Monday, Jul 18, 2011சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும் ‘ராணா’ படவேலைகளில் பங்கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். அக்டோபரில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகிவிடும். இப்படம் 2012-ல் வெளிவர இருக்கிறது.
இப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல தெலுங்குப் பட இயக்குனரான பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் அண்மையில் நடித்து வெளியாகியுள்ள படம் ‘புட்டா ஹோகா தேரா பாப்’. இப்படத்தினை தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகந்நாத் முதன் முதலாக ஹிந்தியில் இயக்கினார்.
இப்படம் அங்கே பரபரப்பாக ஓடியதால், இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறாராம். அப்படி தமிழில் ரீமேக் செய்யும் போது, அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க முயற்சிக்கிறாராம் பூரி ஜெகந்நாத். இதற்காக இவர் விரைவில் ரஜினிகாந்தை சந்திக்க இருக்கிறாராம். இது அத்தனையும் சரியாக அமைந்தால் ரஜினிகாந்தின் அடுத்த படம் பூரி ஜெகந்நாத்துடையதாகத்தான் இருக்கும் என்று கோலிவுட் கிசுகிசுக்கிறது.
0 comments:
Post a Comment