Monday, Jul 11, 2011அமலா பால்தான் இன்றைய ஹீரோக்களின் சாய்ஸ் எனும் அளவுக்கு முன்னணி நடிகர்கள் அவரையே நாடுகின்றனர்.
மிஷ்கின் இயக்கும் முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க அமலா பாலிடம் பேச்சு நடப்பதாகத் தெரிகிறது.
சூப்பர் ஹீரோ சப்ஜெக்டான முகமூடியில் ஜீவாவுக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார் நரேன். இந்த இருவரையும் பேலன்ஸ் செய்யும் அளவுக்கு வலுவான பாத்திரம் என்பதாலும், மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பதால் கிடைக்கும் இமேஜையும் நினைத்துப் பார்த்தவர், கால்ஷீட்டுகளை அட்ஜஸ்ட் செய்து தர சம்மதித்துள்ளாராம்.
ஆனாலும் சம்பளம் உள்ளிட்ட பிற விஷயங்களை விக்ரமுடன் நடித்துள்ள தெய்வத் திருமகள் படம் வந்தபிறகு பேசிக் கொள்ளலாம் என்கிறாராம் அமலா. காரணம், அந்தப் படம் நன்றாக ஓடினால் சில லட்சங்களை தாராளமாகக் கூட்டலாம் அல்லவா... அதான்!
நல்ல டெக்னிக்தான்!
0 comments:
Post a Comment