Wednesday, July 13, 2011

மும்பைத் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

மும்பையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கோழைத் தனமான தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனத்தையும் பாதிப்புக்கு உள்ளாகிய மக்களுக்கும் அரசுக்கு தனது இரங்கலையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தீவிரவாதத்தினை சகித்து கொண்டிருக்க கூடாது அத்தோடு அதன் கோழைத்தனமான அருவெறுப்பான செயற்பாடுகள் பெறுகுவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும் இந்த தாக்குதலை தான் கடுமையாக கண்டிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் இந்திய மக்களுக்கு ஆதரவாக நின்று பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கூட்டாக இணைந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் உறவுகளை இழந்தவர்களுக்காகவும் பாதிப்புற்றவர்களுக்காகவும் நம் பிரார்த்தனை செய்திடுவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment