குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை எமக்கு தெளிவாக தாருங்கள் நாங்கள் உடன் சந்தேக நபர்களைக் கைது செய்கின்றோம் என யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவின் பத்மதேவ தெரிவித்துள்ளார்.
யாழ்.உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமார் தலமையில் விஷேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், யாழில் தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மற்றும் முறைப்பாடுகள் நிறையக் கிடைக்கப்பெற்றுள்ளன இது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலின் போது யாழ். உதவித்தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கலந்து கொண்டு கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
இந்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகள், ஈபிடிபி கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சுயேட்சைக்குழு பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.




0 comments:
Post a Comment