்கின்றன.

நீதிமன்றத்தின் பங்களிப்புத் தொடர்பாக தவறான புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தேசிய இறைமை பற்றிய சகல கவலைகளும் காணப்படுவதாக சோங் கூறியுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இறுதியாக தஞ்சமடையும் இடமாக உள்ளது. போர்க் குற்றங்களுக்கான சிறப்பு விடுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை அதன் சட்ட பரிமாணம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கின்றது. அத்துடன், இதேபோன்ற பாரதூரமான குற்றச்செயல்களும் சிறியளவிலேயே உள்ளன என்று அவர் கூறுகிறார்.

ரோம் சாசனத்தை அங்கீகரித்துள்ள நாடுகளின் விடயங்களையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கையாள முடியும். அதேவேளை, தேசிய சட்ட முறைமைகள் செயற்பட முடியாத தன்மையைக் கொண்டிருந்தால் அல்லது விருப்பமின்றியிருந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் நடவடிக்கையெடுக்க முடியும்.

இறைமையுள்ள நாடுகளின் தேசிய எல்லைகளுக்கப்பால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது எந்தவொரு சூழ்நிலையிலும் மேலாகச் சென்றுவிட மாட்டாது, செல்ல முடியாது,செல்லக்கூடாது. அத்துடன், இறைமையுள்ள நாடொன்றின் சட்ட முறைமையின் வழமையான செயற்பாட்டை பாதிக்கும் விதத்தில் செயற்பட முடியாது என்று சோங் கூறியுள்ளார்.

தேசிய சட்ட முறைமையின் நடவடிக்கைக்கு வெளிப்புறமாகவே அடிப்படையில் நாங்கள் இருந்து வருகிறோம். விருப்பமில்லாத தன்மை அல்லது இயலாத தன்மை ஏற்படும்வரை காத்திருக்கின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.

சிட்னியில் கடந்த வாரம் இடம்பெற்ற பொதுநலவாய சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு தென்கொரியாவின் முன்னாள் ஜுரரும் கொரிய இராணுவத்தின் முன்னாள் நீதிபதி, சட்டத்தரணியுமான சோங், த அவுஸ்திரேலியன் பத்திரிகையுடன் உரையாடியுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் பொதுநலவாய அமைப்பிற்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை இரு அமைப்புகளும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அங்கீகாரமளித்துள்ளன.

2002 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது. நான்கு வருடங்களில் 66 நாடுகள் அங்கீகரித்திருந்தன. மேலும், பல நாடுகள் விரைவில் இணைந்துகொள்ளவுள்ளன. இந்த விடயத்தில் நாங்கள் முன்னேற்றமடைந்து வருகிறோம்.

துனீசியா இந்த சாசனத்தில் கடைசியாக கைச்சாத்திட்டுள்ளது. அரபுலகில் கைச்சாத்திடப்பட்ட முதலாவது நாடாக துனீசியா உள்ளது. எகிப்தும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தைச் சாராத தரப்பினரால் மேற்கொள்ளப்படும் சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளை கையாளுவதற்கு நீதிமன்றத்திற்கு முடியாத தன்மை காணப்படுகிறது. அதனால் அந்த விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் கைவிடப்பட்ட விடயங்களில் ஒன்றாகும்.

மற்றொரு கைவிடப்பட்ட விடயமாக இருப்பது இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஆவணப்படுத்தப்பட்ட விடயமாகும். இந்த விடயங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டப் பரிமாணத்திற்கு அப்பாற்பட்டவையாக உள்ளன.

இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றம் போன்ற விடயங்களை இந்த நீதிமன்றம் கையாளுகிறது. பயங்கரவாதத்தையும் இதில் இணைத்துக்கொள்ள முயற்சி காணப்பட்டது. ஆனால், இன்றுவரை அந்த விடயத்தில் வெற்றிபெற்றிருக்கவில்லை என்று சோங் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினை நீதிமன்றத்தை எட்டுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? என்று கேட்கப்பட்டபோது, அவர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த விடயம் அரச தரப்புகளை சார்ந்த விடயம் என்றும் நீதிமன்றம் சம்பந்தப்பட்டதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தப்படாமல் இலங்கை விடயம் குறித்து குற்றவியல் நீதிமன்றத்தால் செயற்பட முடியாதென்று அவர் தெரிவித்திருக்கிறார்.

