எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்கான சகல பணிகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
65 உள்ளுராட்சி சபை தேர்தல்களில் ஐந்தாயிரத்து 688 வேட்பாளர்கள் போட்டியிடும் அதேவேளை 875 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்த தேர்தலில் பங்குகொள்ள 26 இலட்சத்து 30 ஆயிரத்து 975 வாக்காளர்கள் வாக்களிக்கும் தகமைகளைக் கொண்டுள்ளனர்.
அரசியல் கட்சிகள் 20ம் 72 சுயேச்சைக் குழுக்களும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்வதற்காக இரண்டாயிரத்து 226 வாக்குச் சாவடிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சியில் தேர்தல் நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் தேர்தல்கள் செயலகம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வாக்களிப்பவர்களுக்காக வாக்காளர் அட்டை விநியோகம் நேற்றுடன் நிறைவு வடைந்துள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றுவரையில் 80 சதவீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் எம்.கே.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
வாக்காளர் அட்டைகளை இதுவரையில் பெற்றுக்கொள்ள் தவறியவர்கள் தமது பிரதேச அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment