Monday, July 18, 2011

ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்

வடக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடுவதற்கும், தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொள்வதற்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு சற்றுமுன்பு யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார்.

இவ்விஜயத்தின் போது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் பலவற்றை அவர் அஙகுரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய், கோப்பாய், நெல்லியடி பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணிக் கூட்டங்களில் கலந்துகொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

20 ஆம் திகதி பரந்தன் வைத்தியசாலையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ள ஜனாதிபதி, அன்றைய தினம் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கிளிநொச்சி சந்தை கட்டடத் தொகுதி ஆகியவற்றுக்கான அடிக்கல்லையும் நாட்டவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் மக்கள் பேரணிக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

0 comments:

Post a Comment