உலகின் மூலைகளில் குறிப்பிட்ட கொடூரங்கள் நடக்கும்போது அவை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தலாமென சகலரும் நினைப்பதாகத் தோன்றுகிறது. நாங்கள் நீதிமன்றம் தொடர்பாக அதிகரித்துவரும் அங்கீகாரத்தையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம். மறுபுறத்தில் ரோம் சாசனத்தில் விசேடப்படுத்தப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைவாகவே நாங்கள் செயற்பட வேண்டியுள்ளது.

ஆதலால் இலங்கை, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற சாசனத்தில் கைச்சாத்திடாத நாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தால் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

கிழக்கில் ஆயுதங்களை ஒப்படைக்க 30ம் திகதி வரை காலக்கெடு

கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் அவற்றிடமுள்ள ஆயுதங்களை விரைவாக ஒப்படைக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு மூலம் பொலிஸ் நிலையங்கள் ஊடாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில், கொள்ளை நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக சில குழுக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் சில குழுக்கள் சில அரசியல் கட்சிகளுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுவருகின்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் இந்த அறிவிப்பை செய்துவருகின்றனர்.

ஆயுதங்கள் வைத்திருப்போர் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தங்களது பகுதிகளில் இருக்கும் விசேட அதிரடிப்படை முகாம் மற்றும் இராணுவ முகாம்களில் ஆயுதங்களை கையளிக்கலாம் என பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆயுதங்களை வைத்திருப்போர் அதனை நேரடியாக கொண்டுவந்து ஒப்படைக்க முடியாதவிடத்து அதனை ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு அறிவித்தால் அந்த ஆயுதங்களும் மீட்க்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறு ஆயுதங்கள் கையளிக்கப்படாதவிடத்து அவை பற்றிய தகவல்கள் கிடைத்து மீட்க்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையை உயர்த்த கோரிக்கை

வவுனியா சிறைச்சாலையில் நேற்றுடன் ஏழாவது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்ற நான்கு அரசியல் கைதிகளில் ஒருவருடைய உடல் நிலைமை மோசமடைந்துள்ளதையடுத்து, சிறைச்சாலை வைத்தியர்கள் அவரை வவுனியா பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

செட்டிகுளத்தைச் சேர்ந்த கட்டையர் லோகேஸ்வரன் என்ற 40 வயதுடைய அரசியல் கைதியே இவ்வாறு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் நால்வரும் தாங்கள் நிரபராதிகள் என்றும் தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதுடன், இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணைக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்து தடுத்து வைப்பது நிறுத்தப்பட வேண்டும் எனவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிரான விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதே உண்ணாவிரதம் இருப்பவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இவர்களில் ஒருவர் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நால்வருக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியாவில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 40 பேர் இந்த உண்ணாவிரதத்தில் இணைந்துள்ளார்கள்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இரண்டாவது தடவையாக சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளதுடன் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு உடனடியாகத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியிருக்கின்றனர்.

இதற்கிடையில், தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருகின்ற இந்தத் தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் பார்வையிட்டுள்ளார்.

உண்ணாவிரதம் இருப்பவர்களின் கோரிக்கை தொடர்பாகக் கவனம் செலுத்தப்படும் என்றும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் கைதிகளிடம் அவர் கேட்ட போதிலும், சிறைக்கைதிகள் தமது உண்ணாவிரதத்தை உடனடியாகக் கைவிடுவதற்கு மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லண்டன் டூடிங் அம்மன்கோயிலில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நிகழ்வு -

லண்டன் டூடிங் அம்மன்கோயிலில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நிகழ்வு -  எதிர்வரும் செப்டம்பர் மாதம் டூடிங் அம்மன் கோயிலில் காலைஎட்டு மணியில் இருந்து இரவு எட்டு மணிவரை ஒருநாள் அடையாளஉண்ணாவிரதம் இருக்க ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளன . தியாக தீபத்தின் நினைவு நாளில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது .இங்கு நடை  பெரும் உண்ணாவிரத்ததில் நீங்களும் பங்கெடுக்க விரும்பின் இன்றேஎம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் . எம் தேச புதல்வர்களை நினைவு கூறுவதுடன் நாமும் அந்த நிகழ்வில் பங்கெடுத்து கொள்வோம் . குறிந்த நாளில் மாவீர்கள் மற்றும் தியாக தீப்தம் தொடர்பான கவிதைகள் .பாட்டுக்கள் .பேச்சுக்கள் நிகழ்த்த விரும்புவர்கள்உங்களது படைப்புக்களை அனுப்பி விபத்துடன் நீங்களும் நேரே வந்து உங்களை படைப்புக்களை நிகழ்த்த முடியும் .  தொடர்புகளிற்கு  -நிமலன் -07877204123வன்னிமைந்தன் .07404118674  newsethiri@hotmail.com ethiri@hotmail.co.uk ……

