Wednesday, July 13, 2011

“சயீப்அலிகானை பிரியவில்லை” திருமணம் முடிவானதும் அறிவிப்போம்-கரீனாகபூர்

Thursday, Jul 14, 2011பிரபல இந்தி நட்சத்திரங்கள் சயீப்அலிகான், கரீனாகபூர் இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். பொது நிகழ்ச்சிகளில் கைகோர்த்தபடி கலந்து கொள்கிறார்கள்.
 
கரீனாகபூர் ஏற்கனவே ஜாகித்கபூரை காதலித்தார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்.
 
“தஷன்” என்ற படத்தில் சயீப்அலிகானும், கரீனாகபூரும் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதற்கிடையே இருவாரங்களுக்கு முன்பு கரீனா-சயீப் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் காதலை முறித்துக்கொண்டு தனித்தனியாக பிரிந்து விட்டதாகவும் கிசுகிசுக்கள் பரவின.
 
மும்பையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கரீனாகபூரிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் நாங்கள் பிரிந்து விட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. அது வதந்திதான். எங்கள் இருவருக்கும் திருமணம் பற்றி முடிவானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றார்.

0 comments:

Post a Comment