Wednesday, July 13, 2011

இலங்கைக்கு எரிபொருட்களை அனுப்பக்கூடாது - டி.ராஜேந்தர்

இலங்கைக்கு இந்தியாவிலிருந்து பெற்றோல், டீசல், எரிவாயு பொருட்களை மத்திய அரசு அனுப்பக்கூடாது என லட்சிய தி.மு.க. நிறுவனத்தலைவர் டி.ராஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பெற்றோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும். அப்போது தான் ஈழத்தமிழர்களின் கண்ணீருக்கு விடை கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசு, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் மத்திய அரசு அதை என்ன செய்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 comments:

Post a Comment