பாணந்துறையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

பாணந்துறை திக்கல்ல பகுதியில் 3 கிராம் மற்றும் 280 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பாணந்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவரை நாளைய தினம் பானந்துறை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு பாணந்துறை பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்வெட்டி துறைமுகத்திற்கான பணிகள் ஆரம்பம்

மஹிந்த சிந்தனை கொள்கையை அடிப்படையாக கொண்டு அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மக்களுக்கான நீர் வழங்கல் செயற்திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வினால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், உட்பட பல முக்கிய பிரமுகர்களும் பல பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது வல்வெட்டி துறைமுகத்திற்கான ஆரம்ப பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

மண்டைதீவு மக்களுக்கு குடிநீர்

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் மண்டைதீவு மக்களுக்கான குடிநீர் விநியோகத்திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பல வருடங்களாக மண்டைதீவு மக்கள் குடிநீருக்காக பெரிதும் சிரமப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கன்னடப் படத்தில் நடிப்பதற்காக காத்திருக்கும் சமீரா ரெட்டி

இந்தி, தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துள்ள சமீரா ரெட்டி கன்னடப் படங்களில் நடிப்பதற்காக காத்திருக்கிறாராம்.

பாலிவுட் நடிகையாக இருந்து வந்த சமீரா ரெட்டி இப்போது தென்னிந்திய நடிகையாகவும் மாறி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது மனக்கிடக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அது கன்னடப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சிறு வயதில் கன்னடப் படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். அவை எனக்குப் பிடிக்கும். ஆனால் நான் நடிகையாகி இத்தனை காலமாகி விட்டது, ஆனால் என்னைத் தேடி ஒரு கன்னடப் படமும் வரவில்லை என்பது வியப்பாக உள்ளது.

அத்தனை மொழிப் படங்களிலும் என்னைக் கேட்கிறார்கள். கன்னடத்தில்தான் யாரும் இன்னும் அணுகவில்லை. நான் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். சரியான வாய்ப்பு வந்தால் மகிழ்ச்சியோடு நடிப்பேன் என்றார் சமீரா.Topics: sameera reddy, kannda movie, சமீரா ரெட்டி கன்னடப் படங்கள்

எங்களுக்கு வாக்கு போடுங்கோ கிளிநொச்சியில் ஜேவிபி.பிச்சை ..!

எங்களுக்கு வாக்கு போடுங்கோ கிளிநொச்சியில் ஜேவிபி.பிச்சை ..! கிளிநொச்சியில் ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரவன்சஅவரது சக பாடிகளுடன் சென்று எதிர் வரும் தேர்தலில் தமக்குவாக்கு அளிக்கும் படி மக்களை வீடு வீடாக சென்றும் கடைகள்  தோறும் ஏறி வேண்டினர் . தமிழினம் அழியும் போது வேடிக்கை பார்த்து தமிழரை அழித்த  படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்களுடன்கூட்டு வைத்து பிழைப்பு நடத்தி வந்த கட்சிகள் தற்போது தமிழர்களிடம் மடி பிச்சை கேட்டு  அவர்களை காப்போம் என வேற்று கோஷமிட்டு வருவதுஇன்று இலங்கையில் நடக்கும் விநோதங்களில்  ஒன்றாகி போனது .  தமிழர்கள் வாழ தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமபைப்பை பலப்படுத்தி அதன் வாயிலாக தமிழரின்உரிமைகளை வென்றெடுக்க பாடு பட வேண்டும் அதற்காக இந்த தேர்தலில் மீளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெறும் பட்சத்திலேயே தமிழினம் தனக்கான அங்கீகாரத்தினை உலக மட்டத்தில் பெற்று கொள்ள முடியும் என்பது இன்றைய நோக்கு ..!#gallery-1 {margin: auto;}#gallery-1 .gallery-item {float: left;margin-top: 10px;text-align: center;width: 33%;}#gallery-1 img {border: 2px solid #cfcfcf;}#gallery-1 .gallery-caption {margin-left: 0;}2k3k
4k3k1k
4k

  

இந்தியாவில் உள்ள ஈழதமிழ் அகதிகள் இலங்கை திரும்ப விருப்பம் UNHCR-தெரிவிப்பு ..!

இந்தியாவில் உள்ள ஈழதமிழ் அகதிகள் இலங்கை திரும்ப விருப்பம் UNHCR-தெரிவிப்பு ..! இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள்இரண்டு லட்சத்து எண்பதாயிரம்தமிழர்கள் இந்தியா சென்றனர் . இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு புலிகள் ஆயுத .அரசியல் மவுனப்பிற்கு   பின்னர் சிங்கள இனவாத  அரசுதமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்த பின்னர் தற்போது அங்கு சென்று தமது சொந்த மண்ணில் வாழ இந்த  ஏதிலிகள்ஆர்வம் கொண்டுள்ளனர் என சர்வதேச UNHCRதொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது .

சற்றே கலைந்தது இந்தியாவின் மௌனம்

இலங்கை மீதான யுத்தகுற்ற விவகாரத்தில், இந்தியா முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளது. இறுதி யுத்தத்தின் போது அங்கு நடந்த மனித உரிமை மீறல் புகார்களை விரிவாக ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில், இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக ஐ.நா. சபை நியமித்த நிபுணர் குழு குற்றம் சாட்டியுள்ளது. இலங்கைத் தலைவரை யுத்த குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது.

அவர் மீது உலகம் முழுக்க யுத்தகுற்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இது தொடர்பான 50 நிமிட வீடியோவை சேனல் 4-ம், இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடேவும் வெளியிட்டன. ஆனால் இந்த பிரச்சனையில், இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த இந்தியா, நேற்று தனது மௌனத்தை கலைத்தது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறுகையில், இலங்கையில் பல்வேறு வம்சாவளியினர் வசித்து வருகிறார்கள். அவர்களில் 20 சதவீதம் பேர் தமிழ் பேசுபவர்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவின் இதர பகுதிகளிலும் நண்பர்களும், உறவினர்களும் உள்ளனர்.

எனவே, அவர்களின் நலனில் இந்தியாவுக்கு அக்கறை உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு சட்டரீதியான மனக்குறைகள் உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

அந்த அடிப்படையில், தாம் இலங்கையின் சம அந்தஸ்து பெற்ற குடிமக்கள்தான் என்றும், தாம் கௌரவமாகவும், சுயமரியாதையுடனும் வாழ முடியும் என்றும் இலங்கை தமிழர்கள் எண்ணும் அளவுக்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதுதான், இப்பிரச்சினையில் இந்தியாவின் பார்வை.

இந்தியாவை பொறுத்தவரை, யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை அரசின் கருத்துகளை பல்வேறு தருணங்களில் கேட்டுள்ளது. கடந்த மே மாதம், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி டெல்லிக்கு வந்தபோதும், கடந்த மாதம் கொழும்பு நகரில் நடைபெற்ற சந்திப்பின் போதும் கேட்டுள்ளோம்.

இந்த குற்றச்சாட்டுகள் பற்றி இலங்கை அரசு விரிவான முறையில் ஆய்வு செய்வது அவசியம். மனித உரிமை மீறல் தொடர்பாக எழுப்பப்படும் கவலைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்.

இலங்கை தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும். யுத்தம் முடிந்ததால் கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழர்களை மறுகுடியேற்றம் செய்யும் பணிகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம் என்றார்.

எலிக் காய்ச்சலால் 56 பேர் மரணம்

இவ்வருடத்தில் எலிக் காய்ச்சல் காரணமாக 56 பேர் இதுவரையில் உயிரழந்துள்ளதுடன் 4464 பேர் இந்த காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவற்றுள் அதிகமாக கம்பஹா மாவட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குருநாகலை மாவட்டத்திலேயே அதிகமாக 1346 பேருக்கு இந்த காய்ச்சல் பரவி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இந்த காய்ச்சல் காரணமாக முறையே நால்வர் உயிரிழந்துள்ளனர்.

தேர்தல்களுக்கான சகல பணிகளும் பூர்த்தி

எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்கான சகல பணிகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

65 உள்ளுராட்சி சபை தேர்தல்களில் ஐந்தாயிரத்து 688 வேட்பாளர்கள் போட்டியிடும் அதேவேளை 875 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இந்த தேர்தலில் பங்குகொள்ள 26 இலட்சத்து 30 ஆயிரத்து 975 வாக்காளர்கள் வாக்களிக்கும் தகமைகளைக் கொண்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள் 20ம் 72 சுயேச்சைக் குழுக்களும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்வதற்காக இரண்டாயிரத்து 226 வாக்குச் சாவடிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சியில் தேர்தல் நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் தேர்தல்கள் செயலகம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வாக்களிப்பவர்களுக்காக வாக்காளர் அட்டை விநியோகம் நேற்றுடன் நிறைவு வடைந்துள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றுவரையில் 80 சதவீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் எம்.கே.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

வாக்காளர் அட்டைகளை இதுவரையில் பெற்றுக்கொள்ள் தவறியவர்கள் தமது பிரதேச அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபுதேவாவை தொடர்ந்து பிருத்விராஜ் !

Sunday, Jul 17, 2011சமீபத்தில் பிரபுதேவா, ரம்லத் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது இதனால் சந்தோசத்ததில் இருந்த பிரபுதேவா  குருவாயூர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது இவரை தொடர்ந்து.

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ். இவர் தமிழில் மொழி, சத்தம் போடாதே, ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கும், டெலிவிஷன் நிருபர் சுப்ரீயாவுக்கும் திருமணம் நடந்தது.
 
இதையொட்டி நேற்று காலை அவர் தனது மனைவியுடன் குருவாயூர் சென்றார். 7 மணி அளவில் குருவாயூரப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.   பின்னர், தனது எடைக்கு எடையாக வெண்ணை துலாபாரம் செய்தார். அதற்காக 95 கிலோ வெண்ணைக்கு கோவில் அலுவலகத்தில் ரூ.19,005 செலுத்தினார்.
 
பூஜை மற்றும் வழிபாடு முடிந்தவுடன் கோவில் உதவி மேலாளர் நந்தகுமார் நடிகர் பிருத்விராஜ், அவரது மனைவி சுப்ரீயாவுக்கு பிரசாதம் வழங்கினார்.

சீமான் என்னுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் உள்ளன-விஜயலட்சுமி

இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் மீது புகார் கூறியுள்ள நடிகை விஜயலட்சுமி, தன்னுடன் சீமான் குடும்பம் நடத்தியது தொடர்பாக 700 ஆதாரங்களை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் சீமானுக்கு கேக் ஊட்டுவது போல காட்சிகள் உள்ளன.

3 வருடமாக தன்னைக் காதலித்து விட்டு இப்போது திருமணம் செய்ய சீமான் மறுப்பதாக விஜயலட்சுமி புகார் கூறியுள்ளார். இது காலப்போக்கில் அப்படியே மறைந்து போய் விட்டது. இந்தநிலையில் திடீரென சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கொடுத்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

அவர் என்னுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. மதுரையில் அவருடன் நான் 15 நாட்கள் குடும்பம் நடத்தியுள்ளேன். 3 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்து விட்டு என்னைத் தூக்கிப் போட்டு விட்டார் சீமான் என்று கூறியுள்ளார் விஜயலட்சுமி.

சீமானுடன் இருப்பது தொடர்பாக விஜயலட்சுமி வெளியிட்டுள்ள படங்களால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Topics: விஜயலட்சுமி, சீமான், நாம் தமிழர் கட்சி, naam tamilar party, seeman, vijayalakshmi

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மட்டும் வேண்டாம்-வித்யா பாலன் கண்டிஷன்

மறைந்த கவர்ச்சிக் கன்னி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் சில்க் வேடத்தில் நடித்து வரும் வித்யா பாலன், எந்த வகையான காஸ்ட்யூமும் தனகக்கு ஓ.கேதான் என்று கூறியுள்ளாராம் - ஒரே ஒரு நிபந்தனையுடன்.

அந்த நிபந்தனை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மட்டும் கூடவே கூடாது என்பதாம். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் படமாக்கி வருகிறார்கள். இதில் சில்க் வேடத்தில் நடித்து வருகிறார் வித்யா பாலன்.இதற்காக கவர்ச்சிகரமான டிரஸ்களிலும் இவர் படத்தில் காட்சி தருகிறார்.

தற்போது ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறதாம். படத்தில் வித்யாவை கவர்ச்சிகரமாக காட்டும் பொறுப்பை அவரது காஸ்ட்யூம் டிசைனர் நிஹாரிகா கான் ஏற்றுள்ளார். அவரிடம் என்ன மாதிரியான காஸ்ட்யூமைக் கொடுத்தாலும் பரவாயில்லை, எனக்கு ஓ.கே.தான். ஆனால் ஸ்லீவ்லெஸ் மட்டும் வேண்டாம் என்று கூறியுள்ளாராம் வித்யா.

ஏன் ஸ்லீவ்லெஸ் வேண்டாமாம்? ஸ்லீவ்ஸெல் போட்டால் தனது தோள்பட்டைகளும், அக்குளும, பட்டவர்த்தனமாக தெரியும். அதை தான் விரும்புவதில்லை என்கிறார் வித்யா பாலன்.

சில்க்குக்கு இணையாக இதுவரை யாரையும் திரையுலகம் கண்டதில்லை. அந்த இடத்தை வித்யா பாலன் நிரப்புவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.Topics: silk smitha, vidya balan, sleevless tops, வித்யா பாலன், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், சில்க் ஸ்மிதா

டெங்கு தொற்றை கட்டுப்படுத்த பாரிய சுத்திகரிப்பு

டெங்கு தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் ஒரு பாரிய சுத்திகரிப்பு நடவடிக்கைகள் கொழும்பு நகரினுள் விரைவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னர் மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்பு நடவடிக்கைகள் அதிகளவிலான பலனை தரவில்லை என கொழும்பு மாநகர சபையில் பிரதம மருத்துவ அதிகாரியின் காரியாலயம் தெரிவித்துள்ளது.

டெங்கு தொற்று காரணமாக மரணமானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகர எல்லைக்குட்டபட்ட பிரதேசங்களில் இருந்து 25 முதல் 30 வரையிலான நோயாளர்கள் நாளாந்தம் சிகிச்சைப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 சதவீத்திற்கும் மேற்பட்ட டெங்கு தொற்றுக்கள் பெரும்பாலும் கொழும்பு வடக்கு பிரதேசத்திலேயே பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் மருத்துவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பம்பலப்பிட்டி கருவாக்காடு மற்றும் கொம்பனி தெரு போன்ற பிரதேசங்களில் இருந்து மிகக்குறைவான டெங்கு தொற்றுக்குள்ளானவர்களே இனங்காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைதிகள் தொடர்பில் துரித விசாரணைக்கு சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கோரிக்கை

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்தோடு வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டம் குறித்து சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டீ சில்வா சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.

நான்கு பேர் வவுனியா சிறைச்சாலையில் மேற்கொண்டுள்ள இப்போராட்டத்தில் மேலும் 30 பேர் நேற்று இணைந்து கொண்டுள்ளதாகவும் அறியப்படுத்தியுள்ளார்.

வாக்களிக்க இராணுவ அடையாள அட்டை

வடக்கில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை மீண்டும் பயன்படுத்தி வாக்களிப்பில் கலந்துகொள்ள அனுமதி வழங்குவது தொடர்பாகத் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடவுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராய்ச்சி இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

வடக்கில் தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று ஜே.வி.பியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளன. இது தொடர்பாக அரசும் தேர்தல் ஆணையாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்ற வகையில் தேர்தல் அமைதியாக இடம்பெறவேண்டும் என்பதே எமது விருப்பம். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அரசோ, எதிர்க்கட்சிகளோ மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தேர்தல்மீது வடக்கு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்யக்கூடாது.

யுத்தம் முடிவடைந்து ஒருசில வருடங்களுக்குள்ளேயே தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் சுதந்திரமும் வடக்கு மக்களுக்கு இருக்கவேண்டும். இந்த சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதிக்கும் வகையில் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அமையக்கூடாது.

கிளிநொச்சியில் தொடர்ந்தும் மீள்குடியமர்வு இடம்பெறுகின்றது. அது இன்னும் முடிவடையவில்லை. இவர்களில் தேசிய அடையாள அட்டைகள் இல்லாத பலரும் உள்ளனர். அவர்கள் தற்காலிக அடையாள அட்டைகளைப் பயன்படுத்தலாம். தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் நடவடிக்கை இந்த மாதம் 13 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளதால் அதிகம் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த மக்களுக்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை இந்த மக்கள் ஒருதடவை வாக்களிப்புக்குப் பயன்படுத்தினர்.தேசிய அடையாளஅட்டை இல்லாதவர்கள் இந்த இராணுவ அடையாள அட்டைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்குவது தொடர்பாக நாம் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்தாலோசிக்கவுள்ளோம் என்றார்.