Monday, Jul 18, 2011சினிமாத் துறையில் அஷ்டவதானியான டி.ராஜேந்தர் 'வீராசாமி' படத்திற்குப் பிறகு ‘ஒரு தலைக் காதல்’ என்ற படத்தை எடுத்து வருகிறார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ‘ஒரு தலை ராகம்’ போல, இப்படமும் அபார வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறார் டி.ஆர்.
இப்படம் குறித்து அவர் கூறியதாவது:
‘ஒரு தலை ராகம்’ வந்து முப்பது வருஷம் ஆகிடுச்சு. இப்போ மறுபடியும் "ஒரு தலை காதல்’. காதல் சினிமாக்களில் என்னைப் பார்த்த ரசிகன், அப்படியே மீண்டும் என்னை அண்ணாந்து பார்ப்பான். நான்தான் ஹீரோ. இதே தாடிதான். வட இந்திய பொண்ணு ஹீரோயின்.
பெரிய நடிகர், நடிகைகள் பட்டாளமே நடிக்குது. இப்போ இருக்குற எல்லா திறமையான இயக்குனர்களுக்கும் இந்த டி.ஆர். சவால் விடுறான். நீங்கள் இதுவரை பார்க்காத, யோசிக்காத படம் இது.
ஒரு தலைக் காதலில் முரட்டுத்தனமா இசையை காதலிச்சு வாழ்ற கேரக்டர். இதுவரைக்கும் 108 பாட்டுக்கு டியூன் போட்டு, எட்டு பாட்டு மட்டுமே படத்தில் வெச்சிருக்கேன். குத்துப்பாட்டை நான்தான் தூக்கிக் கொண்டு வந்தேன். இப்ப குத்து பாட்டு பச்ச தண்ணி குடிப்பது மாதிரி ஆகிவிட்டது. இதுலயும் ஒரு பாட்டை அப்படி வச்சிருக்கேன். எல்லாம் அதிரப் போகுது பாருங்க’’ என்றார்
0 comments:
Post a Comment