Monday, July 11, 2011

ஜூன் மாதம் இலங்கை மின்சார சபைக்கு 20 மில்லியன் ரூபா வருமானம்

ஜூன் மாதம் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் இலங்கை மின்சார சபைக்கு 19,787,155.14, ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அபராதங்களில் இருந்து 3,705,000 ரூபா இலங்கை மின்சார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பாவனையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளால் பல மில்லியன் நட்டம் மின்வலு, எரிசக்தி அமைச்சு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையை இலாபமீட்டும் ஒரு நிறுவனமாக மாற்றுவதற்கு சிறப்பு குழுவொன்றை அமைத்து அதன் மூலம் மின்சார சபைக்கு ஏற்படும் நட்டத்ததை தவிர்ப்பதற்காக மின்வலு, எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகினறமை குறிப்பிடத்தக்கது.

முறைகேடாக வாசிப்பு மானியில் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 228 வழக்குகளும் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றமை தொடர்பில் 350 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

0 comments:

Post a Comment