Sunday, July 17, 2011

சனல் 4க்கு முன்பு ஆர்ப்பாட்டம்

கொலைக்களம் என்ற பெயரில் இலங்கையின் இறுதிப் யுத்தம் குறித்த விவரணப் படம் ஒன்றை தயாரித்து வெளியிட்ட, பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று லண்டனில் நடைபெற்றுள்ளது.

சனல்-4 நிறுவனத்தினால் காண்பிக்கப்பட்ட இலங்கையின் இறுதி யுத்தம் குறித்த விவரணப்படம், இலங்கையில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் என்று தாம் கருதுவதாகவும், அதனாலேயே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், அந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் சார்பில் பேசவல்லவராக தன்னைக் கூறிக்கொள்ளும் முஹமட் சஜிமுல்லா தெரிவித்தார்.

அந்தப் படத்தைப் பார்க்கும் இலங்கையின் இனங்கள், ஒன்று மற்றொன்றுக்கு எதிராக வன்செயலில் ஈடுபடலாம் என்று அவர் கூறினார்.

ஆகவே அத்தகைய வீடியோக்கள் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படக்கூடாது என்றும், வேண்டுமானால், அப்படியான போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளின் போது அவை காண்பிக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment